அரசியல்

angusam 31/01/2017

திருச்சியில் பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.ப.இளவழகன் தெரிவித்தார். அரியலூர் கல்லூரிச் சாலை யில் ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அலுவலகத்தை திறந்துவைத்து இளவழகன் பேசியதாவது: முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, மக்களால் சகித்துக்கொள்ள முடியாத நிகழ்வுகள் ஆட்சியிலும், கட்சியிலும் நடைபெற்று வருகின் றன. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில், 2,600 பேர் மட்டுமே […]

angusam 15/01/2017

அதிகாரப்பூர்வமான கட்சி எது- தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கும்? ‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும்? அதை தேர்தல் ஆணையம் எப்படி […]

angusam 09/01/2017

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் நேற்று கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் சென்னிமலை வழியாக மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் வந்த விஜயகாந்த ரோட்டோரம் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள தென்னை மர நிழலில் நிறுத்த சொன்னார். வீட்டின் முன் தென்னை மர நிழலில் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று […]

angusam 28/11/2016

எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி             தி.மு.க.வின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அவரது ரசிகர்களும் முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 1969-ம் ஆண்டு அண்ணாதுரை இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வராகக் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் உழைப்பு மிக பெரியது.  ஒருகட்டத்தில் திமுக கருத்து வேறுபாட்டால் உடைந்த, கடந்த  1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இருந்து விலகினர்.   திமுக தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ஊர் திருச்சி என்றால்,  எம்.ஜி.ஆர் […]

angusam 09/11/2016

மோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேர்காணலில் விளக்கிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் […]

angusam 08/11/2016

கே.என்.நேரு அரசியல் ரகசியமும் அவசியமும்…. கடந்த 20வருடங்களுக்கு மேல் திருச்சி அரசியலில் பெரிய ஆளுமையாக வலம்வருபவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.  நவம்பர் 9ந்தேதி அவருக்கு பிறந்தநாள். அரசியலில் கால்பதிக்க நினைக்கும் திருச்சி அரசியல்வாதிகள் நிச்சயம் நேரு வளர்ந்த கதையை தெரிந்து கொள்வது அவசியம். 10வருடங்களுக்கு மேல் அமைச்சர், அடுத்து சட்டமன்ற உறுப்பினர், சேர்மென் என கடந்துவந்த பாதைகளை புரட்டிபார்ப்போம். திருச்சியிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்தான் நேருவுக்கு சொந்த ஊர். அப்பா நாராயணசாமி ரெட்டியார், […]

angusam 07/10/2016

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ஆட்சேபணை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுத் தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 10.11.2015 அன்று திருச்சிராப்பள்ளி இரயில்வே நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பெறப்பட்ட ஆண்குழந்தை தமிழ்செல்வன் என்ற பெயரிடப்பட்டு மதுரை மாவட்ட குழந்கைள் நலக்குழுவின் பாதுகாப்பில் கிரேஸ் கென்னட் பவுன்டேசன் மழலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. 13.05.2016 அன்ற திருச்சிராப்பள்ளி காஜாமலை […]

angusam 29/09/2016

உள்ளாட்சி தேர்தல் ஊரே பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கு. நாமினேசன் தாக்கல் செய்ய கூட்டம் காண்பிக்கவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டி ஊர்வலமாய் போய் வேட்டு வைத்து  பிரச்சாரம் போகிறார்கள். ஆனால் இந்த தேர்தல் ஆடம்பரமே இல்லாமல் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.. இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்க்கு சென்று கொண்டிருந்தேன்.அப்போது ரயில் நிலையம் அருகில் ஒரு கையில் கைப்பையுடன் தோளில் சிகப்பு துண்டோடு ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.இவரை எங்கேயோ பார்த்த நியாபகத்தோடு வண்டியை நிறுத்தினேன்.நிறுத்தி நிதானித்து […]

angusam 18/09/2016

காவிரிப் பிரச்னையில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 16-ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளரான விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து இறந்தார்.இந்நிலையில், ‘நாம் தமிழர் கட்சி விதிமுறைகளை மீறி செயல்படுவதால் அக்கட்சியை தடை செய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ரீகன். இதுகுறித்துப் பேசும் அவர், ”சீமானின் அலட்சியம்தான் விக்னேஷ் உயிரிழப்புக்குக் காரணம். எந்தவொரு போராட்டம், பேரணி […]

angusam 15/09/2016

திருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததையும். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கொடுத்தார் என்றும். அதை கலைஞரிடம் கொடுத்தேன். அப்போது கலைஞர் வாங்கி வைத்து கொண்டார் பிறகு சில நாட்கள் கழித்து அதை கிழித்து போட்டதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இது நாள் வரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன். […]

jefferywinneke 09/09/2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான பந்த்தாக மாற்றியுள்ளனர். கேபிள் டிவி சேனல்கள் கட் செய்யப்பட்டுள்ளன, அதேபோல தமிழ் செய்தித்தாள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட 5 தமிழ் பத்திரிகைகள் பெங்களூரில் வினியோகம் செய்யப்படுவது […]

jefferywinneke 07/09/2016

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் தி.நகர், அண்ணாநகர் பகுதி செயலாளர் பதவி பறிப்பு  தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். தி.நகர், அண்ணாநகர் பகுதிச் செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: தென்சென்னை வடக்கு மாவட்ட அவைத் தலைவராக விஜயராமகிருஷ்ணாவும், மாவட்ட செயலாளராக கலைராஜனும், இணை செயலாளராக ரத்தினகுமாரி, துணை செயலாளர்களாக கற்பகம், சீனிவாசன், பொருளாளராக கண்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் […]

jefferywinneke 06/09/2016

உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருந்தால், பாதிப்புக்கு ஆளாகியுள்ளோருக்கு நீதி எப்படி விரைவாகக் கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்களும், 24 உயர் நீதிமன்றங்களில் 478 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. நீதிமன்றத்தில் நிலைமை இப்படி இருந்தால், […]

jefferywinneke 27/08/2016

திருச்சி: சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை மாற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம்  நடந்தது. கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருக்கக்கூடியவர் […]

jefferywinneke 24/08/2016

புதுச்சேரியில், பள்ளியில் நடந்த நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்டபோது முதல்வர் நாராயணசாமியுடன் இணைந்து காங்கிரஸ் பிரமுகர் கைப்படம் (செல்ஃபி) எடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேசிய கீதத்தை ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை பாட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, புதுச்சேரியில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கீதம் பாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, […]