க்ரைம்

angusam 16/04/2017

திருச்சியில் தங்க சங்கிலி பறிக்கும் கில்லி பைக் திருடர்கள் கைது !. திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.   திருச்சி மாநகரில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]

angusam 11/04/2017

திருச்சி சிக்னலில் தீப்பிடித்த கார் தப்பிய திருச்சி கல்லூரி நிர்வாகி ! இந்த சம்பவத்தில் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி மற்றும் டிரைவர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள வெள்ளிவாடியில் தி நியு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியின் நிர்வாகியை ஏற்றிக்கொண்டு தில்லைநகரில் இருந்து ஒரு கார் நேற்று காலை ஒத்தக்கடை முத்தரையர் சிலை வழியாக இனாம்குளத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. காரை இனாம்குளத்தூரை சேர்ந்த சோலைராஜ் என்பவர் ஓட்டினார். இந்த […]

angusam 10/04/2017

நீதிமன்றத்தை கலங்கடிக்கும் மர்ம கடிதம் !. அதிர்ச்சியில் வழக்கறிஞர்கள் .   சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு தரப்பட வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்பு சட்டம். சட்டம் பயின்று வழக்குரைஞர்களாக பணியாற்றுபவர்களையே குறி வைத்து மர்ம மனிதன் எழுதிய மர்ம கடிதத்தால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும், பெண் வழக்கறிஞர்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள். 22-3-17 அன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கு தபால் வருகிறது. அதேப் போல பெண் வழக்கறிஞர்களுக்கும் தபால் வருகிறது. தபாலை […]

angusam 01/04/2017

திருச்சி வழக்கறிஞர்கள் மோதல்  –  4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நலன் காப்பதற்காக தி திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி அட்வகேட் அசோசியேன் செயல்பட்டு வருகிறது. தற்போது வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சனையால் காவல்துறையில் வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி அவதூறான கடிதம் வர பெண் வழக்கறிஞர்கள் சங்கம் […]

angusam 28/03/2017

”மராமத்து” செய்ய வேண்டிய மனிதநேயம் அதிகாலை  6.14க்கு  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெளியே கண் பார்வையற்ற அப்பாஸ்  பிரசவ வேதனையில்  துடிக்கும் நிறைமாத கர்பிணியான தன் மனைவி பிரிதாவுடன் மெதுவாக நகர்ந்து கொண்டே ”இங்க பிரசவ வார்டு எங்கே இருக்கு ?” என  கேட்டுக்கொண்டே  உள்ளே சென்றார். அப்போது பிரசவ வார்டில் பணியில் இருந்த அந்த 3 செவிலியர்கள் டூட்டி 7 மணிக்கு முடிய போகுது சீக்கிரம் கிளம்பணும் என்று அவசர அவசரமா எல்லாத்தையும் எடுத்து வைத்துக்கொண்டே […]

angusam 20/03/2017

பெண்களை குறிவைத்து வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது! சென்னை அசோக் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் போரில் கூடுதல் கமிஷனர் சங்கர் அறிவுறுத்தல் பேரில் இணை கமிஷனர் அன்பு துணை கமிஷனர் சரவணன் உத்தரவுப்படி அசோக்நகர் உதவி கமிஷனர் அரிக்குமார், அசோக் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அசோக் நகர் […]

angusam 03/02/2017

தொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி இதழ்.. ஆக்சன் காவல்துறை… திருச்சி போலீஸாருக்கு  ராயல் சல்யூட். திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறியவரும் தொடர் திருட்டு மற்றும் தாலிச்செயின் பறிப்புகள் குறித்து நம்ம திருச்சி  இதழில் கடந்த மூன்று இதழ்களில் மிக விரிவாக வெளியிட்டிருந்தோம். நாம் எழுதியதைபோலவே, ஆடம்பர வாழ்க்கைக்காக கல்லூரி மாணவர்கள் தாலி செயின் பறிப்புகளில் ஈடுபட்டதும், அவர்களின் தலைவனான துரை கைது செய்யப்பட்டுள்ளான். இந்த கும்பலிடமிருந்து சுமார் 300 பவுன் மற்றும் எடை எடையாக நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

