காலேஜ் கேம்பஸ்

angusam 15/01/2017

உருளை மூலம் உரம் உற்சாகத்தில் மாணவர்கள் ! ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி உயிர் தொழிற் நுட்பவியல் துறை மாணவர்கள் உருளை மூலம் உரம் தயாரித்து வருகிறார்கள். பிளாஸ்டிக் உருளையினை படுக்க வசத்தில் வைக்குமாறு வடிவமைத்து கொள்ள வேண்டும். படுக்கை வசத்திலேயே கழிவுகளை கொட்ட உருளையில் செவ்வக வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும் -வீட்டில் பயன் படுத்திய பின் உள்ள காய்கறி கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் உருளையில் போட்டு நீர் […]

angusam 15/01/2017

சமூக அறிவியல் புள்ளி விவர தொகுப்பு குறித்த பயிற்சி பட்டறை. ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில் சமூக அறிவியல் புள்ளி விவர தொகுப்பு குறித்த ஒரு நாள் மாநில அளவிலான பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் முனைவர் மெஹராஜ் பானு வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி துவக்க வுரையாற்றினார். […]

angusam 09/01/2017

போதை வலையில் திருச்சி ஐ.டி.ஐ மாணவர்கள்  ! ஒரு எச்சரிக்கை ரிப்போரட் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் அமைந்துள்ளது அரசு ஐ.டி.ஐ. நூற்றுக்கணக்கான ஏக்கர்பரப்பளவில் பிரம்மாண்டமாக அரை நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் நிறுவனத்தில் மெசினிஸ்ட், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன், ட்ராப்ஸ்மேன், டா்னா், மோட்டார் மெக்கானிக், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. 100 சதவீதம் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் மட்டுமே இங்கு இடம்பிடிக்க முடியும் என்றபெருமை கொண்டது. சுமார் 750 […]

angusam 08/01/2017

எனது தோல்விதான்… பலரை ஜெயிக்க வைத்தது…  உருகும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் ஆகாடமி நிறுவனர் விஜயலாதன் சாதனையாளர்கள் பலரும் தோல்வியில் இருந்து மீண்டவர்கள்தான். கடந்த காலங்களில் தோல்வியால் தான் அடைய முடியாத  இடத்தில் பலரை உருவாக்கி அழகு பார்ப்பவர் திருச்சி என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் விஜயலாதன். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்தான் இவருக்குசொந்த ஊர் என்றாலும் இப்போது  தன்னுடைய உழைப்பால் வளர்ந்து நிற்கும் திருச்சி வி.ஐ.பிகளில் ஒருவர். நம்ம திருச்சி இதழின் சாதனையாளர்கள் சக்ஸஸ் பார்முலா பகுதிக்காக  விஜயலாதனை  […]

angusam 05/01/2017

இளம் கணித வல்லுநர்களுக்கான விருது வழங்கும் விழா.ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை கணித ஆராய்ச்சி துறை சார்பில் இளம் கணித வல்லுநர்களுக்கான விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கணித துறைத் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம் துவக்க உரையாற்றினார் .முதல்வர் முனைவர் ராதிகா தலைமையுரையாற்றினார். தேசியக் கல்லூரி முதுநிலை கணித ஆராய்ச்சித் துறை இணை பேராசிரியர் முனைவர் முத்துராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றி, இளம் கணித வல்லுநர்களுக்கு பாராடடுச்சான்றிதழும், […]

angusam 05/01/2017

சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டி சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டியில் சாதனை படைக்கும் வீராங்கனை .ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி வணிகவியல் துறை மாணவி டினோதா சோய் க்வாங் டோ தற்காப்பு கலை  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். டினோதா பள்ளி பயிலும் காலந்தொட்டே தற்காப்பு கலையினை பயின்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பியன் போட்டியில் […]

angusam 03/01/2017

பாட்டில் கார்டன் !  அசத்தும் திருச்சி கல்லூரி மாணவர்கள் ! நவநாகரீக உலகில் உணவகத்திற்கு செல்லும் போது நெகிழி புட்டிகளை நோக்கியே கைகள் நீழ்கின்றது. இந்த நுகர்வு கலாச்சாரம் ஆபத்தானது இதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா , துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி உள்ளிட்டோர் ஆலோசனைப்படி நெகிழி பை மற்றும் பாட்டில் பயன்பாட்டினைத் தவிர்க்க வேண்டுமென்றும், அப்படி பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட […]

