காலேஜ் கேம்பஸ்

angusam 23/04/2017

3 வயது சிறுவனை பலி எடுத்த மாத்தூர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி பேருந்து !   திருச்சியில், M.I.T. கல்லூரி பஸ் மொபட் மீது மோதியது. மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி தந்தை கண்முன்னே பரிதாபமாக இறந்தான். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 27). இவருடைய மனைவி அழகுமீனா. இவர்களுடைய மகன் ஆகாஷ் கண்ணா(வயது 3). அருண்குமார் திருச்சி ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள […]

angusam 04/04/2017

2017 ஆம் ஆண்டின் மத்திய மனித வள மேம்பாடுத் துறையின் மிகச் சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் (National Institutional Ranking Framework) திருச்சி பிசப் ஹீபர் கல்லூரி இந்திய அளவில் நான்காவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. சிறந்த கல்விச் சேவை, தரமான உட்கட்டமைப்பு என பல்லாண்டு காலமாக ஹீபர் இந்திய அளவில் மிளிர்கிறது தொடர்ந்து கல்லூரியினை சர்வதேச அளவில் வழி நடத்திச் செல்லும் எமது கல்லூரி முதல்வருக்கு மேனாள் மாணவர்கள் சார்பின் என் […]

angusam 20/03/2017

நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசினார். திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி தின விழா நடந்தது. கல்லூரியின் ஆட்சி மன்ற குழு செயலாளர் ராமநாதன் வரவேற்றார். தலைவர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பொருளாளர் கோபிநாதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன்  பேசும் போது.. கல்வி, அறிவு தான் நாட்டின் செல்வங்கள். நாட்டில் […]

angusam 16/03/2017

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றத்தை தவிர்க்க நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.   திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இணையதளம் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.   இதில் கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது: பொதுமக்களிடையே இணையதளம் வர்த்தகம் பெருகி வருகிறது. அப்படி வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு […]

angusam 15/03/2017

நேற்று நான் சாம்பியன்… இன்னைக்கு பல சாம்பியன்களை உருவாக்குகிறேன். தமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் திருச்சி  ஞானசுகந்தி. பல மாணவர்களை விளையாட்டில் ஜெயிக்க உந்து சக்தியாக விளங்கும் தமிழகத்தில் மாணவர்களுக்கான முதல் பெண்பயிற்சியாளரும், திருச்சி வீராங்கனையுமான ஞானசுகந்தியை நேரில் சந்தித்து பேசினோம். திருச்சி புள்ளம்பாடி தான் சொந்த ஊா். அப்பா ஆஷ்வால்டின், அம்மா ஈக்லின், அப்பா டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றியதால் பள்ளிப் படிப்பை டால்மியா பள்ளியில் படித்தார். இயல்பாகவே விளையாட்டின மீது ஆர்வம் இருந்ததால் சிறுவயதில் […]

angusam 15/03/2017

ஜீனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ராக்டவுன் அமைப்பு 2017 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்வி , வேளாண்மை , விளையாட்டு, சமூக சேவை , தொழில் முனைவோர் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கியது. ஆண்டவன் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகாவிற்கு வித்யா ரத்னா புரஸ்கார் விருது .                     சர்வதேச ஜேசி ராக் டவுன் அமைப்பு வழங்கியது. ஸ்ரீமத் ஆண்டவன் கலை […]

angusam 15/03/2017

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல்தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை  இணையத் தமிழ் பயிலரங்கை கல்லூரியில் நடத்தியது. கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம் தலைமையுரையாற்றினார்முதல்வர் முனைவர் ராதிகா துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஜோதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இணையத் தமிழ் குறித்து பேசுகையில், மொழி, இனம், பாகுபாடு இன்றி கணிப் […]

angusam 25/02/2017

முளைத்தால் மரம் இல்லையெனில் உரம்” விதைப்பந்துகள் இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், திருச்சியில் இளைஞர் ஜெயராஜ் அஜய் என்பவர் தன்னுடைய பிறந்தநாளில் தன்னார்வலர் அமைப்புகள் துணையோடு விதை பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சியில் 2 நிமிடங்கள் 17 விநாடிகளில் 2017 விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி . […]

angusam 25/02/2017

திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் ஆனது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் திருச்சி,கோவை, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. புதன்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டநேர முடிவில் […]

angusam 13/02/2017

அ.ஜோன் டெல்பி முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பெரியார் மருந்தியல் கல்லூரி – திருச்சி மாமியார்க்காரி கத்திக்கொண்டு இருந்தாள் ! என் பையன் சிங்கம்டி. உன்னைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சேன்னா, எண்ணி பத்தாவது மாசத்தில் புள்ளையக் கொடுத்துருவான். ஏதோ போனாப்போகுது, ஆதரவில்லாத பெண்ணாச்சே, நாமளும் ஒதுக்கிட்டா, வாழவழியில்லாமல் தவிச்சு நிப்பியேன்னு யோசனை சொன்னோம்னா ரொம்ப தான் ராங்கு காட்டிக்கிட்டு நிக்கிறியே ! இசையின்பன் கண்ணம்மா கண்கலங்கி நின்று கொண்டு இருந்தாள். திருமணம் நடந்து ஐந்து […]

angusam 01/02/2017

விவசாயிகளுக்காக திருச்சி டூ சென்னை நடைபயணம் போராடும் இளைய தலைமுறையினர்.. திருச்சி to சென்னை விவசாயிகளுக்கான 5 நாள் நடைபயணம் திருச்சி நீதிமன்றம் அருகே அமைந்திருந்த போரட்டக்களத்தில் இருந்து 19-01-17 அன்று மதியம் 2-00 மணி அளவில்நாங்கள் திரு .மனோஜ தர்மர்  மற்றும் திரு நேதாஜி இளவரசன் ஆகியோர் சென்னை நோக்கி 15 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்திநடைபயணம் மேற்கொண்டோம் . அன்றைய தினம் சமயபுரம் அருகே உள்ள கடை ஒன்றில் ஓய்வுஎடுப்பதற்க்காக நின்றோம் எங்கள் கைகளில் இருந்த வாசகங்களை […]

angusam 30/01/2017

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான திறந்தநிலை யோகா சாம்பியன்ஷிப் போட்டியினை JCI புதுக்கோட்டை சென்ட்ரல், ஆத்மா அறக்கட்டளை இணைந்து புதுக்கோட்டையில் நடத்தியது. யோகாசன சிறப்புப் பிரிவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை வணிகவியல் முதலாமாண்டு மாணவர் ராமகிருஷ்ணன் வெண்கல பதக்கம் பெற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, யோகாசிரியர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டினார்கள்.   ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மையம், […]

angusam 19/01/2017

திருச்சியில் அனைத்து கல்லூரி மாணவர் சுமார் 20க்கும் மேற்பட்ட கலை அறிவியில், பொறியியல் மாணவர்கள். திருச்சி மாநகரின் நான்கு பக்கங்களிலும் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து மிக பிரமாண்டமான பேரணியை நடத்தினார்கள்.   ஆரம்பத்தில் திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் அருண் அவர்கள் மாணவர்களும் பேசி பேருந்தில் ஏறி செல்ல சொல்லி பேச்சு வார்த்தை நடத்தினார். கடைசியில் எங்கள் போலிஸ்காரர்கள் துணையோடு பேரணியாக செல்லுங்கள் என்று சொல்லி மாணவர்களை திருச்சியில் மாநகர் முழுவதும் பேரணியாக […]

angusam 15/01/2017

சாண எரிவாயு தயாரிப்பில் சாதிக்கும் மாணவர்கள் . ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி உயிர் தொழிற்நுட்பவியல் துறை மாணவர்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி ,முனைவர் ஜோதி , துறைத்தலைவர் முனைவர் திருமலைவாசன் உள்ளிட்டோர் வழிகாட்டுதல் படி சாண எரிவாயு தயாரிப்பில் சாதித்து வருகிறார்கள். 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் மாட்டு சாணகரைசல் உணவுக் கழிவு, சம அளவு நீர் கலந்து சோடியம் ஹைட்ராக்சைடு […]

angusam 15/01/2017

காங்கிரீட் கட்டிடங்களில் காய்கறித் தோட்டம் கலக்கும் கல்லூரி மாணவர்கள் . ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி, துறைத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் ஆலோசனையில் காங்கிரீட் கட்டிடங்களில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்கள். பாபிலோன் தொங்கும் தோட்டம் போல் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் சிறு தோட்டம் அமைக்க வேண்டும் என எண்ணம் இருக்கும். […]