இந்தியா

jefferywinneke 18/08/2016

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு காலிறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆட்டத்தின் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்த நிலையில், தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். ஆரம்ப சுற்றுகளில் […]

jefferywinneke 16/08/2016

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்ச (30) மீது அண்மையில் தொடுக்கப்பட்ட பண மோசடி வழக்கில், அவரை அந்நாட்டு நிதி மோசடி குற்றப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். நமலின் சட்ட நிறுவனம் தொடர்புடைய நிதி விவகாரங்களுக்காக போலீஸார் கைது செய்துள்ளதாக, அவரது வழக்குரைஞர் பிரேமானந்த தோலெவட்டா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் ஹம்பண்டோடா மாவட்ட எம்.பி.யான நமல் ராஜபட்சவை கைது செய்த போலீஸார், கொழும்பு நகர மாஜிஸ்திரேட் […]

johnhatton61986 14/08/2016

ஆங்கிலேயர்களிடமிருந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.  நாளை நாட்டின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு தனது சுதந்திர நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நல்வாழ்த்துக்கள்… ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை […]

jefferywinneke 13/08/2016

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்தார்.பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள் சேஸ்’ ஓட்டத்தின் முதல் சுற்றில் இந்தியா சார்பில் லலிதா பாபர், சுதா சிங் பங்கேற்றனர். மொத்தம் 18 பேர் அடங்கிய ‘ஹீட் 2’ பிரிவில் […]

jefferywinneke 08/08/2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபாவால் முதல் பதக்கம் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு வாழ்த்துக்கள் தங்க தாமரை மகளே.. 130 கோடி இந்தியர்கள் போற்றுக உன் புகழே மகிழ்ச்சி மகளே மகிழ்ச்சி ..! தீபா கர்மாகர் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பிரேசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ […]

johnhatton61986 08/08/2016

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் திபா கர்மாகர் வால்ட் பிரிவில் 8வது இடத்தை பிடித்தார். ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27வது இடத்தை பிடித்துள்ளார். வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தார்.அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகள், பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகள், ஃப்ளோர் பிரிவில் 12.033 […]

johnhatton61986 08/08/2016

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் திபா கர்மாகர் வால்ட் பிரிவில் 6-வது இடத்தை பிடித்தார். ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27வது இடத்தை பிடித்துள்ளார். வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தார்.நேற்று இரவு நடந்த ஜிம்னாஸ்டிக்கில் இரண்டு முயற்சிகளுக்குப் பின்னர் 14.850 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் அன் […]

johnhatton61986 07/08/2016

பிவாண்டி பகுதியில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியானார்கள்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகேயுள்ள பிவாண்டியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், 2 பேர் பலியானார்கள். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களில், அப்பகுதியில் கட்டடம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும்.

johnhatton61986 31/07/2016

நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய தொழில் நுட்பங்கள் சீரான வளர்ச்சி அடைவதற்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவையே ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மன் கி பாத் நிகழ்ச்சி வழியே பொது மக்களிடம் பேசுவார்.  அவர் இன்று பேசும்பொழுது, நாட்டில் பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு மலிவான மற்றும் எளிமையான தீர்வு காண்பதற்காக புதிய கண்டுபிடிப்புகளுக்கான எண்ணற்ற மையங்களை அமைப்பது எனது அரசின் நோக்கம். […]

jefferywinneke 21/07/2016

அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையோடு களமிறங்க காத்திருக்கிறார் தீபா கர்மாகர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், தனது 7-ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் களம்புகுந்தார். ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க கால் பாதங்கள் உள் வளைந்து இருக்க வேண்டும். ஆனால் தீபாவின் கால் பாதங்கள் தட்டையாக இருந்தன. கடுமையான பயிற்சியின் மூலம் அதை சரி செய்த தீபா, பின்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார். […]

jefferywinneke 20/07/2016

லண்டன்: உலக அழகன் போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த டிவி நடிகரும், மாடலுமான ரோஹித் கந்தல்வால் என்பவர் உலக அழகன் பட்டத்தை வென்றுள்ளார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் இருக்கும் சவுத்போர்த் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை 2016ம் ஆண்டுக்கான உலக அழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் கலந்து கொண்டனர். கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்ட அந்த 47 பேரில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை […]

jefferywinneke 20/07/2016

கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடுகையில் அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுஷில் குமார் மிஸ்ரா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து […]

angusam 18/07/2016

ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். ராசாவின் ‘IN MY DEFENCE’ புத்தகம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி இந்த புத்தகத்தை வெளியிட ஆ. ராசா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஆ. ராசா, […]

jefferywinneke 15/07/2016

தேசிய அளவில் மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய அணியும், குஜராத் மின்சார வாரிய அணியும் மோதின. இதில் 33க்கு 4 என்ற […]