திருச்சி

angusam 22/03/2017

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க சர்ச்சை . திருச்சி நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தில் பேச்சு வார்த்தைக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் கைகலப்பு வரை சென்றது தான் இப்போது பலருக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தை பற்றின அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது… பெண் வழக்கறிஞர் சங்கம் பற்றின ஒரு பார்வை…. திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்(பதிவு எண்50/2000) ஏற்படுத்தப்பட்டு  ராஜேஸ்வரி, ஜெயந்தி ராணி, செல்லம் தமிழரசன், நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர். நிர்மலா தலைமை ஏற்கும் […]

angusam 20/03/2017

நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசினார். திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி தின விழா நடந்தது. கல்லூரியின் ஆட்சி மன்ற குழு செயலாளர் ராமநாதன் வரவேற்றார். தலைவர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பொருளாளர் கோபிநாதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன்  பேசும் போது.. கல்வி, அறிவு தான் நாட்டின் செல்வங்கள். நாட்டில் […]

angusam 20/03/2017

ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறை வேற்றவில்லை.  உடனே  நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வேடிக்கும் அதை நாங்களே தலைமை ஏற்று நடத்துவது என்று அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி […]

angusam 03/02/2017

தொல்லெழுத்துக்கள் பயிலரங்கம். திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லெழுத்துக்கள் பயிலரங்கம் நடைபெற்றது காப்பாட்சியர் பெரியசாமி தலைமையுரையில் இன்றைய தலைமுறையினர் தொன்மையான தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துக்களை அறிந்திருந்தால் பல்வேறு இடங்களில் உள்ள வரலாற்றினை அறிய முடியும் என்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பழனி தொல்லியலாளர் நாராயணமூர்த்தி தொல்லெழுத்துக்கள் பயிலரங்கில் பயிற்சி அளித்தார். எழுத்தானது ஒரு மொழியின் அடிப்படை கூறாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து ஆகும். தமிழி அல்லது தமிழ் பிராமி […]

angusam 29/01/2017

இதுதான் சரியான நேரம்…. தலைவா தலைமை ஏற்க வா.. ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் திருச்சி ரசிகர்கள். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வராகவும், சசிக்கலா அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அவர் முதல்வராக  முயற்சி செய்கிறார்.  அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வெடித்த மாணவர் போராட்டம் என அடுத்தடுத்த பரபரப்பில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இந்த அரசியல் நெருக்கடி சூழலில் உண்டாகி உள்ள நிலையில் இதுதான் சரியான நேரம், நடிகர் ரஜினி தலைமை ஏற்றால் தமிழகம் தலைநிமிரும் […]

angusam 05/01/2017

சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டி சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டியில் சாதனை படைக்கும் வீராங்கனை .ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி வணிகவியல் துறை மாணவி டினோதா சோய் க்வாங் டோ தற்காப்பு கலை  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். டினோதா பள்ளி பயிலும் காலந்தொட்டே தற்காப்பு கலையினை பயின்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பியன் போட்டியில் […]

angusam 28/11/2016

எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி             தி.மு.க.வின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அவரது ரசிகர்களும் முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 1969-ம் ஆண்டு அண்ணாதுரை இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வராகக் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் உழைப்பு மிக பெரியது.  ஒருகட்டத்தில் திமுக கருத்து வேறுபாட்டால் உடைந்த, கடந்த  1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இருந்து விலகினர்.   திமுக தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ஊர் திருச்சி என்றால்,  எம்.ஜி.ஆர் […]

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

samaraiqi4273 07/10/2016

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சராசரி விகிதாசாரத்தில் திருநங்கைகள் என்ற மூன்றாம் பாலினம் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கி முடங்கி கிடந்த காலம் கடந்து தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை திருநங்கைகள் நிரூபித்து வருகின்றனர். இந்த வளர்ச்சி தான் புதிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுவே […]

angusam 02/10/2016

ஸ்ரீரங்கம் 2 வார்டு நிலவரம் –  திருச்சி மாநகராட்சியில்  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுகவிற்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி இந்த தொகுதியில் 6 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த சட்டமன்றத்தில் அதிமுக கடந்த முறை  தேர்தலில்  இந்த குறிப்பிட்ட 6 வார்டுகளில் மட்டும் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று தந்தது என்பது குறிப்பிட்டதக்கது. ஆக  கடந்த கால வெற்றிகள் என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையே உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த அதிமுகவின் சாதனை தொடருமா என்பதை […]

angusam 01/10/2016

அரசியலில், திருச்சி என்றால் திருப்புமுனை என்பார்கள். அதனால்தான், தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை மாநகரமான திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக மாற்ற முயற்சி எடுத்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.! இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோ,  கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில்தான் போட்டியிட்டார். ஆக, அரசியல் தலைவர்களுக்கெல்லாம் திருப்புமுனையாக உள்ள திருச்சி, தற்போது வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறதா? காங்கிரஸ் தொடர்ச்சியாகத் தக்கவைத்திருந்த திருச்சி மாநகராட்சியைக் கடந்த 2011-ல்தான்  அ.தி.மு.க கைப்பற்றியது. அந்த மேயர் […]

angusam 01/10/2016

திருச்சி மாநகரில் 13 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் இன்ஸ் விஜயபாஸ்கர், பெரிய்யா, உமாசங்கர், கோசல்ராமன், ரவீந்தரன் பிரகாஷ், ராஜா, பழனிமுத்து, ஜெபராஜ், செந்தாமரைசெல்வி, லோகேஸ்வரி, கென்னடி, நிக்சன், பெரியசாமி உள்ளிட்டோர் திருச்சிமாநகர காவல்நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

angusam 30/09/2016

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவிற்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி இந்த தொகுதியில் 6 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக கடந்த முறை சட்டமன்ற தேர்தலில்  இந்த குறிப்பிட்ட 6 வார்டுகளில் மட்டும் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று தந்தது என்பது குறிப்பிட்டதக்கது. ஆக  கடந்த கால வெற்றிகள் என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையே உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த அதிமுகவின் சாதனை தொடருமா என்பதை பார்ப்போம். ஸ்ரீரங்கம் 1 வது தொகுதியில்  கடந்த சட்டமன்ற […]

angusam 15/09/2016

திருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததையும். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கொடுத்தார் என்றும். அதை கலைஞரிடம் கொடுத்தேன். அப்போது கலைஞர் வாங்கி வைத்து கொண்டார் பிறகு சில நாட்கள் கழித்து அதை கிழித்து போட்டதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இது நாள் வரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன். […]

angusam 13/09/2016

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும், விளையாட்டு விடுதி மாணவர்களும் இங்கு தான் ஆக்கி, கைப்பந்து, நீச்சல், டென்னிஸ், கபடி என பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அவ்வப்போது மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அகிலஇந்திய அளவிலான ரெயில்வே தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. திருச்சியில் விளையாட்டுக்கு […]