க்ரைம்

angusam 04/01/2016

யாரும் மறந்துவிடவில்லை அந்தக் கொடூர நிகழ்வை. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை  அறிக்கையை 20-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ,.டி. டீம். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். இந்த நிலையில் சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்கும் முயற்சிகளும் விறுவிறுப்பாக அரங்கேறியிருக்கின்றன. செப்டம்பர் 18-ஆம் தேதி தனது கேம்ப் ஆபிஸில் திருசெங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் களமிறங்கிய நாம், நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார் […]

angusam 24/12/2015

நடிகர் சிம்பு – அனிருத் கூட்டணியில் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிம்புவை கைது செய்ய […]

angusam 22/12/2015

அவர்  பெயருக்கு தான் என்.சி.சி. ஆசிரியர் ஆனால் அவர் பணிபுரிந்த காலத்தில் மாணவர்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை.  என்பது தான் அப்பட்டமான உண்மை! தமிழகத்தில் இப்படி ஒரு ஆசிரியரை யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள் அப்படி ஒரு வாத்தியார் திருச்சி ஈ.ஆர். பள்ளியில் இருக்கிறார். அவர் பெயர்  கே.ஆர்.சிவசுப்ரமணியன் என்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அவர் பள்ளியின் என்.சி.சி. பயிற்றுனராக வேலை பார்க்கிறார். மாணவர்களுக்கு தரவேண்டிய சான்றிதழ்களையும் அளிக்கவில்லை. அவர் மாணவர்களுக்கு பயிற்சியின் போது காலையில் […]

angusam 20/12/2015

தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுப் பிரிவுக்கு அஸிஸ்டெண்ட் கமிஷனரோ, டெபுடி கமிஷனரோ போஸ்டிங்கில் இருந்ததில்லை.. முதன் முறையாக விமலா நியமனம். சென்னை, மாதவரம் போலீஸ் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இதுவரை இருந்து வந்த விமலா, இதற்கு முன்னர் சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனர்,  போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர். குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாக காவல் பணியில் இருந்து வந்த விமலா, பதவி உயர்வு பெற்று […]

angusam 20/12/2015

குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கவி. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு மாணவியான இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சாதியை சேர்ந்த இவர்களின் காதல் சங்கவி வீட்டிற்கு தெரியவர, சங்கவியை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கவி நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கிணற்றில் […]