தமிழக செய்திகள்

angusam 24/05/2018

இன்னும் எத்தனை தோட்டாக்கள் வைத்திருக்கிறாய் எடப்பாடி?   ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் ஓடிய சாலைகளில் இப்போது மனித ரத்தங்கள் கலந்து பாய்கிறது. ஆலையின் நச்சு வாயுக்களை விட பிணத்தின் வாடை நெடிகள் உலகம் முழுவதும் நாறுகிறது. மோடி எடப்பாடியின் ஏவல் ஆட்கள் சுட்ட குண்டுகளில் சிதறியது அப்பாவி மக்களின் மூளைகள். சாலையில் அடிபட்டு சிதறிக்கிடக்கும் கொக்கு குருவிகளை போல பிணவறையில் கிடத்தப்பட்டியிருக்கும் மனித உடல்களை பார்க்கையில் உடல்களில் அமிலம் பாய்ந்தது போல பற்றி எரிகிறது. 10 க்கும் […]

angusam 24/05/2018

சுடச் சொன்னது யார்?   ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு ஆரம்பத்திலே எதிர்ப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக கான்சர் நோயோடு போராட்டம், ஆர்ப்பாட்டம் என அமைதி வழிகளில் போராடிய மக்களுக்கு இன்று துப்பாக்கி குண்டுகளை பரிசாக கொடுத்து இருக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீர் செல்வமும். குண்டடி பட்டு , வாயை பிளந்து, கண் விழித்திரை சொரூகி ரத்தச் செகதியில் செத்து மிதந்து கொண்டியிருக்கும் படங்களை பார்க்கையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனை போலவும், அண்ணனைபோலவும் இருக்கிறது. நெஞ்சியிலும், தலையிலும் குண்டு […]

angusam 22/05/2018

எடப்பாடியை காப்பது ரஜினி தான்     டெல்லியில் உள்ள பிஜேபியின் முக்கியப் பிரமுகர் மூலமாக ரஜினியிடம் பேசியிருக்கிறார்கள். ‘பாஜக நினைப்பதைதான் நீங்க பேசிட்டு இருக்கீங்க. நீங்க சொல்ற ஆன்மிக அரசியல்தானே பிஜேபியின் நோக்கம். அதனால் தமிழ்நாட்டில் நாம இணைந்து களத்தில் இறங்கலாம். நீங்க உங்க விருப்பபடி கட்சி ஆரம்பிங்க. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் தேர்தல் கொண்டுவரோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம். அதுவரை எதுவும் பேச வேண்டாம். தேர்தல் செலவுகளைப் பற்றிக் கவலைப்பட […]

angusam 14/05/2018

பாவம் அவர் சூழ்நிலை கைதி   சவுபா என்கிற சவுந்திரபாண்டி விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் பத்திரிகையாளராக இருந்து இந்த மதுரை மண் குறித்து நிறைய எழுதியவர்.  குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் குறிப்பிட்ட சமூகம் குறித்து முதன் முதலில் விரிவாக எழுதியவர். கருத்தம்மா படத்தின் மூலக் காரணி இவர்.   இவர் எழுதியதால்தால் பெண் குழந்தைகளை பாது காக்க அரசு  தொட்டில் திட்டத்தை தமிழக அரசு கொண்டு […]

angusam 21/04/2018

எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் விபரம். 1) எம்.லோகேஷ், நிர்வாக ஆசிரியர், தாய் பனை பப்ளிகேஷன்ஸ் 2) எச்.நாசர், செய்தி வாசிப்பாளர், சன் நியூஸ் 3) ஜே.சதீஷ் குமார், நிருபர், தினகரன் 4) ஜீவசகாப்தன், ப்ரொடியூசர், நியூஸ் 18 5) சீனிவாசன், கேமராமேன், பாலிமர் நியூஸ் 6) இளையபாரதி, சப் எடிட்டர், இந்தியன் ரிப்போர்ட்டர் 7) வீரமணி, நிருபர், நியூஸ் 18 8 ) டி.பர்தீன், ஸ்க்ரோலிங், கேப்டன் நியூஸ் 9) […]

angusam 17/04/2018

நீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் !   நீட்தேர்வு சமூகநீதிக்குஎதிரானது, மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே கல்வி இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் ஒருபுறமும், நீட்தேர்வு வரும் வரையில் தேர்வு நடக்குமா நடக்காதா என அனைத்து ப்ளஸ்2 மாணவர்கள் ஒருபுறமும்தொடர்ந்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்திக் கொண்டிருந்தனர். இவையனைத்தையும் மீறி கடந்த ஆண்டு தமிழகத்திற்குள் நுழைந்தது நீட்தேர்வு. இதன் விளைவாக மாநில பாடத்திட்டத்தில் படித்த அனைத்து மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.   பலர் 12ம் வகுப்பில் […]

angusam 15/04/2018

பொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான சுகத்தை மட்டும் பார்க்கும் நிலை மாறி,சக மனித உரிமைக்காக போராடினால் மட்டுமே நியாயக் கதவு சற்று அசையும். மக்களுக்காக ஆட்சியா? ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமா… மனித உரிமையில் அடிப்படை தேவைகளில் ஒன்றான உறைவிடம் பறிபோகும் நிலையில், குறிப்பிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளில் அதிகாரம், தர்மத்தை மிதித்துவிட்டு தலை தூக்கும்போது,சட்ட போராட்டங்கள் பொய்த்துப் போகும் போது, பிரதானம் எனும் நிலையே சுக்கு நூறாய் உடைந்திடும் […]

angusam 20/02/2018

சரிகிறதா ?   பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் ! பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தின் கீழ் சென்னை, திருச்சி , கோவை, பெரம்பலூர், திருப்பூர், சமயபுரம், உள்ளிட்ட இடங்களில் கலை அறிவியல் கல்லூரி, மருத்துவகல்லூரி, கர்நாடக மாநிலத்தில் பிஜாப்பூர் சக்கரை ஆலை , தனலெட்சுமி சிட்பண்ட்ஸ், மிகப்பெரிய தொழில் அதிபர்கள் குழுமமாக வளர்ந்து நிற்கிறது. . தனலெட்சுமி சீனிவாசனுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். […]

angusam 19/02/2018

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.   சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளைஞர் தஷ்வந்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். ஆனால், தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 90 நாட்களில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் தஷ்வந்துக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் […]

angusam 22/11/2017

நண்பர்களின் கேலி பேச்சு தான் எனக்கு கிடைத்த டானிக்   திருச்சி மாவட்டம் துறையூரை  அடுத்துள்ள டி.களத்தூர் பகுதியை சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (18). டிப்ளமோ படிக்கிறார். இவா் தன்னுடைய உடம்பை ரப்பா் போன்று முருக்கி, சுறுக்கி பின்னி பிணைந்து சாகசம் செய்யும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்தி வைத்துள்ளார். இது பற்றி நம்மிடம்….  என்னோட 2 ஆம் வகுப்பு படிக்கும்  போதே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடும் சாகச நிகழ்ச்சிகளை  தொடர்ந்து பார்த்ததால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் ஆங்கில […]

angusam 17/11/2017

ஆட்சியைக் கலைச்சிடுவேன்!… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி!…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.   பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]

angusam 17/11/2017

சிவக்குமார் குடும்பத்தில் சர்ச்சையை உண்டாக்கிய ஜோதிகா…  பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தினுடைய டீசர் கடந்த நவம்பர் 15-ம் தேதி வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தையானது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   திரையுலகில் தங்களுக்கு என ஒரு நல்ல பெயரை கொண்டிருக்கிறது நடிகர் சிவக்குமார் குடும்பம். ‘ராமாயணம், மகாபாரதம் என ஆன்மீக சொற்பொழிவு நடத்தும் சிவக்குமாரின் மருமகள், இப்படி பச்சையான கெட்டவார்த்தை பேசுவது […]

angusam 07/11/2017

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், செங்கோட்டை அருகேயுள்ள, காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டிக் கொடுமையை உலகறியச் செய்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை வட்டியை மட்டுமே கட்டி வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த […]

angusam 13/10/2017

மதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன்.   கணக்கு தேர்வில்   குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   அரியானா மாநிலம் பாகதூர்கார்கில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன், ஆசிரியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதற்காக ஆசிரியரை மாணவன் தாக்கிய காட்சி பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. […]

angusam 02/09/2017

மாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு? —————————————————————————————- நியூட்டன் அறிவியல் மன்றம் =================================================== 1) மாணவி அனிதாவுக்கு பொறியியல் கலந்தாய்வில் ஏரோனாட்டிகல் இஞ்சினீரிங் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. மேலும் BVSc என்னும் கால்நடை மருத்துவர் படிப்பிலும் இடம் கிடைத்தது. 2) என்றாலும் இந்த ஆண்டு MBBS கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சோகமான முடிவை எடுத்து விட்டார். 3) மாணவி அனிதா நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 4) மாணவி அனிதா […]