angusam 03/01/2017

மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆண்டவன் கல்லூரி மாணவி முதலிடம் .காந்திமதி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான திருக்குறள் போட்டி கோவையில் நடைபெற்றது.13,200 நபர்கள் போட்டியில் பங்கேற்றார்கள். அதில், 133 அதிகாரங்களில் உள்ள 1330 திருக்குறளினை 53 நிமிடங்கள் 32 விநாடிகளில் ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இயற்பியல் துறை முதலாம் ஆண்டு இளங்கலை மாணவி சத்யா முதலிடம் பெற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை […]

angusam 03/01/2017

மண்புழு உரத் தயாரிப்பில் மாணவர்கள் . ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை சார்பில் மாணவர்கள் மண்புழு உரம் தயாரிக்கின்றனர். திடக் கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவு பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டையாக வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 […]

angusam 27/12/2016

நீட் தோ்வை எதிர்கொள்ள மாணவா்களே தயாரா ? நீட் மருத்துவ நுழைவு தோ்வு, மாணவர்களுக்கு அவசியம் என்பதைவிட தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பல மாநிலங்கள் எதிர்த்தும்கூட.உச்சநீதிமன்றம் நீட் மருத்துவ நுழைவு தோ்வு நடத்தவும், அதன் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இப்போது இந்த தோ்வை தமிழிலும் எழுதலாம் என  அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 53ஆயிரம் டாக்டர் சீட்டுகளில் பாதிக்குமேல் தனியார் வசமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா […]

angusam 04/11/2016

தனி மனிதனுக்கு சுயபரிசோதனை என்பது மிக அவசியம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் கூறினார். ஆலோசனை மையம் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல்துறை காஜாமலை வளாகத்தில் குடும்ப மற்றும் வளரிளம் பருவ ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் தலைமை தாங்கி, ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சுயபரிசோதனை எந்த படிப்பையும் இரண்டு விதமாக பயில […]

angusam 04/10/2016

சென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்தில் செல்போன், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். பேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஏராளமானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடர் போல் […]

angusam 04/10/2016

 ஆயிரம்  கனவுகள் தொடர்  நாவல் தொடர் – 3 அந்த குளிரூட்டப்பட்ட அறையில் அருண் காத்துக்கொண்டுருந்தான் அகிலாவிர்க்காக. அருணுக்கு அகிலாவை பார்த்ததில் இருந்தே ஒரு ஈர்ப்பு. அது கண்டிப்பாக காதல் இல்லை . அவள் ஏன்  அன்று ஓடி வந்தாள் என்ற ஆர்வம் தான் அந்த ஈர்ப்புக்கு காரணம் என்று உணர்ந்தான். கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தான். மணி ஐந்து தாண்டி இருந்தது. அவள் வருவாளா என்று அவனே தனக்குள் கேட்டுக்கொண்டான்.         […]

angusam 28/09/2016

* தனியாக வீடு எடுத்து உல்லாசம்; * நண்பர்களுக்கும் சப்ளை செய்தது அம்பலம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகி, 15க்கும் ேமற்பட்ட பணக்கார பெண்களை மயக்கி, அவர்களிடம் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இதற்காக தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. சென்னை சிந்தாதிரிபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், மயிலாப்பூர் […]

angusam 16/09/2016

இப்படி கொலை செய்வதுதான் காதலா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில்  இரண்டு இளம் பெண்கள் படுகொலை, ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்ய முயற்சி, புதுவையில் இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்… என தொடர்ச்சியாக நிகழ்ந்த மனித மிருகங்களின் கொலைவெறிச் செயல்கள். பகீர் கொலை-1 மதுரை மாவட்டம் மானகிரியைச் சேர்ந்தவர் சோனாலி. கரூர்-ஈரோடு ரோட்டிலுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் மாணவியான இவர், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். […]