தமிழக செய்திகள்

angusam 18/07/2017

கூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் ! அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது.   சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து […]

angusam 25/06/2017

உல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி   மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். ,   சென்னை ஓட்டேரி திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா(வயது 30). பிரபல ரவுடி. இவர், மாதவரம் தணிகாசலம் நகர், 2–வது குறுக்குத் தெருவில் தனது கள்ளக்காதலியுடன் தங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் […]

angusam 21/06/2017

கருமண்டபம் குழந்தை ஏசு ஆலயத்திற்கு  சொந்தமான முன்புற இடத்தை  திருச்சி மறைமாவட்ட பிஷப் மற்றும் பிற மறை மாவட்ட 5 பிஷப்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி  திருமண மண்டபம் கட்ட முயற்சி செய்து ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதை எதிர்த்து திருச்சி மறைமாவட்ட பங்குமக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு, ஆரம்ப கட்ட வேலையை நிறுத்தி மாதா சுருபத்தை அந்த இடத்தில் நிறுவி போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு ஆயர் அலுவலகத்தல் […]

angusam 04/06/2017

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் திருச்சி சேவை பயிற்சி மையம் சார்பாக மாணவர்கள் சேர்க்கை மற்றும்விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.  தமிழ்நாடு முழுவதும் திறந்த நிலைப் பல்கலைகழகத்தின் மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்வழங்கப்பட்டாலும் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேவை தொண்டுநிறுவனத்தின் இயக்குனர் சேவை.கோவிந்தராஜ், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழத்தின் சார்பில் பேராசியர்வையாபுரி, இரவி மாணிக்கம், வழக்கறிஞர் தர்மராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். திருச்சியில் நடைபெற்றவிழாவில் நேரடி  மாணவ சேர்க்கைக்கான விண் ணப்பத்தினை தமிழ்நாடு திறந்த நிலைப்பம் கலை […]

angusam 04/06/2017

“எங்களை கொன்று விடுவான் என நினைத்து, முகத்தில் திராவகம் வீசி கத்தியால் வெட்டி மகனை கொன்றோம்“ என கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.   கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பாறசாலை கொடவிளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். அவருடைய மனைவி சரசுவதி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது 22), சஜின் (21) என்ற 2 மகன்கள். சந்தோஷ் பாறசாலை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், நண்பர்களுடன் சேர்ந்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்ததாகவும் […]

angusam 02/06/2017

மணமேடையில் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு  தாலி கட்டிய தம்பி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மூத்தவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று காலை திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பு, நலங்கு சடங்குகள் நடத்தி […]

angusam 31/05/2017

அரசியலில்  ரஜினி..  ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி?  அடுத்தக்கட்ட மூவ்  போருக்கு தயாராவோம் என ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுதான் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பரபரப்பு செய்திகள். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து “நம்ம திருச்சி” இதழ் கடந்த பிப்ரவரி முதல்வார இதழில், , “தலைவா தலைமை ஏற்க வா! இதுதான் சரியான நேரம்” எனும் தலைப்பில் தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. இப்போது தி.மு.கவினரும், மு.க ஸ்டாலினும், அ.தி.மு.கவில் ஒரு சிலர் […]

angusam 29/05/2017

தென்னிந்திய உணவு திருவிழா ரம்யாஸ் ஹோட்டலில் உள்ள தென்றல் உணவகத்தில் மே 25 முதல் ஜீன் 11ஆம் தேதி வரை உணவு திருவிழா நடைபெருகிறது. இரவு மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவை நேரில் சென்று கண்டு மகிழ்ந்து, சத்துள்ள, சுகாதாரமான புதிய உணவு வகைகளை ருசித்து மகிழ இன்றே விரைந்து செல்லுங்கள்.   

angusam 25/05/2017

நடிகர் ரஜினியின் புதிய திரைப்படத்திற்கு காலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகமான ‘2.0’ திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்துவிட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கபாலி’ […]

angusam 25/05/2017

கல்யாணம் பண்ணிகிறேன் அனுபவித்து ஏமாற்றினார் என புகார் கொடுத்த காதலி தற்கொலை ! கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜகஜானந்தா தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி ஜோஸ்பின். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயதேவி (வயது 30). இவர் எம்.எஸ்சி. படித்து முடித்து, சிதம்பரத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஜெயராஜும், அவருடைய மனைவி ஜோஸ்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் […]

angusam 23/05/2017

புதுக்கோட்டையில் மாவட்டம் கீரனூர் பகுதியில் நேற்று மாலை பழங்கள் வாங்கி கொண்டு 500 ரூபாய் கொடுத்து சில்லரை பெற்று சென்ற தன்பதியினர் அதே கடைவீதியில் பேன்சி ஸ்டோரில் பொருட்கள் வாங்கி கொண்டு 500 ரூபாயை கொடுத்துள்ளனர். அந்த நோட்டு ஜெராக்ஸ் போன்று உள்ளதாக கூறி அவர்களிடம் வேறு நோட்டு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வேறு நோட்டு கொடுக்காமல் அங்கிருந்து வேனில் தப்பி திருச்சி புறப்பட்டுள்ளனர். இதுக்குறித்து பேன்சி கடை உரிமையாளர் குரல் கொடுத்ததையடுத்து அருகில் இருந்தவர்கள் இருசக்கர […]

angusam 22/05/2017

தானாக ஆட்சியை கலையும் தமிழக அரசு – சமீபத்தில் ஓ.பி.எஸ் பிரதமரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த போது எங்களால் தமிழக அரசு ஆட்சிக்கு பங்கம் வராது. எடப்பாடி தலைமையிலான ஆட்சியை நாங்கள்  கலைக்க காரணமாக இருக்க மாட்டோம் என்று அறிக்கை கொடுத்திருந்தார். சரியா அதற்கு அடுத்த நாள் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தெரியாம் ரகசிய ஆலோசனை நடத்திய எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எழுத்து பூர்வமாக […]

angusam 22/05/2017

காங்கிரஸ் இனி மெல்ல சாகும்!….  சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசு உப்புக்கு விதித்த வரியைக் கண்டித்து 1930 ஏப்ரல் 13 முதல் 30ம்தேதி வரை காந்தியடிகள் குஜராத் மாநிலம் தண்டி கடற்கரையில் சத்தியாகிரகம் நடத்தினார். அதேவேளையில்தமிழகத்தில் ராஜாஜி தலைமையில், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று உப்பு அள்ளும் போராட்டம் நடைபெற்றது. திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையில் தொண்டர்களுடன் தொடங்கிய யாத்திரை குழுவினர் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக ஏப்ரல் 30-ம் தேதி […]

angusam 21/05/2017

149 வருட பழமையான காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்…? திருச்சியின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குவது திருச்சி காந்தி மார்க்கெட். தற்போது இந்த மார்கெட் நகரைவிட்டு விடைபெறப்போகிறது. எப்போதும் கூட்ட நெரிசல், ஒருபக்கம் உழைப்பாளர்கள் வியர்வை வாசனை என மக்கள் கூட்டம் அதிகம் காணும் காந்திமார்க்கெட் இல்லாத ஒரு இடத்தை நினைத்து கொஞ்சம் பாருங்கள். காந்தி மார்க்கெட் வரலாறு மிக நீண்டது. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் […]

angusam 15/05/2017

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களை […]