தமிழகம்

tomscratch20042007 03/12/2015

மழையால் பாதித்துள்ள தமிழகத்திற்கு, தனது முதல் மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்க இருக்கிறார், லாலு பிரசாத்தின் மகனும், பீகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், களமிறங்கி வெற்றி பெற்று, நிதிஷ்குமாரின் ஆட்சியில் துணை முதலமைச்சராக இருப்பவர் தேஜஸ்வி. தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், தனது […]

angusam 02/12/2015

பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் மார்க் ஷுகர்பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா சான்னிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். .. அமெரிக்கா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் […]

tomscratch20042007 01/12/2015

பள்ளிக்கூட அரையாண்டு தேர்வுகளை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் […]

angusam 01/12/2015

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் இன்று அலுவலகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த கனமழையை தாங்க முடியாமல் சென்னை நகரம் திணறியது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து […]

angusam 01/12/2015

கிறிஸ்துமஸ் அடுத்து புத்தாண்டு கொண்டாடி கிறிஸ்துவர்கள் மகிழ்ச்சியாக உள்ள இந்நேரத்தில்… “ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை’, “பைபிள் இறைமொழி அல்ல’ என்றெல்லாம் பலவிதமாக விமர்சித்து இயேசு கிறிஸ்துவின் உருவத்தை கோரமாக சித்தரித்ததோடு… ‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல! ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்களே!’என்றும் “கிறிஸ்துவம் மறைந் திருக்கும் உண்மை’’என்ற தலைப்பில் சர்ச்சைக் குரிய புத்தகத்தை இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராமகோபாலன் வெளியிட… சிறுபான்மை தலைவர்களின் மத்தி யில் சீற்றமும் கொந் தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை […]

angusam 01/12/2015

ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு… பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள். இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில் திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது, எங்கோ நடந்தது என்று அதை ஒரு சுவாரஸ்ய தகவலாகப் படிக்காதீர்கள். நமக்கும் நிகழலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்று அறிவுறுத்துகிறார். தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி […]

angusam 29/11/2015

திருச்சி ஜீயபுரம் கடைவீதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மீது குடி போதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திருச்சி ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகில் உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 31). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் திருச்சி நோக்கி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். காரை சதீஷ்குமார் […]

samaraiqi4273 28/11/2015

திருச்சி மாவட்டம் தேவராயனேரி நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (22). இவர் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து 4 நாட்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் இன்று காலை அவர் மூளை சாவு அடைந்ததால் அவர்களுடை உறவினர்களுக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக தருவதாக உறவினர்கள் கொடுத்த உறுதிமொழியின் பேரில் சரவணனின் […]

angusam 27/11/2015

‘என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்’’ என்று படக்குழுவினர் மீது நடிகை  புகார் கூறி உள்ளார்.மோதல்கள்கதாநாயகிகள், டைரக் டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி தனது கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அழுது பிரச்சினையை கிளப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். ‘நய்யாண்டி’ படத்தில் தனுசுடன் நடித்தபோது டைரக்டர் தனது இடுப்பை ஆபாசமாக படம் எடுத்து விட்டதாக நடிகை நஸ்ரியா சர்ச்சையை கிளப்பி ஆவேசப்பட்டார். […]

angusam 27/11/2015

தே.மு.தி.க.வினர் ஊர்வலம் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று காலை மழை வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு ரேஷன் கார்டு நகல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மண்டல அலுவலக வாசலில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆலந்தூரில் மழையால் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்டல அலுவலரிடம் மனு கொடுப்பதற்காக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் பகுதி செயலாளர் நாராயணன் உள்பட […]

angusam 27/11/2015

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான். ஆனால், தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அண்ணாவை பந்தாடியிருக்கிறார் திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன். மாவட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்துதான் அதிரடி பாய்ந்தி ருக்கிறது. இதுபற்றி பேசிய பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர்கள், ‘‘தி.மு.க ஆட்சியில் பணியில் சேர்ந்தவர் அண்ணா. மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்டம் போட்டார். தி.மு.க. ஆட்சியில்  அமைச்சராக  இருந்த  பெரியகருப்பனிடம் பி.ஏ.வாகவும் பணியாற்றினார். […]

angusam 25/11/2015

டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் நண்பர்  வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணு பிரியா கடந்த ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் போலீஸ் உயர் அதிகாரிகள்தான் என்று அவரது […]

angusam 23/11/2015

காவல் துறை உள்ளிட்ட ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த பல துறைகளில், இன்றைக்கு ஏராளமான பெண்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் பணியாற்றி வருகிறார்கள். காவல் துறையில், கான்ஸ்டபிள் தொடங்கி ஐ.பி.எஸ். வரை அனைத்து மட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். சமூகத் தடைகள், சவால்கள் என பலவற்றையும் கடந்துதான் காவல் துறைக்கு அவர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்களில் பலர், இந்தத் துறைக்கு வந்தவுடனே யே பல அதிர்ச்சிகளை சந்திக்கிறார்கள், பல அவமானங்களை எதிர்கொள்கிறார்கள், கடும் வேதனைகளை […]

angusam 21/11/2015

ஒகேனக்கல் சோகம்! சுற்றுலாவின் போது படகுப் பயணம் என்றால்… சமீபத்தில் ஒகேனக்கலில் நிகழ்ந்த படகு விபத்து நிச்சயமாக ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எச்சரிக்கை அலாரம் அடிக்காமல் இருக்காது! மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் மனைவி, அவர்களுடைய மகள் மற்றும் தன்னுடைய மகன் என்று குடும்பத்தினர் ஆறு பேரை நொடிகளில் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், அந்த `திக்திக்’ நொடியின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்தக் கோரவிபத்தில் தன்னுடன் சேர்ந்து உயிர் தப்பிய மனைவி கோமதி, மகன் சச்சின் […]