அரசியல்

angusam 01/05/2017

திருச்சியில் அ.தி.மு.க. கட்சிகளுக்குள் மோதல் உருள போகும் தலைகள் பரபரப்பு பின்னணி !   அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதவி விலக்கோரி, அமைச்சரிடமே மனுக்கொடுத்த தினகரன் ஆதரவாளர்களும், அமைச்சர் ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமைச்சர் வெல்லமண்டி ஆதரவாளர் என்று வெளிப்படையாக தெரிந்தாலும் அவர்களை அடிக்க சொன்னது என்னவோ திருச்சி எம்.பி குமார் புது குண்டை தூக்கி போடுகிறார்கள் கட்சிகாரர்கள்.   திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில், […]

angusam 26/04/2017

பார்வை பழுதுபட்ட நால்வர், யானையை தொட்டு பார்த்து விவரித்த கதை தான் 2ஜி – 2ஜி விசாரணையில் ராசா வாதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் ‘‘நான் எடுத்த முடிவுகளால் செல்போன் கட்டணம் குறைந்தது’’ 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் நான் எடுத்த முடிவுகளால் செல்போன் கட்டணம் குறைந்தது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா இறுதி வாதம் செய்தார். சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதத்துக்கு பிறகு இவ்வழக்கின் […]

angusam 25/04/2017

தினகரன் நள்ளிரவில் அதிரடியாக கைது – அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர். தினகரனிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று நள்ளிரவில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அ.தி.மு.க. அம்மா அணியின் […]

angusam 10/04/2017

மீண்டும் பரவும் விவசாயிகள் புரட்சி.. வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், அடுத்தடுத்து பலியானார்கள். 300 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். வரலாறு காணாத அளவுக்கு கல்லணையும் காவிரியும் வறண்டு கிடக்கிறது. ஆனால் அரசுகள் மவுனமாக உள்ளன.. இந்த நிலையில் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் நூதன போராட்டங்களை நடஹ்திய விவசாயிகள், அடுத்து சென்னையிலும் கடலில் இறங்கிப்போராட்டம், சாலையில் […]

angusam 09/04/2017

எனது மகனைவிட மருமகளுக்கு அதிக வயது ! நான் ஜாதி பார்க்கவில்லை திருச்சி சிவா கவலை ! ‘’எனது மகனுக்கும், மருமகளுக்கும் உள்ள வயது வித்தியாசம் கவலை தருகிறது,’’ என்று திமுக எம்.பி., திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார். திருச்சி சிவாவின் மகன் மணிவண்ணன் என்ற சூர்யா மற்றும் அவரது மனைவி பிரதியுஷா ஆகியோர் திருச்சி செய்தியாளர்கள் மன்றத்தில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது, “ எனக்கும் பிரதியுஷாவுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது மனைவி […]

angusam 08/04/2017

நண்பனை மாட்டிவிட்ட நண்பன்! அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4½ கோடி ரொக்கம், ரூ.86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று வரை இதுதொடர்பாக சுமார் 300 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன. அ.தி.மு.க. (அம்மா) அணி […]

angusam 03/04/2017

1996–ல் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தினார் ரஜினி. தங்களை சந்திக்கும்படி தொடர்ந்து ரசிகர்கள் கடிதங்கள் அனுப்பி வற்புறுத்தியதால் 2008–ல் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்துக்கு ரசிகர்களை வரவழைத்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு 2011–ல் தனது பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது ரசிகர்களிடம் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். 2011 ஜீலை மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் சரியானதை முன்னிட்டு […]

angusam 15/03/2017

ரேசனில் இனி அரிசிக்கு பதில் கோதுமை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது கட்சி எம்எல்ஏக்கள் அந்தந்த தொகுதி ரேசன் கடைகளில் ஆய்வு நடத்த கூறி இருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்தினார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி, கீழ்கண்டார்கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை, நவல்பட்டு, பாப்பாகுறிச்சி, கிருஷ்ணாசமுத்திரம், கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பொருட்கள் இருப்பு […]

angusam 27/02/2017

கேமராமேன்கள் தான் ரியல் ஹீரோக்கள்!” – ப்ரேக்கிங் செய்தி நிருபர்களின் அனுபவம் டிவியை ஆன் செய்தாலே இன்றைக்கான ப்ரேக்கிங் என்னென்னு தான் முதல்ல பார்க்கத்தோணுது. அந்த அளவிற்கு ஆறேழு மாதமாக  தினம் தினம் அதிர்ச்சிகர சம்பவங்களும், அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டது. நாம் வீட்டிலேயே ‘லைவ்’வாக செய்திகளைப் பார்த்துவிடுகிறோம். ஆனா செய்தியை கொடுத்த நிருபர்கள் பெற்றதும் இழந்ததும் அதிகம். இந்த ஆறுமாத ப்ரேக்கிங்கில் நிருபர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அவர்களின் வார்த்தைகளில்….. ஸ்டாலின் (புதியதலைமுறை) “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

angusam 27/02/2017

2 நாளில் 6 இலட்சம்  பேர் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். – பீதியில் அரசியல்வாதிகள் என் தேசம் என் உரிமை கட்சியில்  6 லட்சம் பேர் இணைந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடப் போவதாக அவர் தெரிவித்தார். புதிய கட்சி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று முன்தினம் என் தேசம் என் உரிமை என்ற புதிய கட்சியை உருவாக்கினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எபினேசர், சத்யா, […]

angusam 26/02/2017

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் அரசியலில் குதித்தனர். ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் 2 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டை ஒரே மாதத்தில் மீட்டெடுத்து, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது. சென்னையில் ஆலோசனை வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தமிழக இளைஞர்களை […]

angusam 25/02/2017

தமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி தமிழகத்தில் மக்களாட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் […]

angusam 18/02/2017

ரூ.35 ஆயிரம் வரி செலுத்தாததால் சசிகலாவின் வீட்டிற்கு நோட்டீஸ்: ஜெயலலிதா, இளவரசி, சுதாகரன் சொத்துகளும் ஆய்வு திருமலை: தெலங்கானாவில் ரூ.35 ஆயிரம் வரி செலுத்தாததால் சசிகலாவின் வீட்டிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், ஜெயலலிதா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான வரி செலுத்தாத சொத்துக்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா, தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த 1990ம் ஆண்டு சொகுசு பங்களா வாங்கி ஜெ.ஜெ. கார்டன் என்ற பெயர் வைத்தார். அப்போது செகந்திராபாத் […]

angusam 17/02/2017

என்னைப்‌ பார்த்து சிரிக்காதீர் !  EPS க்கு ஸ்டாலின் அட்வைஸ் சட்டப்பேரவையில் என்னைப்‌ பார்த்து சிரிக்க வேண்டாம் என்று மு‌தல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.‌ ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:   முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததையடுத்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய தலைமையிலான அரசு நம்பிக்கையான அரசாக இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது.   நாளை சட்டப்பேரவை […]

angusam 17/02/2017

இரட்டை இலை சின்னத்தை முடக்க தீவிரம் அதிமுக எம்.பி மைத்ரேயன் தலைமையிலான எம்.பிக்கள் குழு, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து, அதிமுகவின், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தது. கடந்த டிசம்பர் 29ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதில் […]