தமிழகம்

angusam 09/01/2017

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் நேற்று கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் சென்னிமலை வழியாக மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் வந்த விஜயகாந்த ரோட்டோரம் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள தென்னை மர நிழலில் நிறுத்த சொன்னார். வீட்டின் முன் தென்னை மர நிழலில் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று […]

angusam 14/11/2016

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் விழா குழந்தைகள் தினவிழாவாக ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேருவின் 128-வது பிறந்தநாள் விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி மாநிலத் […]

angusam 09/11/2016

மோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேர்காணலில் விளக்கிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் […]

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

angusam 02/11/2016

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளன, மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக உள்ளனவா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 139 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 99 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே டாக்டர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் […]

angusam 28/10/2016

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பஸ் கட்டணம் குறித்து கடந்த 19-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த கட்டணத்தையே இந்த தீபாவளி பண்டிகைக்கும் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வசூலிக்கவேண்டும். அதுபோல தீபாவளி பண்டிகை காலமல்லாத மற்ற நாட்களிலும், அதாவது இம்மாதம் 26-ந் தேதி வரை மற்றும் நவம்பர் 1-ந் தேதிக்கு மேற்பட்ட சாதாரண நாட்களிலும், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி […]

angusam 13/10/2016

பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி  தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர்  எனும் இளைஞர் தற்கொலை.  ஜவஹர்,  பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதற்காக கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்து போராடியவர்,  டவரில் ஏறியும் போராடினார். ஆனால் அரசாங்கம் பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக சொன்னதோடு சரி ஒழிக்கும் நடவடிக்கையில்லை. இதனால் மனம் வெதும்பிய ஜவகர்,  கடந்த 10 ந் தேதி ஒரு வீடியோவில் என் […]

angusam 11/10/2016

ரஜினி காந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்தார். இவர், கர்நாடக தலைநகர் பெங்களூரில், அமீகோ எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், ஆப் வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார். விழாவில் பேசிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் பணிவு மிக்கவர், […]

angusam 06/10/2016

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற 24–ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19–ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. இதற்கிடையே இந்த தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை […]

angusam 04/10/2016

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை. இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘www.tnpds.com’ என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விபரங்களை […]

angusam 03/10/2016

நடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளர், காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமூகமாக  தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதற்கு கோபத்துடன் பிரகாஷ்ராஜ், நான் ஒரு திரைப்பட நடிகர். இதொல்லே ராமாயணா” […]

angusam 01/10/2016

அப்பல்லோ மருத்துவமனை வார்டுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நலம் விசாரித்தார். அப்போது பழங்கள் கொடுத்து மிக விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று நேரில் சந்தித்தார். முதல்வருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படுவதையும், அவர் வேகமாக குணமடைந்து வருவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கவர்னர் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து இழப்பு […]

angusam 19/09/2016

வசூல் நாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், 24 ஏ.எம் என்ற நிறுவனம் மூலம் படம் ஒன்றை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணிபுரிகிறார்கள். தற்போது விருவிருப்பான படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், […]

jefferywinneke 10/09/2016

சாதனை நாயகன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர் என்று சொல்லும் மாரியப்பனின் வயது 21 குக்கிராமம் தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு […]

jefferywinneke 09/09/2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான பந்த்தாக மாற்றியுள்ளனர். கேபிள் டிவி சேனல்கள் கட் செய்யப்பட்டுள்ளன, அதேபோல தமிழ் செய்தித்தாள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தினத்தந்தி, தினமணி உள்ளிட்ட 5 தமிழ் பத்திரிகைகள் பெங்களூரில் வினியோகம் செய்யப்படுவது […]