உள்ளூர் செய்திகள்

angusam 17/05/2018

சாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?     அரியலூரிலிருந்து 12 கிமீ தொலைவில் சாத்தனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே சாத்தனூர், அதன் மேற்கே எட்டு கிமீ வரை அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கடல் பகுதி பரவி இருந்ததை புவியியல் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இக்கால கட்டத்தை புவியியலில் க்ரிடேஷஷ் காலம் என அழைப்பர். அந்த கால கட்டத்தில் இப்பகுதியில் கடலில் வாழும் பல […]

angusam 22/11/2017

நண்பர்களின் கேலி பேச்சு தான் எனக்கு கிடைத்த டானிக்   திருச்சி மாவட்டம் துறையூரை  அடுத்துள்ள டி.களத்தூர் பகுதியை சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (18). டிப்ளமோ படிக்கிறார். இவா் தன்னுடைய உடம்பை ரப்பா் போன்று முருக்கி, சுறுக்கி பின்னி பிணைந்து சாகசம் செய்யும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்தி வைத்துள்ளார். இது பற்றி நம்மிடம்….  என்னோட 2 ஆம் வகுப்பு படிக்கும்  போதே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடும் சாகச நிகழ்ச்சிகளை  தொடர்ந்து பார்த்ததால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் ஆங்கில […]

angusam 07/11/2017

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், செங்கோட்டை அருகேயுள்ள, காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டிக் கொடுமையை உலகறியச் செய்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை வட்டியை மட்டுமே கட்டி வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த […]

angusam 21/06/2017

கருமண்டபம் குழந்தை ஏசு ஆலயத்திற்கு  சொந்தமான முன்புற இடத்தை  திருச்சி மறைமாவட்ட பிஷப் மற்றும் பிற மறை மாவட்ட 5 பிஷப்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி  திருமண மண்டபம் கட்ட முயற்சி செய்து ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதை எதிர்த்து திருச்சி மறைமாவட்ட பங்குமக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு, ஆரம்ப கட்ட வேலையை நிறுத்தி மாதா சுருபத்தை அந்த இடத்தில் நிறுவி போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு ஆயர் அலுவலகத்தல் […]

angusam 25/05/2017

திருச்சி ஐயப்பன் கோவிலரு்கே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஜவுளிக்கடை குப்பைகளைக் கொட்டியுள்ளனர். அங்கே உள்ள ராம்ஸ் மாரிஸ் அடுக்கு மாடிகுடியிருப்பில் ஜவுளிக்கடை உள்ள நிலையில் இந்தக் காரியத்தை யார் செய்திருப்பார் என்பது கண்கூடு.   ஊருக்குள் ஓடும் வாய்க்காலையும் சாக்கடையாகவும், குப்பைத் தொட்டியாகவும் மாற்றும் இந்த வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கலாமே. அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நீரையும் காற்றையும் மிச்சம் வைக்க வேண்டாமா  என்கிற ஆதங்கத்துடன் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.சி. […]

angusam 22/05/2017

காங்கிரஸ் இனி மெல்ல சாகும்!….  சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசு உப்புக்கு விதித்த வரியைக் கண்டித்து 1930 ஏப்ரல் 13 முதல் 30ம்தேதி வரை காந்தியடிகள் குஜராத் மாநிலம் தண்டி கடற்கரையில் சத்தியாகிரகம் நடத்தினார். அதேவேளையில்தமிழகத்தில் ராஜாஜி தலைமையில், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று உப்பு அள்ளும் போராட்டம் நடைபெற்றது. திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையில் தொண்டர்களுடன் தொடங்கிய யாத்திரை குழுவினர் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக ஏப்ரல் 30-ம் தேதி […]

angusam 21/05/2017

149 வருட பழமையான காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்…? திருச்சியின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குவது திருச்சி காந்தி மார்க்கெட். தற்போது இந்த மார்கெட் நகரைவிட்டு விடைபெறப்போகிறது. எப்போதும் கூட்ட நெரிசல், ஒருபக்கம் உழைப்பாளர்கள் வியர்வை வாசனை என மக்கள் கூட்டம் அதிகம் காணும் காந்திமார்க்கெட் இல்லாத ஒரு இடத்தை நினைத்து கொஞ்சம் பாருங்கள். காந்தி மார்க்கெட் வரலாறு மிக நீண்டது. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் […]

