உலக செய்திகள்

tomscratch20042007 16/12/2015

ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்புகள்  துண்டிக்கபட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சத்தமிட்டப்படி ஓடினர். சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானமும் புறப்பட்டு செல்லும்  விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிட்னி நகரில் இன்று […]

angusam 11/12/2015

சுதந்திரமானதா  ஃபேஸ்புக்?  ஃபேஸ்புக்… இருண்ட முகம்!  வழக்கறிஞர் ந.ரமேஷ் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனை வெளியைத் திறந்துவிட்டது இணையதளங்கள். இவை கட்டற்ற சுதந்திரத்துக்கு வழிவகுத்ததாகச் சொல்லப்பட்டாலும், இங்கும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க முடியும் என்பது சமீபகாலமாக நிரூபணம் ஆகிவருகிறது. நடைமுறையில் ஃபேஸ்புக் எப்படி நடந்துகொள்கிறது? அதன் சுதந்திரம் எவ்வளவு தூரம் கேலிக்குரியதாக இருக்கிறது என்பதை கடந்த இதழில் எழுதி இருந்தோம்.  அவர்கள் ஒரு பக்கத்தை முடக்கினால், அந்த முடக்கப்பட்ட பக்கத்தை மீட்பது எப்படி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது […]

tomscratch20042007 09/12/2015

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய காந்தகார் விமான நிலையத்தில் 37 பேர் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆப்கான் ராணுவ வீரர்களும், நேட்டோ படையினரும் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காந்தகாரில் சர்வதேச விமான நிலையமும், மிகப்பெரிய ராணுவ தளமும் அருகருகே அமைந்துள்ளன. காந்தகார் நகரம் தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கொண்ட முக்கியமான பகுதியாக காணப்படுகிறது.   நேற்று […]

angusam 02/12/2015

பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் மார்க் ஷுகர்பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா சான்னிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். .. அமெரிக்கா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் […]

angusam 01/12/2015

கிறிஸ்துமஸ் அடுத்து புத்தாண்டு கொண்டாடி கிறிஸ்துவர்கள் மகிழ்ச்சியாக உள்ள இந்நேரத்தில்… “ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை’, “பைபிள் இறைமொழி அல்ல’ என்றெல்லாம் பலவிதமாக விமர்சித்து இயேசு கிறிஸ்துவின் உருவத்தை கோரமாக சித்தரித்ததோடு… ‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல! ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்களே!’என்றும் “கிறிஸ்துவம் மறைந் திருக்கும் உண்மை’’என்ற தலைப்பில் சர்ச்சைக் குரிய புத்தகத்தை இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராமகோபாலன் வெளியிட… சிறுபான்மை தலைவர்களின் மத்தி யில் சீற்றமும் கொந் தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை […]

angusam 01/12/2015

மருத்துவமும், ஆராய்ச்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மனிதகுலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றுகொண்டிருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் தீர்வுகளே பிரச்னையாகிவிடுவதும் உண்டு. அப்படி, புதிதாய் முளைத்ததுதான் ‘சரோகேட்’ என்று சொல்லப்படும் வாடகைத் தாய் முறை. குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாதவர்கள், பல்வேறு மருத்துவ வழிகளில் முயற்சி செய்வார்கள். எல்லா முறைகளும் பயனற்றுப் போனபின், தம்பதியர் நாடுவது வாடகைத் தாய் முறை. மனைவியின் கருமுட்டை மற்றும் கணவனின் விந்தணு இரண்டையும் இணைத்து வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வதுதான் […]

angusam 29/11/2015

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில், இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2012ல் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலையில், மாணவர்களிடையே உரையாற்றினார். பசுமை எரிசக்தியின் அவசியம் பற்றியும், தொடர்ந்த, நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் கொள்கையாக எப்படி உருவாக்க வேண்டும், அமல்படுத்த வேண்டும் என்பது பற்றியும் பாடம் எடுத்தார். அப்போது அப்துல்கலாமுக்கு உதவியாக […]

