angusam 20/02/2018

சரிகிறதா ?   பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் !

பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தின் கீழ் சென்னை, திருச்சி , கோவை, பெரம்பலூர், திருப்பூர், சமயபுரம், உள்ளிட்ட இடங்களில் கலை அறிவியல் கல்லூரி, மருத்துவகல்லூரி, கர்நாடக மாநிலத்தில் பிஜாப்பூர் சக்கரை ஆலை , தனலெட்சுமி சிட்பண்ட்ஸ், மிகப்பெரிய தொழில் அதிபர்கள் குழுமமாக வளர்ந்து நிற்கிறது.

.

தனலெட்சுமி சீனிவாசனுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மூத்தமகள் ஜெயந்தியை தனலெட்சுமியின் உடன் பிறந்த தம்பியான நீல்ராஜ்  திருமணம் செய்திருக்கிறார். இரண்டாவது மகளான ஆனந்தியை கோட்டாத்தூரை சேர்ந்த ராஜபூபதி என்பவர் திருமணம் செய்திருக்கிறார். மூன்றாவது மகளான சுகந்தியை தனலெட்சுமியின் உடன் பிறந்த மற்றொரு தம்பி மணி திருமணம் செய்திருக்கிறார். கடைசியாக பிறந்த கதிரவன் மதுரையை சேர்ந்த பிரபல மருத்துவ குடும்பத்தை ஆனந்தலெட்சுமி என்பரை திருமணம் செய்திருக்கிறார்.

 

தனலெட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவராக சீனிவாசனும், துணைத்தலைவராக அவரது மகன் கதிரவனும் செயலாளராக அவரது மூத்த மருமகன் நீல்ராஜ் என்பவரும் இயக்குநர்களாக மற்ற இரு மருமகன்களான ராஜபூபதி, மணி ஆகியோர் நியமித்திருந்தனர்

அதிகார பொறுப்பை சீனிவாசன் மகன் கதிரவனே பெரும்பாலான நிறுவனங்களை கைப்பற்றியதால் சொத்துகளை பிரிக்கும் பிரச்சனையில் குடும்பத்துக்குள் பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் நிர்வாகம் செய்யும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களான சம்பளமே கொடுக்காமல் இழுத்ததுக்கொண்டே இருந்தால் ஊழியர்கள் பல வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

 

இந்த நிலையில் தான் அவர்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சிதான் பிரிந்து இருந்த அனைவரையும் திரும்பவும் இணைத்தது. இந்த நிலையில் தான் தீடீர் என இந்தக் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது மற்றும் வரி ஏய்ப்பு புகார் காரணமாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான 31 இடங்களில் 15.02.2017 முதல் சோதனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், துறையூர் சாலை அருகே நடுவலூரில் உள்ள கல்லூரித் தாளாளர் சீனிவாசனின் வீடு மற்றும் அவரின் மருமகன்கள் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்விக் குழுமத்தின் கீழ் நடத்தப்படும் சிட் பண்ட் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. தஞ்சாவூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

இதேபோல் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சீனிவாசனின் மகன் கதிரவனுக்கு சொந்தமான வீடு, சமயபுரம் அருகில் உள்ள பொறியியல் கல்லூரி, உறையூர் சாலை ரோட்டில் உள்ள சிட்பண்ட்ஸ் மற்றும் உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த இடங்களைச் சுற்றிலும் கல்விக் குழும ஆதரவாளர்கள் நின்றுக்கொண்டு, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது செய்தி சேகரிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

தொடர்ந்து கதிரவன் அவரது மனைவி அனந்தலெட்சுமி ஆகியோரிடம் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு சிறு கல்வி நிறுவனமாக இருந்த சீனிவாசன் நிறுவனம் கடந்த 16 வருடங்களில் பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், கலைக்கல்லூரி என 16க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என கல்விக் குழுமமாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*