இந்தியா

jefferywinneke 14/07/2016

திருச்சி தடகள வீரர் வருகின்ற ஆகஸ்டு 5, 2016 ல் தொடங்க உள்ள “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரரான 25 வயதான “ஆரோக்கிய ராஜீவ்” வருகின்ற “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் தொடரோட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். பெங்களூருவில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முந்தைய தேசிய சாதனையான 3.2 நிமிடங்கள் என்பதை முறியடித்து, வெற்றிகரமாக […]

jefferywinneke 13/07/2016

மும்பை: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான டோணிக்கு ஒரு காதலி இருந்ததாகவும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. டோணியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி’ என்ற படம் ஹிந்தியில் தயாராகி வருகிறது. இப்படத்தில் தன்னுடைய காதலியின் நினைவுகளை படமாக்க இயக்குநர், நீரஜ் பாண்டேவுக்கு டோணி அனுமதி தந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டோணியின் 20 வயதையொட்டிய காலகட்டத்தில், அவர் பிரியங்கா என்ற […]

angusam 13/07/2016

இந்த உலகம் மர்மம் நிறைந்தது என்பதற்க்கு மிகப்பெரிய சான்றாக தற்போது உருவெடுத்துள்ளது. அது இந்தியா, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. இதுக்குறித்து தட்பவெப்ப நிலை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களை மிரள வைக்க உள்ளதாக தெரிகிறது. வங்கதேசத்தை மையமாக கொண்டு அதிகளவில் உயிரழப்புகளை ஏற்படுத்த கூடிய பூகம்பம் தயாராக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பூகம்பம் வங்கதேசம், கிழக்கு இந்தியா, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதி படுகைகளில் ஏற்பட உள்ளதால் இந்த பூகம்பத்தை தாங்க […]

jefferywinneke 13/07/2016

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக தடுப்பு ஆட்டக்காரர் சுஷிலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ரிது ராணி, ஃபார்மில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மற்றொரு தடுப்பு ஆட்டக்காரரான தீபிகா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பு குறித்து சுஷிலா சானு கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், மிகப்பெரிய […]

angusam 11/07/2016

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சந்தித்துப் பேசினார். டெல்லியில் இன்று மாலை நடந்த இந்த சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பதவியை பிடிக்க அக்கட்சியைச் சேர்ந்த தமிழக தலைவர்கள் பலர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக சிலரை ராகுல் காந்தி […]

jefferywinneke 11/07/2016

திருச்சியில் முட்டையின் மீது அரை மணி நேரம் அமர்ந்து தியானம் செய்து 6 வயது பெண் குழந்தை உலக சாதனை படைத்தார் திருச்சி மண்டல டிஐஜியாக இருப்பவர் அருண். இவரின் மனைவி யமுனா தேவி மும்பையில் சுங்கம் மற்றும் கலால்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு இயைனியா அருண் என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் இன்று 30 முட்டைகளின் மீது சுமார் அரை மணி நேரம் பத்மாசன நிலையில் அமர்ந்து தியானம் […]

jefferywinneke 10/07/2016

திருச்சி: மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 29 அணிகள் பங்கேற்றன. திருச்சி மாவட்ட கால்பந்து கூட்டமைப்பு மற்றும் எல்லோ ரோஸ் கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டிகளை அரசு தலைமைக்கொறடா ஆர்.மனோகரன் தொடங்கி வைத்தார். முதல் மற்றும் பிற்பாதி தலா 15 நிமிடங்கள் என 35 நிமிடங்கள் மட்டும் நடைபெறும் இப்போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்படும். திருச்சி […]

jefferywinneke 08/07/2016

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்தது. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்ததோடு, சகவீரரான நானிக்கும் கோலடிக்கும் அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அசத்தினார். பிரான்ஸின் லயன் நகரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி […]

jefferywinneke 07/07/2016

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த அணி ஜிரூவ்டு, பேயட், கிரிஸ்மான் என பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது. காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் இத்தாலியை […]

angusam 04/07/2016

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கிதொழிற்சாலையின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு துப்பாக்கிகள் கண்காட்சி நடைப் பெற்றது இந்தியாவில் 1962ஆம் ஆண்டு சீனாவின் நெருக்கடியை தொடர்ந்து அன்றைய  இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் படைகலன் களை அதிகரிக்க முடிவு செய்தார் . அதன் அடிப்படையில் தொழிற்சாலை அமைவதற்கு ஏற்ற இடம் மற்றும் குடிநீர் தொழிலாளர்கள் உள்ளட்ட வசதிகள் அமைந்துள்ள இடங்களை தேர்வு செய்தார் இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் மையப்பகுதியான திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே 1966ஆம் ஆண்டு […]

jefferywinneke 03/07/2016

சற்று விலை அதிகமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு சோனி மொபைல் மீது எப்போதுமே ஒருவிதமான ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால், சோனி நிறுவனம் இந்தியாவின் மொபைல் போன் விற்பனையில் தனது கவனத்தை குறைத்துக் கொள்ள போவதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இதைத் தெரிவித்துள்ளது.அத்தோடு இந்தியா மட்டும் இல்லாமல் சீனா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தனது விற்பனை சார்ந்த கவனத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. 2015-17 ஆகிய காலக் கட்டத்தில் மேற்கூறிய நான்கு நாடுகளிலும் மொபைல் […]

jefferywinneke 02/07/2016

அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த போட்டியில் 250 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். திருச்சி வசந்த் டென்னிஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 10, 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே ஒற்றையர் போட்டிகளும், சீனியர் பிரிவில் இரட்டையர் போட்டிகளும் நடத்தப்படுகிறது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி, […]

angusam 01/07/2016

இந்திய ரூபாயின் மதிப்பு குறியீடு வடிவமைப்பு போட்டியில் தேர்வு செய்யப்பட்டபின் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டென் – மனம் திறந்த உதயகுமார் இந்தியாவிற்கான அடையாளம் என்று கூறக்கூடிய பட்டியலில் ரூபாய்க்கான குறியீடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினுடைய பணத்தின் மதிப்பும் மற்றொரு நாட்டிற்ககு தெரியபடுத்த வேண்டிய கட்டாயத்தினால் தான் தங்களுக்கு என்று ஒரு அடையாத்தை உருவாக்க ஒவ்வொரு நாடும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அப்படிபட்ட முயற்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய ரூபாயிக்கு […]

tomscratch20042007 30/06/2016

     மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் தம்பதி ஒன்று சமீபத்தில் தாங்கள் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாக கூறி படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை இணைந்து தொட்ட முதல் தம்பதி தாங்கள்தான் என்று இருவரும் பெருமை அடித்திருந்தனர். ஆனால் அது பொய் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. இன்னொருவரின் படத்தை எடுத்து அதை இவர்கள் மார்பிங் செய்து வெளியிட்டு தற்போது […]

tomscratch20042007 30/06/2016

ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டு உள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்தார் என்று மற்றொரு சிறுமி முன்னாவின் மீது புகார் கொடுத்து உள்ளது. கோட்டா பகுதியில் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு […]