இந்திய ரிசர்வ் வங்கியில் 161 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 161 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 161

விளம்பர எண்: 5A /2016-17

பணி: Officers in Grade ‘B’

சம்பளம்: மாதம் ரூ.35,150 – 62,400

தகுதி:

60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம், நிதியியல், புள்ளியியல், கணித புள்ளியியல், கணித பொருளாதாரம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரு நிலை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மற்றும் டெபிட், கிரிடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2017

மேலும்  https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DEPRD030520179C40C723B6CE4AF187FF9AC709A025BE.PDF என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *