ஆன்மீகம்

angusam 21/04/2017

ஊருக்கே உபதேசம் செய்பவர்கள் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இப்படிச் செய்யலாமா?   படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில் என்பார்கள். திருச்சி ஐயப்பன் கோயிலுக்குள் ஒரு முறை போய் விட்டு வெளியே வருபவர்களுக்கு இறைபக்தி மட்டுமல்ல அன்றாட வாழ்வின் செயல்பாடுகளிலும் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும். அந்தளவுக்கு ஒவ்வொரு இடத்திலும் செயல்பாடுகளிலும் வணக்கமுறைகளிலும் ஆடை விஷயத்திலும் ஒரு நேர்த்தி தென்படும். யார் கண்பட்டதோ தெரியவில்லை. தங்களின் கோயிலில் சேர்ந்த தென்னை மட்டை உள்ளிட்ட குப்பைகளை கோயிலின் பின் பக்கத்தில் […]

angusam 17/08/2016

திருச்சி கருமண்டபம் செல்வம் நகர் பகுதியில் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை உள்ளது. இதை சுற்றி காலியிடங்களும் உள்ளது. இந்த சபைக்கு சொந்தமான இந்த இடத்தை ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக விஜிபி நிருவனத்துடன் கடந்த 2011ம் ஆண்டு அந்த ஏசி சபையின் மூத்த போதகர் ஒரு ஒப்பந்த போட்டார். இந்த ஒப்பந்தத்தின் படி விஜிபி நிருவனம் 6 கோடியே 88 இலட்சத்தை வங்கியின் மூலம் அந்த சபைக்கு செலுத்தியது. இந்த நிலையில் மீதமுள்ள ரூபாய் […]

jefferywinneke 12/07/2016

திருச்சி மத்திய மண்டலத்தில் முதன்முதலாக தபால் அலுவலகங்கள் மூலமாக புனித கங்கை தீர்த்தம் விற்பனை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அஞ்சலகங்களின் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் புனித கங்கை தீர்த்தத்தை பெற இந்திய அஞ்சல் துறை புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து இந்த புனித கங்கை தீர்த்தம் பெறப்படுகிறது. இந்த புதிய திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோரால் கடந்த 10ம் […]

jefferywinneke 12/07/2016

இயேசுவுக்கு சிலுவை மரணம். அவருடைய சிலுவைக்கு இரண்டு பக்கமும், வேறு இரண்டு குற்றவாளிகளையும் சிலுவையில் அறைய வேண்டும் என்பது திட்டம். இயேசுவும் ஒரு திருடன் என அவமானப்  படுத்துவது அவர்களுடைய நோக்கம். பெரிய நீளமான ஆணிகள் தயாராய் இருந்தன. இயேசு சிலுவையில் கிடத்தப்பட்டார். அவருடைய கைகளை இழுத்து மரத்தோடு சேர்த்து ஆணிகளால் அறைந்தார்கள். இயேசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்து பாதங்களைத் துளைத்தபடி நுழைந்தது மூன்றாவது நீளமான ஆணி. சொல்லமுடியாத வலி இயேசுவைத் துடிதுடிக்க வைத்தது. ஒவ்வொரு கைதியையும் […]

jefferywinneke 11/07/2016

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பாலாலய விழா முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியதால் சமயபுரம் மாரியம்மனின் திருஉருவ படத்தை மட்டுமே வணங்க முடியம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் அருள்மிகு திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருக்கோவிலின் ராஜகோபுரம், சுற்றுச்சுவர், மேற்கூரைகள் அமைக்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு பாலாலய விழாவிற்கான யாகசாலை பூஜைகள் கடந்த சனிக்கிழமை […]

jefferywinneke 08/07/2016

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு 1.750 கிலோ தங்கத்தினாலான ரூ.50 லட்சம் மதிப்பிலான அபயஹஸ்தம் சென்னையைச் சேர்ந்த பக்தரால் சமர்ப்பிக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவரும் வருகை தந்து நம்பெருமாளையும், தாயாரையும் வழிபட்டுச் செல்வதோடு கோயில் விழாக்களை கண்டுகளித்தும், கலைச்சிற்பங்களையும் ரசித்துச்செல்வர். காவிரியும், கொள்ளிடமும் சூழ்ந்திருக்க நடுவிருந்து உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு அருள்புரிந்துவரும் பள்ளிகொண்ட நம்பெருமாளின் அபயஹஸ்தத்தினை […]

jefferywinneke 30/06/2016

தூய்மையை உபதேசித்த மார்க்கம்; தூய்மையை நடைமுறைப்படுத்திய மார்க்கம், இஸ்லாம். முழுக்கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களையே தன் விருப்பத்திற்கு உரியவர்களாக இறைவன் கருதுகின்றான். ‘தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பாதி’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மனிதன் தன் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பாதி, உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் மற்றொரு பாதி ஆகும். இறை நிராகரிப்பு, இணைவைப்பு, தீங்கிழைத்தல், வழிகேட்டில் மூழ்கி விடுதல் முதலிய அசுத்தங்களை விட்டும் […]

jefferywinneke 30/06/2016

இயேசு தனது சீடர்களுடன் சமாரியா வழியாகக்  கலிலேயாவுக்குப் பயணமானார். ‘சமாரியா’ யூதர்களுக்குப் பிடிக்காத ஊர். ‘சமாரியர்கள்’ யூதர்களால் வெறுக்கப்படும் இனம். இவர்களுக்குள் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மூதாதையர்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான். காலப்போக்கில் கடவுளை வழிபடும் முறையினால் பிளவு பட்டார்கள். சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ நூல். யூதர்களின் புனித நூலில் வேறு பல பகுதிகளும் உள்ளன. யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந்துள்ள எருசலேம் […]

jefferywinneke 30/06/2016

காலம் ஒரு யுகத்திற்குப் பிறகு மற்றொரு யுகம் என்று யுகங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் காலத்தின் போக்கு எந்த விதத்திலும் பாதிக்கப் படாமல், ஒரே ரீதியில் இருந்து வருகிறது. தாமரைக்கு நிலவு எமனாக அமைகிறது. அதுபோல் மனிதனின் வாலிபப் பருவம் என்ற தாமரைக்குக் காலம் எமனாக அமைந்திருக்கிறது. குரு குருவின் ஸ்தூல உடல் மறைந்த பின்னும் அவருடனான உறவு தொடரும். உலகத்தில் ஒரு ஞானி இருந்தால் போதும். அவரது செல்வாக்கு, சீடர்களால் மட்டும் அல்லாது, அனைவராலும் […]

jefferywinneke 28/06/2016

புனித ரமலான் மாதத்திற்கு ‘ஷஹ்ருல் இஸ்திபார்’ (பாவமன்னிப்பு வேண்டப்படும் மாதம்) எனும் தத்துவப்பெயரும் உண்டு. ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ, மனம் விரும்பாமலோ செய்த, செய்கின்ற, செய்யப்படுகின்ற சிறிய–பெரிய தவறு களுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும். மேலும் முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர–சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள், பாவமன்னிப்பு கோரவேண்டிய கோரிக்கை […]

jefferywinneke 28/06/2016

எதெல்லாம் நன்மையாகத் தெரிகிறதோ, அதையெல்லாம் பெற்று விட வேண்டும் என்பது மக்களிடம் இயல்பாக காணப்படும் எண்ணம். பெற்றுவிடக் கூடியதை, யாரையெல்லாமோ பிடித்து பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். பெற முடியாததற்காக, அவரவரின் இறைவனிடம் வேண்டுதல் வைக்கின்றனர். கிறிஸ்தவத்தைப் பொறுத்த அளவில், இறைவேண்டலுக்கு அடிப்படை தகுதி தேவைப்படுகிறது. இறைவன் தான் படைத்த எல்லாருக்குமே உலகில் வாழத்தேவையான அனைத்தையும் அவர் நிர்ணயித்தபடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதில் பக்தன், பாவி, வேறு மதம், நாத்திகன் என்ற வகைப்பாடுகள் கிடையாது. பாவிகளுக்கும் அவர் வழியைக் […]

jefferywinneke 28/06/2016

கும்பகோணத்தில் கொண்டாடப்படும் சிறப்பான விழாக்களில் மாசி மகமும் ஒன்றாகும். பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வாக்கியமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது வருவது மகாமகம் ஆகும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் எல்லா உலகத்தில் உள்ள தேவர்கள் நீராட வருவதாக ஐதீகம்

jefferywinneke 27/06/2016

இலாசர் இயேசுவின் நண்பர். அவருடைய சகோதரிகள் மார்த்தா, மரியா இருவரும் இயேசுவின் போதனைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தவர்கள். இலாசர் நோய்வாய்ப்பட்டான். அந்த தகவல் இயேசுவிடம் பரிமாறப்பட்டது. இயேசு தொலைதூரத்தில் இருந்தார், அந்த செய்தியைக் கண்டுகொள்ளவில்லை. சீடர்கள் அவரிடம், ‘போதகரே… உமது நண்பன் நோயுற்றிருக்கிறான்’. ‘பயப்படாதீர்கள், சாவில் முடிவதற்கான நோயல்ல இது.  கடவுளின் மாட்சி விளங்குவதற்கான நோய்’ என்று சொல்லி இயேசு அங்கேயே தங்கினார். இரண்டு நாட்களுக்குப் பின் இயேசு சீடர்களை அழைத்து, ‘வாருங்கள் போவோம்’, என்றார். […]

jefferywinneke 27/06/2016

நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் பாவமான காரியங்களை செய்து விடுகிறோம். இது நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் பாவம், விலக்க முடியாத ஒன்றல்ல. ரமலான் நோன்பில் இன்று முதல் ‘மஅஃபிரத்’ எனும் மன்னிப்பிற்குரிய நாட்கள் ஆரம்பமாகின்றன. எனவே, இந்த நடுப்பத்து நாட்களில் அல்லாஹ்விடம் நமது பாவச்செயல் களுக்காக, பரிபூரணமான மன்னிப்பை நாம் கேட்க வேண்டும். அதற்கான ஒரு எளியவழி, நம்மைப்படைத்த அல்லாஹ்விடம் சரணடைந்து, ‘இறைவா, நான் தெரிந்தும் தெரியாமலும் பாவமான செயல்களைச் செய்துவிட்டேன்; […]

jefferywinneke 27/06/2016

புத்தரிடம் சீடனாக இருந்த மகா காஸ்யபன் ஞானம் பெற்று விட்டார். இதையடுத்து அவரை, உலகம் முழுவதும் சுற்ற அனுப்பி வைக்க எண்ணினார் புத்தர். தனது எண்ணத்தை கூறுவதற்காக காஸ்யபனை அழைத்தார். ‘காஸ்யபா! நீ உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும். இப்போதே புறப்படு. ஞான தாகம் கொண்டவர்களிடம் போய் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டு. உனக்கு கிடைப்பதை, அனைவருக்கும் பகிர்ந்து கொடு. ஞானத்தை பரப்பு’ என்றார் புத்தர். காஸ்யபரோ மறுப்பு தெரிவித்தார். ‘குருவே!  இது உங்கள் கடைசிப்பிறவி. நான் […]