தெரியுமா

angusam 01/04/2017

திருச்சி வழக்கறிஞர்கள் மோதல்  –  4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நலன் காப்பதற்காக தி திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி அட்வகேட் அசோசியேன் செயல்பட்டு வருகிறது. தற்போது வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சனையால் காவல்துறையில் வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி அவதூறான கடிதம் வர பெண் வழக்கறிஞர்கள் சங்கம் […]

angusam 23/03/2017

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இரண்டாக உடைந்த ரகசியம் திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை, சண்டை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ( பதிவு எண்50/2000 ) ஏற்படுத்தப்பட்டு வழக்கறிஞர் ராஜேஸ்வரி, வழக்கறிஞர் ஜெயந்தி ராணி, வழக்கறிஞர் செல்லம் தமிழரசன், வழக்கறிஞர்  நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர். நிர்மலா தலைமை பொறுப்பு ஏற்கும் போது வாக்களித்து தேர்வு செய்யப்பட்டார். பிறத் தலைமை தேர்வானது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டவர்களே பொறுப்பு […]

angusam 22/03/2017

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க சர்ச்சை . திருச்சி நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தில் பேச்சு வார்த்தைக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் கைகலப்பு வரை சென்றது தான் இப்போது பலருக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தை பற்றின அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது… பெண் வழக்கறிஞர் சங்கம் பற்றின ஒரு பார்வை…. திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்(பதிவு எண்50/2000) ஏற்படுத்தப்பட்டு  ராஜேஸ்வரி, ஜெயந்தி ராணி, செல்லம் தமிழரசன், நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர். நிர்மலா தலைமை ஏற்கும் […]

angusam 25/02/2017

முளைத்தால் மரம் இல்லையெனில் உரம்” விதைப்பந்துகள் இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், திருச்சியில் இளைஞர் ஜெயராஜ் அஜய் என்பவர் தன்னுடைய பிறந்தநாளில் தன்னார்வலர் அமைப்புகள் துணையோடு விதை பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சியில் 2 நிமிடங்கள் 17 விநாடிகளில் 2017 விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி . […]

angusam 13/02/2017

அ.ஜோன் டெல்பி முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பெரியார் மருந்தியல் கல்லூரி – திருச்சி மாமியார்க்காரி கத்திக்கொண்டு இருந்தாள் ! என் பையன் சிங்கம்டி. உன்னைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சேன்னா, எண்ணி பத்தாவது மாசத்தில் புள்ளையக் கொடுத்துருவான். ஏதோ போனாப்போகுது, ஆதரவில்லாத பெண்ணாச்சே, நாமளும் ஒதுக்கிட்டா, வாழவழியில்லாமல் தவிச்சு நிப்பியேன்னு யோசனை சொன்னோம்னா ரொம்ப தான் ராங்கு காட்டிக்கிட்டு நிக்கிறியே ! இசையின்பன் கண்ணம்மா கண்கலங்கி நின்று கொண்டு இருந்தாள். திருமணம் நடந்து ஐந்து […]

angusam 04/10/2016

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை. இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘www.tnpds.com’ என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விபரங்களை […]

angusam 04/10/2016

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜீரம் தொற்றிக்கொண்ட நிலையில் அதன் மையப்பகுதியான திருச்சியில் அனல் பறந்து கொண்டுயிருக்கிறது.  உள்ளாட்சி தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்திருந்தாலும் தேர்தல் பற்றின பரபரப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. திருச்சி மாநகராட்சி அந்தஸ்த்தை 1996 பெற்றது. இதுவரை 5 மேயர்களுமே பெண்கள் தான். இந்த முறை ஆண்களுக்கு தான் வாய்ப்பு என்றார்கள்.  உள்ளாட்சி தேர்தல் தேதிக்கு அறிப்புக்கு முந்தின நாள் தீடீர் என்று திருச்சி மேயர் பதவி பெண்களுக்கு என  அறிவிப்பு என்றவுடன் மேயர் கனவில் […]

angusam 18/09/2016

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடையே விருப்ப மனு பெறப்படும் நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளின் கவுன்சிலர் வேட்பாளர்கள் யார் யார்? என்கிற லிஸ்ட் ரெடியாகி விட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் இறுதிவாக்கில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற துவங்கியுள்ளன. ஆளுங்கட்சியான அதிமுகவில்  ( 18ம் தேதி) இன்று  வரை தலைமை அறிவித்துள்ள நிர்வாகிகள் விருப்ப மனுக்களை […]

angusam 18/09/2016

காவிரிப் பிரச்னையில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 16-ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளரான விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து இறந்தார்.இந்நிலையில், ‘நாம் தமிழர் கட்சி விதிமுறைகளை மீறி செயல்படுவதால் அக்கட்சியை தடை செய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ரீகன். இதுகுறித்துப் பேசும் அவர், ”சீமானின் அலட்சியம்தான் விக்னேஷ் உயிரிழப்புக்குக் காரணம். எந்தவொரு போராட்டம், பேரணி […]

jefferywinneke 09/09/2016

“ஆவி”யாக அலைகிறார் சுவாதி… அமாவாசையில் பழிவாங்கப் போகிறார்.. சொல்வது ஆவி “ஸ்பெஷலிஸ்ட்” அமுதன் தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி ஆவி கூறியதாக ஆவிகளிடம் பேசும் அமுதன் என்பவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் […]

jefferywinneke 13/08/2016

கண்கள் உங்கள் வயதை சுட்டிக்காட்டும் கருவி. வாய் பொய் பேசினாலும் கண்கள் உள்ளதை அப்படியே காட்டிக் கொடுத்துவிடும். அப்படி மனதிலுள்ளதை பேசாமலேயே வெளிப்படுத்தும் கண்கள் எத்தனை சக்திவாய்ந்தது. அதனை சோர்ந்து போகாமலும், கம்பீரமாகவும் வைத்தொருப்பது நம் கையில்தான் உள்ளது. இங்கு கண்களை அழகாக்க சின்ன சின்ன குறிப்புகள் கூறப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள். சோர்வு நீங்க : தினமும் தூங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி வட்ட […]

jefferywinneke 13/08/2016

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம். அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால், […]

jefferywinneke 13/08/2016

பாதாம் முந்திரி, வால்நட், போன்ற நட்ஸ் வகைகள் மிகவும் காஸ்ட்லியானது என்றாலும் அதிலுள்ள சத்துக்கள் உயர்தரம் கொண்டவை. அதிக நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஈ அகியவை கொண்டுள்ளது. அலர்ஜியை உண்டாக்கும் புரோட்டீனும் குறைந்த அளவு உள்ளது. அதோடு குறைந்த அளவு சோடியம் உள்ளது. இவ்வளவு நல்லவைகள் கொண்ட நட்ஸ் பெண்களுக்கு மிக மிக நல்லது. நட்ஸ் தினமும் சாப்பிடும் பெண்கள் சாப்பிடாத பெண்களை விட ஆரோக்கியமாக இருப்பார்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது. தினமும் நட்ஸ் சாப்பிடும் […]

jefferywinneke 09/08/2016

சேலத்திலிருந்து வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் ஐ.ஓ.பி., வங்கியிலிருந்து , பழைய நோட்டுகளை ஏற்றிக்கொண்டு, ரயில் சென்னை நோக்கி ஆத்தூர், சேலம், விழுப்புரம் வழியாக வந்தது. 228 பணப்பெட்டிகள் கொண்ட அந்த விரைவு ரயிலில் மர்ம நபர்கள் நள்ளிரவில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சில பெட்டிகளை மட்டும் உடைத்து பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ரயில் சென்னை வந்த […]

jefferywinneke 28/07/2016

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் எளிதில் தொடர்புகொள்ளவும், இணையதளத்தைப் பயன்படுத்தவும், சிறப்புச் சலுகைகளுடன் இந்தத் திட்டம் உள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் இணையத்தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இளைஞர்கள், பணியில் உள்ளோர் உள்ளிட்ட அனைவரையும் கவரும் வகையில் வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் […]