தானாக ஆட்சி கலையும் தமிழக அரசு – அடுத்தடுத்த அரசியல் பரபரப்பு

தானாக ஆட்சியை கலையும் தமிழக அரசு –

சமீபத்தில் ஓ.பி.எஸ் பிரதமரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த போது எங்களால் தமிழக அரசு ஆட்சிக்கு பங்கம் வராது. எடப்பாடி தலைமையிலான ஆட்சியை நாங்கள்  கலைக்க காரணமாக இருக்க மாட்டோம் என்று அறிக்கை கொடுத்திருந்தார்.

சரியா அதற்கு அடுத்த நாள் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தெரியாம் ரகசிய ஆலோசனை நடத்திய எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எழுத்து பூர்வமாக கோரிக்கை வைத்து உள்ளனர்.

முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்படுமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டவெண்டும் என முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.என தகவல் வெளியாகி உள்ளது. கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்த தீடீர் எம்.எல்.ஏ.கள் எல்லோரும் நாங்கள் கோரிக்கை வைப்போம் ஏற்கிறார்களா என்று பார்ப்போம். கோரிக்கையை  ஏற்க்கவில்லை என்றால் எடப்பாடியும் வேண்டாம், ஓ.பி.எஸ்ம் வேண்டாம் என்று நாங்கள் தனி அணியாக செயல்பட ஆரம்பித்து விடுவோம் என்கிறார்கள். ஆக… தமிழக அரசு தானாக கலைவதற்கான அத்தனை நிகழ்வுகளும் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *