samaraiqi4273

samaraiqi4273 07/10/2016

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சராசரி விகிதாசாரத்தில் திருநங்கைகள் என்ற மூன்றாம் பாலினம் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கி முடங்கி கிடந்த காலம் கடந்து தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை திருநங்கைகள் நிரூபித்து வருகின்றனர். இந்த வளர்ச்சி தான் புதிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுவே […]

samaraiqi4273 05/01/2016

இந்திய நாட்டின் தனி ஒருவன் என்ற பெருமைக்குரிய முதல் குடிமகன் இன்றுவரை நாம் யாரும் அவர் இறந்துவிட்டதாக கூட நினைத்து பார்க்க முடியவில்லை. காரணம் இன்னும் அவர் குடியரசு தலைவராக இருப்பது போன்ற உணர்வு, இன்னும் அவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார் என்ற உணர்வு இன்னும் நமக்குள் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. எத்தனையோ தலைவர்கள் மறைந்தாலும் இவர் தலைவர் என்ற முன்னுரிமையை பெறுவதைவிட இவர் ஒரு வழிகாட்டி என்பது தான் இங்கு பலருடைய […]

samaraiqi4273 25/12/2015

தமிழக்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் இன்றும் அந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளம் ஏழை, பணக்காரன் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்தி ஒரு வேளை உணவிற்காக அனைவரையும் கையேந்த விட்டுவிட்டது. இதையும் நாம் ஏற்றுகொண்டு அதனை சமாளிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இப்படி பாதிக்கப்பட்டு கிடந்த மக்களுக்கு இரவு பகல் பாராமல் பல தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், நல்ல […]

samaraiqi4273 24/12/2015

திருச்சி ஸ்ரீரங்கம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பெருமாள் தான் ஸ்ரீரங்கத்தை புண்ணியஸ்தலமாக மாற்றிய பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிகை அதிகரித்து கொண்டே செல்வதை நாம் காண முடியும். அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் பணம் செலுத்தி தரிசிக்க வரும் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு மட்டும் பெருமாள் பல உடைகள், ஆபரணங்கள் என்று பல வடிவங்களில் அருகில் வந்து அருள் பாலித்து […]

samaraiqi4273 23/12/2015

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் நகர பகுதியில் குறிபிட்ட உயரத்தை விட அதிகமான உயரங்களில் கட்டிடங்கள் கட்ட கூடாது என்று என்பதை மாநகராட்சி நிர்வாகத்தினர் வரையரை செய்து வைத்துள்ளனர். இந்த சட்டத்தை மீறி கட்டுவதும் பல தொழிலதிபர்களின் வழக்கமாக தான் உள்ளது. இதற்க்கு மாநகராட்சி அதிகாரிகள் கணிசமான தொகையை பெற்று கொண்டு காட்டு இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிடுவார்கள். இது ஒருபுறம் இருக்க திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த 2009 ஆம் ஆண்டு கட்ட […]

samaraiqi4273 18/12/2015

திருச்சிக்கு என்று பல ஆச்சரியமான விஷயங்களும், பல வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. ஆனால் அதற்க்கு நேர்மாறான நிகழ்வுகளும் நடைபெறுவது பலருடைய கண்களுக்கு தெரிந்தும் அதனை கண்டுகொள்ளாமல் போகும் அதிகாரம் படைத்தவர்களும், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவு. கடந்த சில மாதங்களாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒருசில முக்கிய இடங்களில் முகாமிடும் திருநங்கைகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் கையாளும் வித்தைகள் பல பயணிகளை அதிர்ச்சியடைய […]

samaraiqi4273 16/12/2015

தமிழகத்தை புரட்டிபோட்ட கனமழையானது தன்னுடைய கோபத்தையும், கோர முகத்தையும் கடலூர்,சென்னை,உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்காக காட்டியதால் பல லட்சம் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அதில் பலர் இறந்தும், காணாமலும் போனார்கள் பலர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மறைந்தும் போனார்கள். இப்படிபட்ட நேரத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் மக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளையும், பொருள் உதவிகளையும் இரவு பகல் பாராமல் வழங்கினார்கள். அதனை சரியான நேரத்தில் பல தொண்டு நிறுவனங்கள் […]

