கல்வி

angusam 28/04/2017

சலுகை கட்டத்தில் புகழ் பெற்ற மெட்ரிக் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டுமா ? உடனே விண்ணபிக்கவும். சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் சேர திருச்சி மாவட்டத்தில் 4,143 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட […]

angusam 06/04/2017

  பல கட்ட அறிக்கை போர்களுக்கு பிறகு   அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கிறது.    தமிழகத்தில் உள்ள 534 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலைமை பொறுப்பாக உள்ள துணைவேந்தர் பதவி நியமனம் செய்வதில் சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதுவரை பொறியியல் சேர்க்கையே நடக்ககூடாது என தொடர்ந்து    அறிக்கை  வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.  இந்த  தொடர் […]

angusam 15/01/2017

உருளை மூலம் உரம் உற்சாகத்தில் மாணவர்கள் ! ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி உயிர் தொழிற் நுட்பவியல் துறை மாணவர்கள் உருளை மூலம் உரம் தயாரித்து வருகிறார்கள். பிளாஸ்டிக் உருளையினை படுக்க வசத்தில் வைக்குமாறு வடிவமைத்து கொள்ள வேண்டும். படுக்கை வசத்திலேயே கழிவுகளை கொட்ட உருளையில் செவ்வக வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும் -வீட்டில் பயன் படுத்திய பின் உள்ள காய்கறி கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் உருளையில் போட்டு நீர் […]

angusam 05/01/2017

இளம் கணித வல்லுநர்களுக்கான விருது வழங்கும் விழா.ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை கணித ஆராய்ச்சி துறை சார்பில் இளம் கணித வல்லுநர்களுக்கான விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கணித துறைத் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம் துவக்க உரையாற்றினார் .முதல்வர் முனைவர் ராதிகா தலைமையுரையாற்றினார். தேசியக் கல்லூரி முதுநிலை கணித ஆராய்ச்சித் துறை இணை பேராசிரியர் முனைவர் முத்துராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றி, இளம் கணித வல்லுநர்களுக்கு பாராடடுச்சான்றிதழும், […]

angusam 03/01/2017

பாட்டில் கார்டன் !  அசத்தும் திருச்சி கல்லூரி மாணவர்கள் ! நவநாகரீக உலகில் உணவகத்திற்கு செல்லும் போது நெகிழி புட்டிகளை நோக்கியே கைகள் நீழ்கின்றது. இந்த நுகர்வு கலாச்சாரம் ஆபத்தானது இதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா , துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி உள்ளிட்டோர் ஆலோசனைப்படி நெகிழி பை மற்றும் பாட்டில் பயன்பாட்டினைத் தவிர்க்க வேண்டுமென்றும், அப்படி பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட […]

angusam 28/12/2016

இந்தியாவிற்கே வழிகாட்டும் மணப்பாறை மாணவர்கள்   இந்தியாவின் மிகமுக்கியமான சவாலாக “பொது சுகாதாரம்” உள்ளது  என்றார் மகாத்மா காந்தி. இன்றுவரை பெரும்பாலான மக்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி போய் சேரவில்லை என்பதே  எதார்த்தம்.  இன்னமும் சுமார் 638 மில்லியன் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்கிறது புள்ளிவிபரங்கள். ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் வயிற்றுப் போக்கினால் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல்  இறப்பதாக அதிர்ச்சி தருகிறது இன்னொரு புள்ளிவிபரம். இந்நிலையில் மணப்பாறை பள்ளி மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் […]

angusam 27/12/2016

நீட் தோ்வை எதிர்கொள்ள மாணவா்களே தயாரா ? நீட் மருத்துவ நுழைவு தோ்வு, மாணவர்களுக்கு அவசியம் என்பதைவிட தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பல மாநிலங்கள் எதிர்த்தும்கூட.உச்சநீதிமன்றம் நீட் மருத்துவ நுழைவு தோ்வு நடத்தவும், அதன் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இப்போது இந்த தோ்வை தமிழிலும் எழுதலாம் என  அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 53ஆயிரம் டாக்டர் சீட்டுகளில் பாதிக்குமேல் தனியார் வசமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா […]

angusam 04/11/2016

தனி மனிதனுக்கு சுயபரிசோதனை என்பது மிக அவசியம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் கூறினார். ஆலோசனை மையம் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல்துறை காஜாமலை வளாகத்தில் குடும்ப மற்றும் வளரிளம் பருவ ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் தலைமை தாங்கி, ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சுயபரிசோதனை எந்த படிப்பையும் இரண்டு விதமாக பயில […]

angusam 31/08/2016

திருச்சி புனித வளானார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியின் 173ம் ஆண்டு விழா கடந்த 27ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் சீனிவாசன், […]

jefferywinneke 19/08/2016

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24–ந்தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை ராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. […]

jefferywinneke 16/08/2016

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம் தேதி தூயவளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம், ஈக்விடாஸ் நுண்கடன் நிறுவனம்,விஷன் இந்தியா, வேலி மென்பொருள் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாமை நடத்துகின்றன. முகாமில் 1500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.இளநிலை,முதுநிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளில் தேர்ச்சி […]

jefferywinneke 09/08/2016

2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்விற்கு செப்டம்பர் 8 வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண்: 15/2016 விளம்பர எண்: 445/2016 தேதி: 09.08.2016 பணி: Junior Assistant (Non – Security) – 2345 […]

jefferywinneke 05/08/2016

தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், ‘ஓட்டல் மேனேஜ்மென்ட்’ படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய் கட்டணத்தில், இங்கு படிக்கலாம். இதுகுறித்து, […]

jefferywinneke 05/08/2016

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை பள்ளியில் நடைபெறும். அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் […]