jefferywinneke

jefferywinneke 24/08/2016

திருவெறும்பூர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  திருச்சி பெண் இன்ஜினியருக்கு போதை மாத்திரை கொடுத்து சிறைவைத்ததாக, காதலனான சென்னை இன்ஜினியர் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீட்கப்பட்ட பெண் மேஜர் என்பதால் காதலனுடன் அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.திருச்சி திருவெறும்பூர் அடுத்த வின்நகரை சேர்ந்தவர் வேலாயுதம். ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மகள் கற்பகம், சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அதே […]

jefferywinneke 19/08/2016

சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து எண்ணூர் நோக்கி ஒரு அரசு பேருந்து புதன்கிழமை சென்றது. அந்த பேருந்து, தண்டையார்பேட்டை அருகே செல்லும்போது, மோட்டார் சைக்கிள் ஒன்று முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அந்த பேருந்துக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் வேகமாக செல்வதில் போட்டி ஏற்பட்டதாம். இதற்கிடையே அந்த பேருந்து தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் அருகே செல்லும்போது, மோட்டார் சைக்கிளை சாலையில் […]

jefferywinneke 19/08/2016

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் “அம்மா’ குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கூடுதல் விலை கொடுத்து தனியார் குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலையில் விற்கப்படுவதாலும், போலிகள், முத்திரையில்லாத பாட்டில்கள் விற்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் வெளியிடங்களில் ரூ. 20-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் பேருந்து நிலையங்களில் ரூ.25-க்கு விற்கப்பட்டதால் ஏழைப் பயணிகள் தண்ணீர் குடிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். […]

jefferywinneke 19/08/2016

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24–ந்தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை ராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. […]

jefferywinneke 19/08/2016

திருச்சி விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ 986 கிராம் தங்க நகைகளும், சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற 16.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளும் ரூபாய் நோட்டுகளும் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணிக்கு திருச்சி வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு (டிஆர்ஐ) […]

jefferywinneke 19/08/2016

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பல்கலைக்கழக இணைவு பெற்ற 8 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் பங்கேற்ற செஸ் போட்டி புதன்கிழமை தொடங்கியது. 49 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரியின் எம். குணால் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் தொடர்ந்து 4 வது ஆண்டாக […]

jefferywinneke 19/08/2016

திருச்சியில் திரைப்பட நடிகரை பெண் ஒருவர் கடத்தி வைத்திருப்பதாக அவரது பெற்றோர் போலீஸில் வியாழக்கிழமை புகாரளித்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன், ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவின் விவரம். என்னுடைய மகன் மலைமான் (24). கோலாகலம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மலைமான் திடீரென மாயமானார். அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களிலும் அவரைத் […]

jefferywinneke 19/08/2016

மணப்பாறையில் பேருந்துக்கு காத்திருந்தபோது மர்ம நபர்கள் வேனில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அவர் கடத்தப்பட்டாரா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சி, கீழஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஜமுனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினசரி பக்கத்து ஊரான காவல்காரன்பட்டிக்கு சென்று, அங்கிருந்து கல்லூரிப் பேருந்தில் சென்றுவந்தார். இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை […]

jefferywinneke 19/08/2016

வளரிளம் பெண்கள் பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்று கலெக்டர் பழனிசாமி கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை, மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பு, மருத்துவ ஆராய்ச்சி குழு, இந்திய மகப்பேறு மருத்துவர்கள் குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி இதனை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாதவிடாய் பிரச்சினை வளர்கின்ற […]

jefferywinneke 18/08/2016

திருச்சியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாணவர்கள் மீது வழக்குப்பதிவு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருபவர் காளீஸ்வரன் (வயது24). இவர் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். காளீஸ்வரன் சம்பவத்தன்று சட்டக்கல்லூரி முன்பு அவரது அமைப்பு தொடர்பாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சத்யபிரியாவை அமைப்பில் சேர […]

jefferywinneke 18/08/2016

பார்ச்டு படத்தில் ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் நிர்வாணமாக நடித்திருந்த காட்சியொன்று கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அக்காட்சியில் நடித்த ஹுசைன் கோபமடைந்துள்ளார். டோனி, ரத்த சரித்திரம், ஆல் இன் ஆல் அழகுராஜா என முன்னதாக பல தமிழ் படங்களில் நடித்திருந்த போதும், ரஜினி ஜோடியாக கபாலியில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுள்ளார் ராதிகா ஆப்தே. இந்நிலையில், ராதிகா ஆப்தே பெண் இயக்குநர் லீனா […]

jefferywinneke 18/08/2016

‘கபாலி’ படத்திற்கு முதன் முதலில் பெருமை சேர்த்த ஒன்றாக இருந்தது அந்தப் படத்தின் டீசர்தான். அந்த டீசரில் இடம் பிடித்த ‘நெருப்புடா…’ பாடல் ரசிகர்களிடம் உடனே பற்றிக் கொண்டது. ரஜினிக்காகவே எழுதப்பட்டது போன்ற அந்த வார்த்தை அவருடைய நடைக்கும், பார்வைக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருந்ததாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதுவரை ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த எத்தனையோ விதமான ஹீரோயிசப் பாடல்களில் ‘நெருப்புடா…’ ஒரு தனி ரகமாக அமைந்தது.சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய […]

jefferywinneke 18/08/2016

கபாலி வெற்றியை தொடர்ந்து ,ஷங்கர் இயக்கத்தில் ரஜினி  நடிக்கும் அடுத்த படமான 2.ஓ வின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம். இந்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் ஷங்கர் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடிப்பில் ரூ 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘2.ஓ’. படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த ஷெட்யூல் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்ற ரஜினி, சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். […]

jefferywinneke 18/08/2016

திருச்சியில் செயல்பட்டு வரும் Heavy Alloy Penetrator ஆலையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 41 பிட்டர், மின்சாரப், டர்னர், கிளர்க், மேற்பார்வையாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. SSK-Turner – 03 2. SSK-Machinist – 07 3. SSK-Electrician – 05 4. SSK-Electroplater – 03 5. SSK-Carpenter – […]

jefferywinneke 18/08/2016

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு காலிறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆட்டத்தின் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்த நிலையில், தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். ஆரம்ப சுற்றுகளில் […]