tomscratch20042007

tomscratch20042007 19/11/2015

 தமிழகம் முழுவதும் கொட்டி வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பி தெரியப்படுத்தலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24350496, 044-24334811. செல்போன் எண்கள்: 9444340496, 9361482899. 104 என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் […]

tomscratch20042007 19/11/2015

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.                  டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.                 மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]

tomscratch20042007 19/11/2015

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு […]

tomscratch20042007 19/11/2015

கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த, இருவர் சாலையோரம் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். இதில், ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால், சந்தேகமடைந்த, எஸ்.பி., திருநாவுக்கரசு, அவர்களிடம் விசாரணை நடத்தினார். ‘ஐ.பி.எஸ்., தேர்வு பெற்று, நேஷனல் […]

tomscratch20042007 18/11/2015

சொத்து குழிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து […]

tomscratch20042007 17/11/2015

மும்பையில் மதுபோதையில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வெர்சோவாவில் உள்ள இன்லக்ஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாடல் அழகி தேவ்தத்தா. இவர் சம்பத்தன்று இரவு தன் வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த […]

tomscratch20042007 16/11/2015

ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், பிரிட்டனில் ராகுல்காந்தி பங்குதாரராக உள்ள லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.சட்டப்படி இந்திய குடிமகனாக உள்ள ஒருவர் வேறு எந்த நாட்டின் குடிமகனாகவும் […]

tomscratch20042007 16/11/2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன. உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இயதிய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் […]

tomscratch20042007 14/11/2015

ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது 7 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதனால் நகனோ ஷிமா தீவுகள், சத்சுனான் தீவுகள் மற்றும் சகோஷிமா மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது.             நிலநடுக்கம் காரணமாக கசோஷிமா மற்றும் சத்சுனான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. அதை தொடர்ந்து அங்கு சிறிய அளவில் […]