angusam 03/02/2017

திருச்சியில் மக்களை ஏமாற்றும் போலி டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை – டி.சி மயில்வாகணன்    வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூலி தொழிலாளிகளாக சென்று அடிமைபட்டும் மர்மான முறையில் இறந்து உடல் கூட திரும்ப கிடைக்க முடியாத மோசமான சூழ்நிலைநிலையும் கடந்த சில வருடங்களில் படித்த இளைஞா்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனை. அதிலும் வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி போவது ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினா் வெளிநாட்டின் மீதானமோகத்தில் உள்ளவர்கள், இன்னும் சிலா் தன்னுடைய தகுதிக்கு […]

angusam 02/02/2017

காதலி பிரிந்ததால் கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார்.பின்னர் அவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் ஆதர்ஷ் ( வயது 26). அதே கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருபவர் லட்சுமி. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், சில காரணங்களுக்காக லட்சுமி தனது காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆதர்ஷ் சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று லட்சுமி வகுப்பறையில் சக மாணவிகளுடன் […]

angusam 20/01/2017

கோடிக்கணக்கில் தங்கம் கடத்திய வழக்கில் திருச்சியில் கைது செய்யப்பட்ட மலேசிய நகைக்கடை அதிபர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டில்லிக்கு வரும் விமானங்களில் கிலோ கணக்கில் கடத்தல் தங்கம் அதிகளவில் சிக்கியது. இதை கண்காணித்த டில்லி விமானநிலைய சுங்க துறை அதிகாரிகள் சிக்கியவர்களிடம் அதிரடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் மலேசியாவில் நகை கடை நடத்தி வரும் ராஜேந்திரன்(54) என்பவர் கொடுத்து அனுப்பியதும், பல முறை தங்கம் கொடுத்து […]

angusam 09/01/2017

போதை வலையில் திருச்சி ஐ.டி.ஐ மாணவர்கள்  ! ஒரு எச்சரிக்கை ரிப்போரட் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் அமைந்துள்ளது அரசு ஐ.டி.ஐ. நூற்றுக்கணக்கான ஏக்கர்பரப்பளவில் பிரம்மாண்டமாக அரை நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் நிறுவனத்தில் மெசினிஸ்ட், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன், ட்ராப்ஸ்மேன், டா்னா், மோட்டார் மெக்கானிக், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. 100 சதவீதம் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் மட்டுமே இங்கு இடம்பிடிக்க முடியும் என்றபெருமை கொண்டது. சுமார் 750 […]

angusam 28/09/2016

* தனியாக வீடு எடுத்து உல்லாசம்; * நண்பர்களுக்கும் சப்ளை செய்தது அம்பலம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகி, 15க்கும் ேமற்பட்ட பணக்கார பெண்களை மயக்கி, அவர்களிடம் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இதற்காக தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. சென்னை சிந்தாதிரிபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், மயிலாப்பூர் […]

angusam 16/09/2016

இப்படி கொலை செய்வதுதான் காதலா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில்  இரண்டு இளம் பெண்கள் படுகொலை, ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்ய முயற்சி, புதுவையில் இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்… என தொடர்ச்சியாக நிகழ்ந்த மனித மிருகங்களின் கொலைவெறிச் செயல்கள். பகீர் கொலை-1 மதுரை மாவட்டம் மானகிரியைச் சேர்ந்தவர் சோனாலி. கரூர்-ஈரோடு ரோட்டிலுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் மாணவியான இவர், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். […]

jefferywinneke 01/09/2016

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கல்லூரி மாணவி திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா. இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் மோனிகா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி 3-ம் ஆண்டு […]

jefferywinneke 30/08/2016

கரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் […]