angusam 20/05/2017

மக்கள் செல்வாக்கு பெற்ற ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ஈரோட்டில்மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டாதது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் பல்வேறு துறைகள் சரியாக இயங்காததால் கடன் […]

angusam 18/05/2017

அநாகரிகமாக அரசியல் செய்து பிழைப்பு நடத்த அதிமுக அரசு முன்வரக்கூடாது திருச்சி. கே.என்.நேரு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படும் பணிகளுக்கு ஆங்காங்கே மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாத “பினாமி” அதிமுக அரசு திருச்சியில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் மூலமாக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. திருச்சி தென்னூரில் உள்ள அருள்மிகு பெரியநாச்சியம்மன் கோயில் குளத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தூர் வாரி அந்தப் பணிகள் ஏறக்குறைய முடியும் […]

angusam 16/05/2017

திருச்சி கருமண்டபம் செல்வம் நகர் பகுதியில் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபை உள்ளது. இதை சுற்றி காலியிடங்களும் உள்ளது. இந்த சபைக்கு சொந்தமான இந்த இடத்தை ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக விஜிபி நிருவனத்துடன் கடந்த 2011ம் ஆண்டு அந்த ஏசி சபையின் மூத்த போதகர் ஒரு ஒப்பந்த போட்டார். இந்த ஒப்பந்தத்தின் படி விஜிபி நிருவனம் 6 கோடியே 88 இலட்சத்தை வங்கியின் மூலம் அந்த சபைக்கு செலுத்தியது. இந்த நிலையில் மீதமுள்ள ரூபாய் […]

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 05/05/2017

திருச்சி தில்லைநகர், பாலக்கரை, உறையூர், வரகனேரி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரண்டு வந்திருந்த பொதுமக்கள் தில்லைநகரில் செயல்பட்டு வந்த ஜி.எம்.ஜி. ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சரமாரியாக புகார் கூறினார்கள். அந்த நிறுவனம் தங்களிடம், லால்குடி அருகே மற்றும் சோமரசம்பேட்டை பகுதிகளில் வீட்டுமனை வழங்குவதாக கூறி தவணை முறையில் மாதாமாதம் பணம் வசூலித்ததாகவும் பணம் கட்டி முடித்த பின்னர் வீட்டுமனையை பதிவு செய்து தரவில்லை என்றும், தற்போது அந்த நிறுவனம் மூடிக்கிடக்கிறது. அதன் உரிமையாளர்களும், […]

angusam 03/05/2017

குழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது – மனம் திறந்த குழந்தைகள் நல திட்ட இயக்குநர் நம்முடைய குழந்தைகளையே கவனிக்க நமக்கு நேரமில்லை. ஆனாலும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து அந்தக் குழந்தைகளுக்கு உதவவது எவ்வளவு சிரமம். இந்தப் பணிக்காக  தனது குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, பலக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க காரணமாய் விளங்குகிறார் தமிழக அரசின் திட்டத்தின்கீழ் இயங்கும் “சியர்ஸ் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும்  பெர்லின். நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து […]

angusam 03/05/2017

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெரு சங்கர்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 35). இவருடைய மனைவி தெய்வானை(34). இந்த தம்பதிக்கு குணசேகரன்(9), நிஷாந்தினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் கே.கே.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். விஸ்வநாதன் திருச்சி ஸ்ரீரங்கம் ‘பூ‘ மார்க்கெட் அருகே சாத்தாரவீதியில் செருப்புகடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று […]

angusam 01/05/2017

திருச்சியில் அ.தி.மு.க. கட்சிகளுக்குள் மோதல் உருள போகும் தலைகள் பரபரப்பு பின்னணி !   அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதவி விலக்கோரி, அமைச்சரிடமே மனுக்கொடுத்த தினகரன் ஆதரவாளர்களும், அமைச்சர் ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமைச்சர் வெல்லமண்டி ஆதரவாளர் என்று வெளிப்படையாக தெரிந்தாலும் அவர்களை அடிக்க சொன்னது என்னவோ திருச்சி எம்.பி குமார் புது குண்டை தூக்கி போடுகிறார்கள் கட்சிகாரர்கள்.   திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில், […]