angusam 27/11/2015

மதியம் 3 மணி வாக்கில் பார்சலோனா நகருக்கு வந்து விட்டேன் . நல்ல பசி. நான் தங்கி இருக்கும் மான்ட்டே கார்லோ (Monte Carlo) விடுதியில் இருந்து (லசு ராம்ப‌லசு வீதி) அருகில் இருக்கும் இடத்திற்கு அப்படியே உலா போகலாம் என நடக்க ஆரம்பித்தேன். நகரம் முழுக்க சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. நிறைய எழுதலாம் ஆனால் நேரம் பத்தாது என நினைக்கிறேன். அவ்வளவு அதி அற்புதமான நகரம் இது.முடிந்த வரை முகநூலில் பகிர நினைக்கிறேன். பார்சலோனா […]

samaraiqi4273 25/11/2015

சிறு­மிகள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தையும் தடுக்க அவர்­க­ளது மார்புப் பகு­தியை சூடு­வைத்து தட்­டை­யாக்கி உருக்­கு­லைக்கும் கொடூர செயன்­மு­றையால் உல­கெங்கும் 3.8 மில்­லியன் பெண்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய அறிக்­கை­யொன்று கூறு­கி­றது. நிலக்­கரித் தண­லுக்கு மேலாக வைத்து சூடேற்­றப்­பட்ட பாரிய கற்கள் மற்றும் சுத்­தியல் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி மார்பு இழை­யங்­களை அழுத்தி உருக்­கு­லைத்து சிறு­மி­க­ளது பாலியல் ரீதி­யான கவர்ச்சித் தோற்றம் குறைக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி கொடூர செயன்­முறை கமெரூன், நைஜீ­ரியா, தென் ஆபி­ரிக்கா ஆகிய […]

samaraiqi4273 25/11/2015

உலக அளவில் மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொண்டாலும், இயற்கையின் கோர தன்மையை யாராலும் தடுக்க இயலாமல் போனதால் இயற்கை தன்னுடைய பணியை நிரைவாக செய்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இயற்கையை மீறிய செயல் என்பது மனிதனின் அறிவை தாண்டி நடக்கும் பயங்கரங்கள் தான் என்பது ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டியது. இயற்கை சீற்றங்கள் குறித்த பல தகவல்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாம் அன்றாடம் அறிந்து கொண்டே தான் […]

angusam 23/11/2015

ஒலிம்பிக்கில் ‘டுவென்டி-20’ போட்டியை சேர்ப்பதற்கான முயற்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஐ.சி.சி., தீவிரமாக உள்ளது. கடந்த இரு ஆசிய விளையாட்டு போட்டியில்(2010, 14) ‘டுவென்டி-20’ இடம் பெற்றது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், பொது மேலாளர் ஜெப் ஆலார்டிஸ் ஆகியோர் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் தாமஸ் பாக்கை சமீபத்தில் சந்தித்து […]

tomscratch20042007 21/11/2015

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய தொழிலாளர்களை குறிப்பாக தமிழக தொழிலாளர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயலாக்கத்தினை மேலும் பரவலாக்கும் பொருட்டு வெளிநாட்டிற்கு பெருமளவில் தொழிலாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. எனவே, வெளிநாட்டின் வேலையளிப்போரிடமிருந்து பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பெற்றுத் தருவதுடன் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) தேவைப்படுகிறார்கள். ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் […]

angusam 17/11/2015

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி,  பிரிட்டனை சேர்ந்த Backops Limited  என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி […]

tomscratch20042007 14/11/2015

ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது 7 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதனால் நகனோ ஷிமா தீவுகள், சத்சுனான் தீவுகள் மற்றும் சகோஷிமா மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது.             நிலநடுக்கம் காரணமாக கசோஷிமா மற்றும் சத்சுனான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. அதை தொடர்ந்து அங்கு சிறிய அளவில் […]

angusam 13/11/2015

வாஷிங்டன்: விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழு புதிய ஆய்வில் புற்றுநோயுடன் தக்காளியின் உட்பொருட்கள் போராடுவதை கண்டறிந்துள்ளனர். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானி ஜான் எர்ட்மான் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தக்காளியில் காணப்படும் உயிரியக்க சிவப்பு நிறமியான லைகோபீன் புற்றுநோய் கட்டிகளை கட்டுப்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார். மேலும் இவர் விலங்குகளில் காணப்படும் புரோஸ்டேட் கட்டிகள் வளர்ச்சிகளை குறைக்கிறது என்று நிரூபித்துள்ளர். இந்த ஆராய்ச்சி அணியினர், தக்காளியில் உள்ள கடினமான கார்பன் அணுக்கள்  புற்றுநோய்க்கு காரணமான பைதோகெமிக்கல்கள் […]