தெரியுமா

johnhatton61986 27/07/2016

கேரளாவில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் தாட்சாயிணி என்ற யானை, திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது. 86 வயதான அந்த யானை தற்போது பூஜாப்புரத்தில் உள்ள செங்கல்லூர் கோவிலில் உள்ளது. கேரளாவின் மிகப்பழமையான இந்த யானைதான், உலகிலேயே பழமையானது. இதன்மூலம் மிக அதிக வயதான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் யானை என்ற பெயரை தாட்சாயிணி யானை பெறுகிறது. ஏற்கனவே 85 வயதான தைவான் யானை உலகிலேயே வயதான யானை என்ற பெயரை பெற்றிருந்தது. ஆனால் இந்த யானை 2003–ம் […]

johnhatton61986 19/07/2016

டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், அரசு சார்பில் டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது. இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடவும், […]

johnhatton61986 19/07/2016

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் சரவணன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு பயின்று வந்த டாக்டர் சரவணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷ ஊசி செலுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, சரவணன் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தக் […]

jefferywinneke 19/07/2016

மனிதர்கள் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர். தூக்கமே மனிதர்களின் புத்துணர்ச்சியை தூண்டி அவனை செயலாற்றவைக்கும் ஆற்றல் கொண்டது. நாள்தோறும் இச்செயல் நடந்தால்தான் அவனது களைப்பு நீங்கி மீண்டும் வேலையை செய்ய முடியும். மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தூங்கியே விழிக்கின்றன. அதுவே மறுநாளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் ஆற்றலாகவும் விளங்குகிறது. தொடக்கத்தில் பாறைகளிலும், மணல் மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய மனிதன், நாளடைவில் விலங்குகளின் தோல்கள் கொண்ட படுக்கை விரிப்புகளை உருவாக்கி தூங்கும் படுக்கையை உருவாக்கினான். […]

jefferywinneke 17/07/2016

கூகுள் தேடலில் எப்பவும் முன்னிலையில் இருப்பது ஆபாசம் சேர்ந்த தேடல்கள் மட்டுமே. உலகளவில் ஆபாசத்தை மிஞ்சும் தேடல்கள் மிகவும் அரிதான விடயமாம். இந்நிலையில் உலகின் பிரபல தேடுபொறியான கூகுளையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது சமீபத்திய கூகுள் தேடல். முன்னதாக ஆபாச தேடல்களையும் கடந்து பிரெக்ஸிட் தேடல் அதிகரித்ததாகத் தனியார் நிறுவனத்தின் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் குறித்த தேடல் சமீபத்தில் அதிகரித்து ஆபாசம் சார்ந்த தேடல்களைப் பின்னுக்கு தள்ளியது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் […]

jefferywinneke 13/07/2016

நரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதிகம் மது குடிப்பவர்களுக்கும் பொதுவாக உடல் எரிச்சல் ஏற்படும். வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். உடல் எரிச்சல் இருக்கும்போது, இதை வடிக்கட்டி குடித்தால் பிரச்னை சரியாகும். வாரம் ஒருமுறை சர்க்கரை நோயாளிகள் […]

johnhatton61986 12/07/2016

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் மேலும் 1,000 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்திருந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் கட்சிகள் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தன. தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்த முதல்வர் ஜெயலலிதா, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்; கடைகளின் நேரம் திறப்பு நேரம் குறைக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் […]

jefferywinneke 08/07/2016

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம். அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், […]

tomscratch20042007 30/06/2016

     மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் தம்பதி ஒன்று சமீபத்தில் தாங்கள் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாக கூறி படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை இணைந்து தொட்ட முதல் தம்பதி தாங்கள்தான் என்று இருவரும் பெருமை அடித்திருந்தனர். ஆனால் அது பொய் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. இன்னொருவரின் படத்தை எடுத்து அதை இவர்கள் மார்பிங் செய்து வெளியிட்டு தற்போது […]

jefferywinneke 29/06/2016

இஞ்சி உடலுக்கு நல்லதுதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதுவும் தீமையை தரும். இஞ்சி வயிற்றிலுள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும். வயிறு மற்றும் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும். முக்கியமாக ஜலதோஷம் இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. வாந்தி, குமட்டலுக்கும் மருந்தாக இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி உடலுக்கு நல்லதுதான். அதே சமயம் தினமும் அளவுக்கு அதிகமாக அதனை சேர்த்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளை தரும். ஒரு நாளைக்கு இஞ்சி 4 கி அளவிற்கும் […]

jefferywinneke 29/06/2016

அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா? அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து […]

jefferywinneke 28/06/2016

உலக நாடுகள் அனைத்தும் பெருமையுடன் கொண்டாடுவது மட்டுமல்ல கடைபிடித்து வரும் இந்த அற்புதமான வாழ்வியல் கலையை உலகிற்கு வழங்கியது நமது பாரத தேசம். தாய் கண்டு கொள்ளாத பிள்ளையை அடுத்தவர்கள் தூக்கி அரவணைத்து கொள்வது போல் இந்திய மக்கள் கைவிட்ட கலையை இன்று உலகம் கையிலெடுத்து கொண்டாடுகிறது. வழிப்பயணத்தில் ஒரு காட்சியை எல்லோரும் தவறாமல் பார்க்க முடியும். கையில் சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் கட்டாயம் வைத்திருப்பார்கள். பலரது வாழ்க்கை மாத்திரைகளின் துணையோடுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. […]

angusam 25/06/2016

திருச்சியில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில்  விபாச்சாரம் நடத்தியவர்களை மாறுவேசத்தில் சென்ற போலிசார் அழகிகள் உள்ளிட்ட புரோக்கர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி சோமரசம் பேட்டையை அருகே உள்ள தாயனூரை சேர்ந்தவர் பாபு கரூர் பைப்பாஸ் சாலை அருகே விருந்தா என்ற ஆயுர் மசாஜ் சென்டருக்கு சென்றார். அங்கு சென்றதும். வரவேற்பு பகுதியில் உள்ள ஒருவர் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் என பல வகைகள் உள்ளது. உங்களுக்கு என்ன மசாஜ் வேண்டும் என்று கேட்டு […]

jefferywinneke 25/06/2016

படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதி      விலக்கு அல்ல. ‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’’ என்கிறது திருக்குர்ஆன் (51:49). இவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் சார்ந்தே வாழ வேண்டும்; அவர்கள் சேர்ந்தே வாழ வேண்டும். திருமணம் என்பதை அரபி மொழியில் ‘நிகாஹ்’ என்பர். இணைத்தல், சேர்த்தல் என்பது இதன் பொருளாகும். […]