உஷ்ஷ்ஷ்…..

angusam 18/07/2017

கூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் ! அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது.   சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து […]

angusam 25/06/2017

உல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி   மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். ,   சென்னை ஓட்டேரி திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா(வயது 30). பிரபல ரவுடி. இவர், மாதவரம் தணிகாசலம் நகர், 2–வது குறுக்குத் தெருவில் தனது கள்ளக்காதலியுடன் தங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் […]

angusam 14/05/2017

22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது ! சமீபகாலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் தைரியமாக கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையர்கள். மாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் 22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 110 பவுன் நகைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.     போலீசார் ரோந்து சென்னையை அடுத்த மாதவரம் மாத்தூர் மஞ்சம்பாக்கம் […]

angusam 03/05/2017

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெரு சங்கர்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 35). இவருடைய மனைவி தெய்வானை(34). இந்த தம்பதிக்கு குணசேகரன்(9), நிஷாந்தினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் கே.கே.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். விஸ்வநாதன் திருச்சி ஸ்ரீரங்கம் ‘பூ‘ மார்க்கெட் அருகே சாத்தாரவீதியில் செருப்புகடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று […]

angusam 01/05/2017

திருச்சியில் அ.தி.மு.க. கட்சிகளுக்குள் மோதல் உருள போகும் தலைகள் பரபரப்பு பின்னணி !   அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதவி விலக்கோரி, அமைச்சரிடமே மனுக்கொடுத்த தினகரன் ஆதரவாளர்களும், அமைச்சர் ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமைச்சர் வெல்லமண்டி ஆதரவாளர் என்று வெளிப்படையாக தெரிந்தாலும் அவர்களை அடிக்க சொன்னது என்னவோ திருச்சி எம்.பி குமார் புது குண்டை தூக்கி போடுகிறார்கள் கட்சிகாரர்கள்.   திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில், […]

angusam 29/04/2017

படித்த கல்லூரிக்கு 1கோடி வழங்கிய முன்னாள்  மாணவர்கள். தாங்கள் படித்த கல்லூரிக்கு அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 1கோடி வழங்கி உள்ளார்கள். திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லுரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு மார்ச் 18-ம் தேதி அன்று சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியுல் புதிதாக பொறுப்பேற்றுள்ள என்.ஐ.டியின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கலந்துகொண்டார். முன்னாள் மாணவர்கள் சார்பில் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டீமலும் முன்னால் மாணவர் சங்கத்தின் மூலம், தற்போது என்.ஐ.டியில் கல்வி பயிலும் […]

angusam 25/04/2017

கேரளா கிளி கிடைக்குமா ? திருச்சி போலிஸ் என மிரட்டி ஆசாமி கைது !   திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சுபா ஓட்டலுக்கு இரவு டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வேகமாக விரைப்பாக நடந்து சென்றார். அவர் அங்கு பணியில் இருந்த விடுதி ஊழியர்களிடம் கேரளா கிளி கிடைக்குமா ? ஒரு கண்ணை சிமிட்டியிருக்கிறார். அதற்கு அவரிடம், விடுதி ஊழியர்கள்அவசர அவசரமாக அலறி போய் சார் து அதெல்லாம் கிடையாது, நீங்க தப்பா […]

angusam 23/04/2017

இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் angusam.com  வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின்  தொடர் – 2. ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் […]

angusam 16/04/2017

இவங்கள விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா- திகில் கிளப்பும் திருச்சி திருடர்கள் தொடர்-1   ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது   […]

angusam 16/04/2017

திருச்சியில் தங்க சங்கிலி பறிக்கும் கில்லி பைக் திருடர்கள் கைது !. திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.   திருச்சி மாநகரில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]

angusam 06/04/2017

  பல கட்ட அறிக்கை போர்களுக்கு பிறகு   அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கிறது.    தமிழகத்தில் உள்ள 534 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலைமை பொறுப்பாக உள்ள துணைவேந்தர் பதவி நியமனம் செய்வதில் சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதுவரை பொறியியல் சேர்க்கையே நடக்ககூடாது என தொடர்ந்து    அறிக்கை  வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.  இந்த  தொடர் […]

angusam 05/04/2017

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மனைவி, மாமியாரை செல்போனில் மர்மநபர்கள் மிரட்டுவதாக திருச்சி சிவா எம்.பி.யின் மகன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். திருச்சி சிவா எம்.பி.யின் (தி.மு.க.) மகன் சூர்யா சிவா.  தனது காதல் மனைவி அதீனா பிரதீஷா, மாமியார் பிரேமம் குமாரி மார்ஷல் ஆகியோருடன் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சூர்யா சிவா கூறியதாவது:- நான் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் எனது மனைவியை காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டேன். […]

angusam 01/04/2017

திருச்சி வழக்கறிஞர்கள் மோதல்  –  4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நலன் காப்பதற்காக தி திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி அட்வகேட் அசோசியேன் செயல்பட்டு வருகிறது. தற்போது வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சனையால் காவல்துறையில் வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி அவதூறான கடிதம் வர பெண் வழக்கறிஞர்கள் சங்கம் […]

angusam 03/02/2017

தொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி இதழ்.. ஆக்சன் காவல்துறை… திருச்சி போலீஸாருக்கு  ராயல் சல்யூட். திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறியவரும் தொடர் திருட்டு மற்றும் தாலிச்செயின் பறிப்புகள் குறித்து நம்ம திருச்சி  இதழில் கடந்த மூன்று இதழ்களில் மிக விரிவாக வெளியிட்டிருந்தோம். நாம் எழுதியதைபோலவே, ஆடம்பர வாழ்க்கைக்காக கல்லூரி மாணவர்கள் தாலி செயின் பறிப்புகளில் ஈடுபட்டதும், அவர்களின் தலைவனான துரை கைது செய்யப்பட்டுள்ளான். இந்த கும்பலிடமிருந்து சுமார் 300 பவுன் மற்றும் எடை எடையாக நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

angusam 04/10/2016

சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்தில் செல்போன், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். பேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஏராளமானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடர் போல் […]