தெரியுமா சேதி

angusam 18/07/2017

கூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் ! அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது.   சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து […]

angusam 23/04/2017

இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் angusam.com  வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின்  தொடர் – 2. ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் […]

angusam 16/04/2017

இவங்கள விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா- திகில் கிளப்பும் திருச்சி திருடர்கள் தொடர்-1   ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது   […]

angusam 11/04/2017

திருச்சி நீதிமன்றம் சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுயிருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர் ,  ஜீனியர்  வழக்கறிஞர்களை குறிக்கும் ஆபாச கடிதம், பெண் வழக்கறிஞர்கள் சங்க இரண்டாக உடைந்தது, நீதிமன்றத்தில் நடக்கும் அடிக்கடி திருட்டு, சமீபத்தில் நீதிமன்றத்தில் திருட்டு  போன இடி தாங்கி, வழக்கறிஞர்கள் மோதல், வழக்கறிஞர் மீது வழக்கு, சீனியர் வழக்கறிஞர்களின் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து இருந்தாலும். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியாளர்களின் இறுதி […]

angusam 10/04/2017

நீதிமன்றத்தை கலங்கடிக்கும் மர்ம கடிதம் !. அதிர்ச்சியில் வழக்கறிஞர்கள் .   சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு தரப்பட வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்பு சட்டம். சட்டம் பயின்று வழக்குரைஞர்களாக பணியாற்றுபவர்களையே குறி வைத்து மர்ம மனிதன் எழுதிய மர்ம கடிதத்தால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும், பெண் வழக்கறிஞர்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள். 22-3-17 அன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கு தபால் வருகிறது. அதேப் போல பெண் வழக்கறிஞர்களுக்கும் தபால் வருகிறது. தபாலை […]

angusam 09/04/2017

திருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு !   திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் “பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு வழங்கும் இயந்திரம்” (Self Check-in Kiosk) நிறுவப்பட உள்ளது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொருத்தமட்டில் நாளுக்குநாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னாட்டு விமான பயணிகள்! நடப்பு கோடைகால அட்டவணைப்படி, புதிதாக,   மதியம் 2.00 மணிக்கு தினசரி மலிண்டோ ஏர் கோலாலம்பூருக்கும், இரவு 10.30க்கு ஏர் ஏசியா கோலாலம்பூருக்கும் சேவைகள் வழங்க […]

angusam 08/04/2017

மனதுக்குப் பிடித்த தொழிலைச் செய்ய ஆரமித்தேன்… ஜெயித்தேன்… மனம் திறக்கும் மைக்கேல்ஸ் ஜூலியட்   இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ஹாயாக வந்து போன இடங்கள் திருச்சியில் ஏராளமாக உள்ளது. அப்படி நிறைய ஸ்டார்களுக்கு மட்டுமல்லாமல் எல்லொருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் கடை உண்டு என்றால் நம்ம மைக்கேல்ஸ் ஸ்கிரீம்தான். திருச்சியில் பல சிறப்பம்சம் இருந்தாலும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஒரு தனிசுவைதான் ! அந்த சுவைக்காக, எப்போதும் பள்ளி மாணவர்கள், முதல் காலேஜ் […]

angusam 08/04/2017

நண்பனை மாட்டிவிட்ட நண்பன்! அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4½ கோடி ரொக்கம், ரூ.86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று வரை இதுதொடர்பாக சுமார் 300 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன. அ.தி.மு.க. (அம்மா) அணி […]

angusam 06/04/2017

  பல கட்ட அறிக்கை போர்களுக்கு பிறகு   அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கிறது.    தமிழகத்தில் உள்ள 534 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலைமை பொறுப்பாக உள்ள துணைவேந்தர் பதவி நியமனம் செய்வதில் சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதுவரை பொறியியல் சேர்க்கையே நடக்ககூடாது என தொடர்ந்து    அறிக்கை  வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.  இந்த  தொடர் […]

angusam 05/04/2017

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மனைவி, மாமியாரை செல்போனில் மர்மநபர்கள் மிரட்டுவதாக திருச்சி சிவா எம்.பி.யின் மகன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். திருச்சி சிவா எம்.பி.யின் (தி.மு.க.) மகன் சூர்யா சிவா.  தனது காதல் மனைவி அதீனா பிரதீஷா, மாமியார் பிரேமம் குமாரி மார்ஷல் ஆகியோருடன் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சூர்யா சிவா கூறியதாவது:- நான் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் எனது மனைவியை காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டேன். […]

angusam 02/04/2017

திருச்சியின் அடையாளம்  – திருச்சி “பா”ரதன் திருச்சியில் உள்ள அரசியல்வாதிகள் டாக்டர்கள்,வக்கீல்கள்,கலைஞர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து திருச்சியில் குறிபிடத்தக்க மனிதர்களாக வாழ்ந்தவர்களை பற்றி திருச்சியின்  அடையாளங்கள்  பகுதியில் பதிவு செய்து வருகிறோம். இன்றைய திருச்சியின் அடையாளங்கள் பகுதியில்   திருச்சி – ”பா”ரதன் பற்றிய  நினைவுகளை இன்றைய தலைமுறையினர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். திருச்சி பாலக்கரை எடத்தெருவில, 30-09-1934ம் ஆண்டு கோ.இரங்கசாமி-காமாட்சிஅம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பாரதன். இயற்பெயர் தங்கவேலன், பள்ளிக்கூட வயதிலேயே இலக்கியங்கள் படைக்கும் ஆற்றல் […]

angusam 01/04/2017

திருச்சி வழக்கறிஞர்கள் மோதல்  –  4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நலன் காப்பதற்காக தி திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி அட்வகேட் அசோசியேன் செயல்பட்டு வருகிறது. தற்போது வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சனையால் காவல்துறையில் வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி அவதூறான கடிதம் வர பெண் வழக்கறிஞர்கள் சங்கம் […]

angusam 23/03/2017

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இரண்டாக உடைந்த ரகசியம் திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை, சண்டை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ( பதிவு எண்50/2000 ) ஏற்படுத்தப்பட்டு வழக்கறிஞர் ராஜேஸ்வரி, வழக்கறிஞர் ஜெயந்தி ராணி, வழக்கறிஞர் செல்லம் தமிழரசன், வழக்கறிஞர்  நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர். நிர்மலா தலைமை பொறுப்பு ஏற்கும் போது வாக்களித்து தேர்வு செய்யப்பட்டார். பிறத் தலைமை தேர்வானது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டவர்களே பொறுப்பு […]

angusam 22/03/2017

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க சர்ச்சை . திருச்சி நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தில் பேச்சு வார்த்தைக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் கைகலப்பு வரை சென்றது தான் இப்போது பலருக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தை பற்றின அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது… பெண் வழக்கறிஞர் சங்கம் பற்றின ஒரு பார்வை…. திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்(பதிவு எண்50/2000) ஏற்படுத்தப்பட்டு  ராஜேஸ்வரி, ஜெயந்தி ராணி, செல்லம் தமிழரசன், நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர். நிர்மலா தலைமை ஏற்கும் […]

angusam 25/02/2017

முளைத்தால் மரம் இல்லையெனில் உரம்” விதைப்பந்துகள் இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், திருச்சியில் இளைஞர் ஜெயராஜ் அஜய் என்பவர் தன்னுடைய பிறந்தநாளில் தன்னார்வலர் அமைப்புகள் துணையோடு விதை பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சியில் 2 நிமிடங்கள் 17 விநாடிகளில் 2017 விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி . […]