தமிழக செய்திகள்

angusam 14/05/2017

22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது ! சமீபகாலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் தைரியமாக கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையர்கள். மாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் 22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 110 பவுன் நகைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.     போலீசார் ரோந்து சென்னையை அடுத்த மாதவரம் மாத்தூர் மஞ்சம்பாக்கம் […]

angusam 12/05/2017

சேகர் ரெட்டிக்கு ஜாமீன் ! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக […]

angusam 11/05/2017

நீங்க குடிப்பீங்களா ? சிறுவனின் கேள்வியால் அதிர்ச்சியான பத்திரிகையாளர் ? சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏதோ பரபரப்பான அரசியல் தலைவர் வருவதைப்போல ஏராளமான டிவி மற்றும் பத்திரிகை கேமிராக்கள் குவிந்து கிடந்தன. யார் அந்த விவிஐபி என்று பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டம் படூரைச் சேர்ந்த 3 வது படிக்கும் மாணவர் ஆகாஷ். “குடியை விடு, படிக்க விடு” என்ற பதாகையைச் சுமந்தபடி வந்து தனது எல்கேஜி படிக்கும் தம்பியை அருகில் அமரவைத்துவிட்டு படபடவென ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி, […]

angusam 11/05/2017

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் படம் டீசர் சற்று முன்னதாக யுடியூப்பில் வெளியானது.‛வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள, விவேகம் திரைப்படத்தின் டீசர், மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதத்தில் இன்று (மே 11) முதல் மணித்துளியில் விவேகம் படம் டீசர் வெளியானது. பிட் லுக்கில் அஜித் இருக்கும் ஒவ்வொரு சீனும், பட பட […]

angusam 10/05/2017

பேஸ்புக்கின் கள்ளக்காதல் ஆத்திரத்தில் கொலை செய்த கள்ள கணவன் !   கொலையுண்ட ஆசிரியை பெயர் நிவேதா (47). கோவை தொழவன் பாளையம், அண்ணாமலை நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர். ஆசிரியை படிப்பு முடித்த பின்பு கோவையில் அரசு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு சேர்ந்தார்.   திருமணமாகி கவுசல்யா என்ற மகள் இருக்கிறார். அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மகள் சென்னை மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வருகிறார்.   பிரிந்து வாழும் […]

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 08/05/2017

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் […]

angusam 07/05/2017

பாகுபலி -2 வசூலில் சாதனை ரூ.1000 கோடியை தாண்டியது. சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.  இந்தப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும்  சாதனை புரிந்துவருகிறது.  பாகுபாலி-2 வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்கிற சாதனையை பெற்றது. இதைத் […]

angusam 06/05/2017

 ‘பரோல்’ வழங்காத புழல் ஜெயில் அதிகாரிகள் இருவரும் ஐகோர்ட்டில் நிபந்தனைற்ற மன்னிப்பு கேட்டனர். புழல் ஜெயில் அதிகாரிகள் ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர் சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த கட்சியின் நிர்வாகி பிரசன்னா உட்பட 21 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பிரசன்னாவின் தாயார் […]

angusam 06/05/2017

டியூசனுக்கு வரும் மாணவிகளை ஆபாசம் படம் எடுத்து வெளியிடும் ஆசிரியர்   டியூசன் சென்டர் நடத்தி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து முகநூலில் வெளியிட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.   இன்றைய கால கட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் படிப்பதை அவசியமான ஒன்றாக மாற்றயிருக்கிறது. இந்த  போட்டியான உலகம். பள்ளிகளை போல் இல்லாம் டியூசன் நடத்துபவர்கள் தனிப்பட்ட அதிகாரத்துடன் இருப்பதால் அப்பாவி மாணவிகள் இந்த மாதிரியான வக்கிர வாத்தியார்களிடம் சிக்கி தவிக்கிறார்கள். என்பதை விவரிக்கும் […]

angusam 05/05/2017

15-ந் தேதி முதல் பஸ் நிறுத்த போராட்டம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஊதிய ஒப்பந்தம் இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்படும். 12-வது ஊதிய ஒப்பந்தம் 31-8-2016-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 1-9-2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று […]

angusam 04/05/2017

உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் பிரேமலதா தமிழகத்தில் உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்–அமைச்சராக இருந்தால் நல்ல ஆட்சியாக இருக்கும். எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்–அமைச்சர் எப்படி நல்ல முதல்–அமைச்சராக, நிலையான ஒரு முடிவு எடுக்க முடியும். நிரந்தர கவர்னர், நிரந்தர உள்ளாட்சி அமைப்புகளும், நிலையான முதல்–அமைச்சரும் இல்லை. தமிழகத்தில் இந்த நிலை மாறவேண்டும். அதிகாரத்தையும், பதவியையும் […]

angusam 03/05/2017

குழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது – மனம் திறந்த குழந்தைகள் நல திட்ட இயக்குநர் நம்முடைய குழந்தைகளையே கவனிக்க நமக்கு நேரமில்லை. ஆனாலும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து அந்தக் குழந்தைகளுக்கு உதவவது எவ்வளவு சிரமம். இந்தப் பணிக்காக  தனது குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, பலக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க காரணமாய் விளங்குகிறார் தமிழக அரசின் திட்டத்தின்கீழ் இயங்கும் “சியர்ஸ் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும்  பெர்லின். நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து […]

angusam 02/05/2017

100 சவரன் தங்கம் கொடுத்து மகிழ்ச்சி கண்ணீல் மூழ்க வைத்த நடிகர் விஜய்சேதுபதி 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ‘- மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.   தமிழ்த்தேசிய சலனப்பட 100ஆம் ஆண்டு விழா, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் நிறுவனராக இருக்கும் ‘உலகாயுதா’ அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. திரையுலகு சார்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கான பொருள் உதவியை ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி […]