jefferywinneke

jefferywinneke 18/08/2016

திருச்சியில் மகனை பார்த்துவிட்டு சென்று மாயமான பெண்ணை கும்பகோணம் அருகே கொலை செய்து, புதைத்ததாக போலீஸார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அசூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி தமிழ்செல்வி (58). இவர்களது மகன் அன்புராஜ் (32). திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். பரமசிவம் இறந்து விட்டதால் தமிழ்செல்வி வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். பின்னர் சென்னையில் தங்கியிருந்து வீடுகளில் வேலை பார்த்து வந்தார். […]

jefferywinneke 16/08/2016

நாமக்கல் நகரில் உள்ள எரிவாயு தகன மேடையில் பிணம் எரிக்கும் பணியில் கூலிப்பட்டியைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரிப் பெண்ணான ஜெயந்தி ஈடுபட்டுள்ளார்.  இவருக்கு தமிழக அரசு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை அளித்து கெளரவப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜெயந்தி கூறியது:  நாமக்கல் அருகே கூலிப்பட்டிதான் எனது சொந்த ஊர். தந்தை பட்டுகுருக்கள் கூலிப்பட்டி முருகன் கோயில் அர்ச்சகராக பணிபுரிந்தார். கூலிப்பட்டியில் உள்ள தனியார், நாமக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்விப் பயின்றேன். தொடர்ந்து நாமக்கல் […]

jefferywinneke 16/08/2016

திருச்சியில்  60 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   திருச்சி பழைய பால் பண்ணை விஷ்வாஸ் நகரில் ஓய்வு பெற்ற பெல் நிறுவன அதிகாரி சேகர் வசித்து வருகிறார். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு  வீடு திரும்பிய சேகர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது 60 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் […]

jefferywinneke 16/08/2016

நியூயார்க்:மறைந்த கர்நாடக இசைக் கலைஞர், எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், ஐ.நா., சபையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது.எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாள் விழா, அவர், 1966ல், ஐ.நா., சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியதன், 50வது ஆண்டு விழா, இந்திய சுதந்திர தினத்தின், 70வது ஆண்டு விழா ஆகிய மூன்றும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., சபையில், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னையைச் சேர்ந்த, பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் […]

jefferywinneke 16/08/2016

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள், இயற்கை காட்சிகள் கொண்ட ஒவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் திருச்சியை சேர்ந்த ஷைன் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் புறநகர் பேருந்துகள் நிற்கும் பகுதிகளில் உள்ள சுவர்களில் சிறுநீர் கழிப்பது, குப்பைகளை வீசி செல்வது, சுவரொட்டிகளை ஒட்டுவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மத்திய பேருந்து நிலைய […]

jefferywinneke 16/08/2016

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்ச (30) மீது அண்மையில் தொடுக்கப்பட்ட பண மோசடி வழக்கில், அவரை அந்நாட்டு நிதி மோசடி குற்றப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். நமலின் சட்ட நிறுவனம் தொடர்புடைய நிதி விவகாரங்களுக்காக போலீஸார் கைது செய்துள்ளதாக, அவரது வழக்குரைஞர் பிரேமானந்த தோலெவட்டா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் ஹம்பண்டோடா மாவட்ட எம்.பி.யான நமல் ராஜபட்சவை கைது செய்த போலீஸார், கொழும்பு நகர மாஜிஸ்திரேட் […]

jefferywinneke 16/08/2016

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி விட்டது என்று சுதந்திர தின விழா உரையின் போது கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்தார். மேகதாது அணை காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி திறந்து விடாததால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத் தில் புதிதாக அணை ஒன்றை கட்ட கர்நாடகம் முயற்சி செய்து […]

jefferywinneke 16/08/2016

திருச்சி விமான நிலைய வளாகத்தில் 100 அடி உயரத்தில் மிகப் பெரிய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நாடு முழுவதும் 19 விமான நிலையங்கள் உள்ளிட்ட 90 முக்கிய இடங்களில் மிக உயரமான இரும்பாலான கொடிக் கம்பத்தில் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் 106 அடி உயரத்தில் (ஹைமாஸ்) கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை காலை இந்தியாவின் 70-வது […]

jefferywinneke 16/08/2016

அடுத்தமாதம் திருச்சி – சார்ஜா இடையே நேரடி விமான சேவை தொடங்கும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுதந்திரதின விழா திங்கள்கிழமை  கொண்டாடப்பட்டது. தேசிய கொடியினை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஏற்றி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளார்களிடம் குணசேகரன் தெரிவித்ததாவது: திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கும். விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் […]

jefferywinneke 16/08/2016

திருச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலெக்டர் கொடி ஏற்றினார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். வண்ண பலூன்கள், வெண் புறாக்களையும பறக்க […]

jefferywinneke 16/08/2016

 திருச்சி ஜங்ஷன் எ.புதூர் பகுதியில் உள்ள ரயில்வே யார்டில் ரயில் பெட்டிகள் மராமத்து பணி மற்றும் தினமும் செல்லும் பயணிகள் ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படும். இதில் திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு இயக்கப்பட்ட டெமு ரயில் பெட்டியில் ஒரு சிலவற்றை மேம்படுத்துவதற்கு சென்னை அனுப்புவதற்காக யார்டில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.  அதில் 2 பெட்டியில் மர்ம ஆசாமிகள், ஸ்பிரே பெயின்ட்டில் (அழிக்க முடியாதபடி) ஆங்கில வார்த்தையினால் எழுதி உள்ளனர்.  இதுபோல் எழுதியது யார் என […]

jefferywinneke 16/08/2016

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம் தேதி தூயவளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம், ஈக்விடாஸ் நுண்கடன் நிறுவனம்,விஷன் இந்தியா, வேலி மென்பொருள் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாமை நடத்துகின்றன. முகாமில் 1500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.இளநிலை,முதுநிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளில் தேர்ச்சி […]

jefferywinneke 14/08/2016

தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார். இவர் இரண்டு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் நா.முத்துக்குமார். நாட்டின் உயரிய தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில், 9 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அதிலும் தொடர்ந்து இரண்டு முறை […]

jefferywinneke 13/08/2016

திருச்சியில் தனியார் பள்ளியில் மாணவர்களை முழங்கால் போட்டு நடக்க வைத்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. முழங்கால் போட்டு… திருச்சி காஜாநகரில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5–ந்தேதி ஒரு மாணவன் பந்தை வைத்து விளையாடியதற்காக 70 மாணவர்களை முழங்கால் போட்டு நடக்க வைத்து பள்ளி ஆசிரியை கொடுமைப்படுத்தியதாகவும், இதில் மாணவர்கள் பலர் காயமடைந்ததாகவும், மாணவர்களின் பெற்றோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தியிடம் புகார் தெரிவித்தனர். மேலும் பள்ளியில் […]

jefferywinneke 13/08/2016

திருவொற்றியூர்: ஒரு சிறுமிக்கு திருமணம் நடத்திய உறவினர்களே, அப்பெண்ணை வீட்டில் அடைத்து அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்ததால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கும், எண்ணூர் காவல்நிலையத்துக்கும் அலைக்கழிக்கின்றனர் என தாய் கண்ணீர் வடித்தப்படியே கூறுகிறார். எண்ணூர், பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவி (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (42). இவர்கள் பொம்மை விற்பனை செய்து வருகின்றனர். இத்தம்பதிக்கு கீதா (19), கவிதா […]