samaraiqi4273 14/12/2015

வெள்ள நிவாரணத்தில் ஆளுங்கட்சி விமானத்தில் சுற்றி படம் காட்டியதோடு, தமிழக அரசு சரியான திட்டமிடுதலை செய்ய தவறிவிட்டது என தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வார காலமாக பெய்த கனமழையால் சென்னை, கடலூர், நாகை, பாண்டிசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் தமிழ்நாடு ஜவ்ஹித் ஜாமத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 35ஆயிரம் பேர் மீட்டு பணியில் ஈடுபட்டனர். இதற்காக திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஜவ்ஹித் […]

samaraiqi4273 12/12/2015

திருச்சியில் அகில இந்திய கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கி அதன் கொடி அறிமுகம் இன்று திருச்சி மீடியா கிளப்பில் நடைபெற்றது. திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.இருதயசாமி என்பவர் கிறிஸ்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற நோக்கத்திற்காக புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எம்பிசி பட்டியலில் சேர்த்திடுவோம் என வாக்குறுதி […]

samaraiqi4273 11/12/2015

திருச்சி உங்களுடன் கூட்டமைப்பு சார்பாக கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிவாரண பயண நிகழ்ச்சியினை மாநகர போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் மாத்தூர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை-கடலூர் மாவட்ட மக்களுக்கு திருச்சி மக்கள் மனிதாபிமானத்துடனும், சாதி மதம்  கடந்து செயலாற்ற நினைத்தனர். அந்த […]

samaraiqi4273 08/12/2015

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாலான மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் சென்னை பாதிப்படைந்தது. லட்ச கணக்கான மக்கள் உதவுவற்க்கு மனிதர்கள் இல்லாமல் தங்களை தாங்கனே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய நாட்டின் பிரதமர் மோடி தமிழகத்திற்க்கு வருகை தந்து சென்னையை மட்டும் சுமார் 40 நிமிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்தார். அவருடன் தமிழக முதல்வரும் சுற்றி பார்த்த […]

samaraiqi4273 04/12/2015

நாமக்கல் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் பொறியாளர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(35), பொறியாளர். இவருடைய மனைவி கற்பகம்(28). இவர்களுடைய 1 வயது குழந்தை ஸ்ரீவிசா. செந்தில்நாதனின் தாய் கீதா(52), நண்பர் சுரேஷ்(35). இவர்கள் 5 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிடச்சென்றனர். பின்னர் அவர்கள் வியாழக்கிழமநை இரவு காரில் ஊர் திரும்பினர். காரை செந்தில்நாதன் ஓட்டி வந்தார். […]

samaraiqi4273 04/12/2015

சென்னை மணப்பாக்கத்தில் மியாட் தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 100 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வந்தது. சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக மணப்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மியாட் மருத்துவமனைக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஜெனரேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்துக்கான வெண்டிலேட்டர் கருவிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு யாரும் […]

samaraiqi4273 04/12/2015

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளை இசையமைப்பாளர் இளையராஜா படகில் சென்று சந்தித்து உணவு அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் தங்களுடைய வீடுகளை இழந்து சாலையோரங்களிலும்,  சமுதாய கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் சிலர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

samaraiqi4273 04/12/2015

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் கடலூர், சென்னை, பாண்டிசேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சென்னை மட்டும் தான் பாதிக்கப்பட்டதாக ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் காட்டியதே தவிர அளவுக்கு அதிகமான பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது என்பதை காட்ட மறந்து விட்டது. சென்னை மட்டுமே சுற்றி பார்த்த தமிழக முதல்வர் கடலூரை மறந்துவிட்டார். சென்னையில் எல்லா வசதிகளும் இருப்பதால் மீட்;பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தின் நிலை கேள்வி […]