கல்வி

angusam 20/06/2016

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ் வழிக் கல்வி.  சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?’ எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ,எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை. இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக […]

angusam 19/06/2016

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை       அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.     அரசு மற்றும் அரசு உதவி […]

angusam 18/06/2016

திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், வயர்மேன், மோட்டார் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில், வெல்டர், மெக்கானிக் (டீசல்), கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டெய்லர் ஆகிய […]

angusam 15/06/2016

தமிழக பொறியியல் கல்லூரிகளின் அவமானம் அம்பலம் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் 522 பொறியியல் கல்லூரிகள் நடத்தப்படுகிறது. நேற்று நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்ச்சி பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. 90 சதவீதத்தை தாண்டியது 9 கல்லூரிகள் தான் 80 முதல் 90 சதவீதம் தாண்டியது 25 கல்லூரிகள் தான் 296 கல்லூரிகள் 60 முதல் 70 சதவீதமே பெற்றுள்ளது. 195 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி சில கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தை சதவீதமாக பெற்றுள்ளது. விழுப்புரத்தில் உள்ள […]

angusam 15/06/2016

இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க,ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.அனைத்து கல்லுாரிகளும்,தங்களது உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களின் விவரம் அடங்கிய பட்டியல் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். இந்த விவரங்களின் படி, கல்வியியல் பல்கலை துணைவேந்தர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட குழுக்கள், கல்லுாரியில் நேரடி ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், […]

angusam 14/06/2016

பள்ளி, கல்லூரிப் பாடங்களைக் கருத்தூன்றிப் படித்தால் மட்டுமே வேலைக்குரிய தேர்வுகளில் சிறந்த பலனை அடைய முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், மத்திய/மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுமுறைகள். குறிப்பாக, சிவில் சர்வீஸஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் போன்ற பதவிகளுக்கான தேர்வுகள். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பலரும் கலந்துகொண்டு, தனக்கோர் இடத்தையும் பிடித்துவிடுகிறார்கள். இருப்பினும், தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை சொற்ப சதவிகிதத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது  உண்மையா? இந்தியக் […]

angusam 13/06/2016

தமிழக அரசு வழங்கிவரும் விலையில்லா மடிக்கணினி கிடைக்க வாய்ப்பில்லாததால், பிளஸ் 1 கணினி அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்கள் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகள், அனைத்து வகை அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாகக் கொண்ட பல பிரிவுகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வரை இப்பிரிவுக்கு கடும் கிராக்கி நிலவிவந்தது. ஆனால், நிகழாண்டில் அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமே இப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை […]

angusam 13/06/2016

2016-17ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் 3 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக எம்.சி.ஏ., பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ, கணினி அறிவியியல், இ.சி.இ. உள்ளிட்ட கணினி படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் பல பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட படிப்புகளைக் கைவிடுவதும், சில பொறியியல் […]

angusam 13/06/2016

கோவை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. ஆசிரியர்களை நியமித்து அந்த பாடப் பிரிவை மீட்டெடுக்க முன்னாள் மாணவர்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் நிதியுதவி கேட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 900-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்பில் இரண்டு அறிவியல் பிரிவுகளும், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் ஆகிய பாடங்களைக் கொண்ட […]