திருச்சி

angusam 01/10/2016

அரசியலில், திருச்சி என்றால் திருப்புமுனை என்பார்கள். அதனால்தான், தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை மாநகரமான திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக மாற்ற முயற்சி எடுத்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.! இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோ,  கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீ ரங்கத்தில்தான் போட்டியிட்டார். ஆக, அரசியல் தலைவர்களுக்கெல்லாம் திருப்புமுனையாக உள்ள திருச்சி, தற்போது வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறதா? காங்கிரஸ் தொடர்ச்சியாகத் தக்கவைத்திருந்த திருச்சி மாநகராட்சியைக் கடந்த 2011-ல்தான்  அ.தி.மு.க கைப்பற்றியது. அந்த மேயர் […]

angusam 01/10/2016

திருச்சி மாநகரில் 13 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் இன்ஸ் விஜயபாஸ்கர், பெரிய்யா, உமாசங்கர், கோசல்ராமன், ரவீந்தரன் பிரகாஷ், ராஜா, பழனிமுத்து, ஜெபராஜ், செந்தாமரைசெல்வி, லோகேஸ்வரி, கென்னடி, நிக்சன், பெரியசாமி உள்ளிட்டோர் திருச்சிமாநகர காவல்நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

angusam 30/09/2016

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவிற்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி இந்த தொகுதியில் 6 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக கடந்த முறை சட்டமன்ற தேர்தலில்  இந்த குறிப்பிட்ட 6 வார்டுகளில் மட்டும் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று தந்தது என்பது குறிப்பிட்டதக்கது. ஆக  கடந்த கால வெற்றிகள் என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையே உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த அதிமுகவின் சாதனை தொடருமா என்பதை பார்ப்போம். ஸ்ரீரங்கம் 1 வது தொகுதியில்  கடந்த சட்டமன்ற […]

angusam 15/09/2016

திருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததையும். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கொடுத்தார் என்றும். அதை கலைஞரிடம் கொடுத்தேன். அப்போது கலைஞர் வாங்கி வைத்து கொண்டார் பிறகு சில நாட்கள் கழித்து அதை கிழித்து போட்டதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இது நாள் வரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன். […]

angusam 13/09/2016

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும், விளையாட்டு விடுதி மாணவர்களும் இங்கு தான் ஆக்கி, கைப்பந்து, நீச்சல், டென்னிஸ், கபடி என பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அவ்வப்போது மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அகிலஇந்திய அளவிலான ரெயில்வே தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. திருச்சியில் விளையாட்டுக்கு […]

angusam 12/09/2016

திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்; வாங்க மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தகவல். திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மானியம் வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.08.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் […]

jefferywinneke 06/09/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை  மணப்பாறைப்பட்டி ரோடு  பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24).  எம்.பி.ஏ. படித்துள்ள இவர்  திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி.  ஆலோசகராக வேலை பார்த்து வந்தார். அதே ஊர் நேருஜிநகரை  சேர்ந்த  சின்னச்சாமி மகன் மணிகண்ட சங்கர் (27). பி.டெக்., படித்துள்ள இவர் சென்னையில்  உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீனத்துக்கும்,  மணிகண்ட சங்கருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டது. இந்த […]

jefferywinneke 06/09/2016

திருச்சி சர்கார்பாளையம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார்(எ)குமரேசன் வயது.45, என்பவர் திருச்சி காவேரி பாலம், அருகில் ஆற்றில் உள்ளே இருந்த  ஊற்றில் தண்ணீர் குடித்த நிலையில்,மர்மமான முறையில் இறந்து கிடந்தார், தகவல் அறிந்த கோட்டைபோலிஸார் சம்பவ இடத்திற்க்கு சென்று பிரேதத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

jefferywinneke 02/09/2016

சாதி மாறி காதல் திருமணம் செய்யும் பிள்ளைகளை பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆணவ கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்தே வருகின்றன. தர்மபுரி இளவரசன், உடுமைப்பேட்டை சங்கர், சேலம் கோகுல்ராஜ் என தமிழகம் பல ஆணவ கொலைகளை கண்டுவிட்டது. ஒருபக்கம் ஆணவ கொலைகளுக்கு எதிராக கூபாடு போட்டாலும், சாதிய வெறியர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள், தங்களை ஆணவ கொலை செய்ய ஊர் பஞ்சாயத்தில் […]

jefferywinneke 01/09/2016

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கல்லூரி மாணவி திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா. இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் மோனிகா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி 3-ம் ஆண்டு […]

angusam 31/08/2016

திருச்சி புனித வளானார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியின் 173ம் ஆண்டு விழா கடந்த 27ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் சீனிவாசன், […]

jefferywinneke 30/08/2016

கரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் […]

angusam 28/08/2016

கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 1 கோடி மதிப்புடைய பிரவுன் சுகர் போதை பொருள் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பிரவுன் சுகர் போதைப்பவுடரை ஒரு கும்பல் கடத்தி வருவதாக அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் கென்னடிக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டவுன் பஸ்சில் வந்து இறங்கிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

jefferywinneke 27/08/2016

திருச்சி: திருச்சி அருகே முசிறியில் அரசுப்பேருந்துகள் நேர் நேர் மோதிய விபத்தில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெங்களுரிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தும், சென்னையிலிருந்து திருச்சி வழியாக முசிறி சென்ற அரசு பேருந்தும் முசிறி சுடுகாட்டு துறை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் சென்னையிலிருந்து முசிறி நோக்கி […]

jefferywinneke 27/08/2016

திருச்சி: சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை மாற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம்  நடந்தது. கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருக்கக்கூடியவர் […]