samaraiqi4273

samaraiqi4273 03/12/2015

திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமாரிக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்; இந்த ரயில் காட்பாடி, ஈரோடு, கோவை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக குமரி செல்லும். * அரக்கோணத்தில் இருந்து மதுரைக்கு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும்; இந்த ரயில் காட்பாடி, விழுப்புரம், திருச்சி வழியாக மதுரைக்கு செல்லும். * திருவள்ளூரில் இருந்து ஹைதராபாத்துக்கு இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும், ரேணிகுண்டா, கூடூர், வாரங்கல், காசிபேட் வழியாக ஹைதராபாத்தை அடைகிறது. * […]

samaraiqi4273 02/12/2015

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மீட்புப் பணிக்கு படகு சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அதிலும், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வீட்டிற்குள்ளும் நீர் புகுந்துள்ளது. அதனால் வீட்டிற்குள் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் […]

samaraiqi4273 02/12/2015

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள “ஆயுள் தண்டனை” என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த மூவருடன் இதேவழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 7 […]

samaraiqi4273 30/11/2015

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், பவுலர்களில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகள் எடுத்தார். இதற்கு முன்பு அவர் தரவரிசைப் பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்தார். ஆனால் 3-வது டெஸ்டுக்குப் பிறகு அவர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் உள்ளார். ஜடேஜாவுக்கு 11-ம் இடம் கிடைத்துள்ளது. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முரளி விஜய் 12-ம் இடத்தில் உள்ளார். […]

samaraiqi4273 30/11/2015

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீரப்பன் மனைவி […]

samaraiqi4273 30/11/2015

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, வறுமை, நாட்டின் பாதுகாப்பு, தனி நபர் வருமானம் என்று எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அவற்றை பற்றி பேச நேரம் ஒதுக்காமல் தற்போது நாட்டில் சகிப்புதன்மை இருக்கா இல்லையா என்ற பட்டிமன்ற தேவையா? என்று பல இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற லோக்சபா பட்டிமன்றத்தை பார்ப்போம் நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையின்மை குறித்து விவாதிக்க வேண்டும் என இடது சாரி உள்ளிட்ட எதிர்கட்சியினர் […]

samaraiqi4273 29/11/2015

கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் மாதவிடாய் காலத்தில் வரும் பெண்களை தெரிந்து கொண்டு தடுக்க ஒரு இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளார்களாம்.இதனைக் கண்டித்து பல படித்த பெண்கள் ” happy to bleed ” வாசகத்தைத் தாங்கி போராடி வருவது ஆச்சரியம் அளிக்கிறது. முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இப்போராட்டம் குறித்து அறச்சீற்றத்துடன் பல புகைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில் மாதந்தோறும் உடலியல் மாற்றம் மட்டுமே.இதனை வைத்து பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக் […]

samaraiqi4273 29/11/2015

இந்தியாவில் இறக்குமதியாகும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அதிவேகம் கொண்ட வாகனங்களாக சந்தைக்கு வருவதால் இன்றை இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் வெளிநாடுகளில் மட்டும் ஓட்ட தகுதியுடைய இந்த பைக்குகள் தமிழகத்தில் பெரும்பாலான தெருக்களிலும், சாலைகளிலும் தற்போது காண முடியும், தரமான சாலைகள் உள்ள வெளிநாடுகளில் ஓட்டவேண்டிய பைக்குகளை சாலையே இல்லாத நம்ம ஊரில் ஓட்டி பல உயிர்கள் பலியாகியுள்ளது. இதுக்குறித்த விழிப்புணர்வு முதலில் பெற்றோர்களுக்கு இல்லை தன்னுடைய பிள்ளைகள் […]

samaraiqi4273 28/11/2015

திருச்சி மாவட்டம் தேவராயனேரி நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (22). இவர் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து 4 நாட்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் இன்று காலை அவர் மூளை சாவு அடைந்ததால் அவர்களுடை உறவினர்களுக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக தருவதாக உறவினர்கள் கொடுத்த உறுதிமொழியின் பேரில் சரவணனின் […]

samaraiqi4273 27/11/2015

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடி காவ்லதுறையினருக்கு மாற்றப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர்  சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சைலேஷ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக தனியாக […]

samaraiqi4273 26/11/2015

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி என்கின்ற ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணனுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதில் அவர் தனது ஒரு கையை இழந்துள்ளார். ராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட இந்த நிலை காரணமாக அவரின் உடன்பிறந்த 4 பேர் அவரை வேலைக்கு அனுப்பாமல் தங்களது வீட்டிலேயே வைத்து பார்த்துக்கொண்டனர். இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு திடீர் ரத்த கொதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் […]

samaraiqi4273 25/11/2015

தமிழகத்திலேயே அதிகளவில் நகர பேருந்துகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது திருச்சியில் மட்டும் தான். தற்போது  இங்குள்ள தனியார் பேருந்துகள் தினமும் அரசு பேருந்துகளை விட அதிகளவில் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தனியார் பேருந்து முதலாளிகளின் கட்டளையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இதில் முக்கிய பங்கு காவல்துறைக்கும் உண்டு காரணம் ஒவ்வொரு முதலாளிகளும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பதால் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து காவல்துறை தவறி விடுகின்றன. அதிலும் நகரத்திற்க்குள் பேருந்து குறைவான வேகத்தில் செல்ல […]

samaraiqi4273 25/11/2015

சிறு­மிகள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தையும் தடுக்க அவர்­க­ளது மார்புப் பகு­தியை சூடு­வைத்து தட்­டை­யாக்கி உருக்­கு­லைக்கும் கொடூர செயன்­மு­றையால் உல­கெங்கும் 3.8 மில்­லியன் பெண்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய அறிக்­கை­யொன்று கூறு­கி­றது. நிலக்­கரித் தண­லுக்கு மேலாக வைத்து சூடேற்­றப்­பட்ட பாரிய கற்கள் மற்றும் சுத்­தியல் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி மார்பு இழை­யங்­களை அழுத்தி உருக்­கு­லைத்து சிறு­மி­க­ளது பாலியல் ரீதி­யான கவர்ச்சித் தோற்றம் குறைக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி கொடூர செயன்­முறை கமெரூன், நைஜீ­ரியா, தென் ஆபி­ரிக்கா ஆகிய […]

samaraiqi4273 25/11/2015

உலக அளவில் மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொண்டாலும், இயற்கையின் கோர தன்மையை யாராலும் தடுக்க இயலாமல் போனதால் இயற்கை தன்னுடைய பணியை நிரைவாக செய்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இயற்கையை மீறிய செயல் என்பது மனிதனின் அறிவை தாண்டி நடக்கும் பயங்கரங்கள் தான் என்பது ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டியது. இயற்கை சீற்றங்கள் குறித்த பல தகவல்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாம் அன்றாடம் அறிந்து கொண்டே தான் […]