நம்மதிருச்சி

angusam 24/06/2016

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி தென்னூர் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மற்றும் கோர்ட்டு ஆகிய துணை மின்நிலையங்களில் உள்ள அனைத்து வகை மின் சாதனங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கின்றன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம், […]

angusam 24/06/2016

மண்ணச்சநல்லூர் அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் என்று கூறி பலரிடம் ரூ.15 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை மோசடி செய்த பெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற தாசில்தார்? திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை தென்றல் நகரில் வேதநாராயணன் என்பவரது வீட்டில் வசித்து வந்தவர் பவானி(வயது 60). இவரது சொந்த ஊர் லால்குடியை அடுத்துள்ள திருமங்கலம். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேதநாராயணனிடம் திருவெள்ளறையில் வீட்டுமனை வாங்கியிருப்பதாகவும், அங்கே […]

angusam 23/06/2016

  திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள சீராதோப்பு பகுதி அமிர்தராயநல்லூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வடிவேல் (வயது30). அ.தி.மு.க. பிரமுகரான மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார். அவர் உறையூர் பகுதியில் வந்தபோது காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் வேன் வேகமாக அவரை முந்தி சென்று எப்போதும் நெரிசலான பகுதியில் உள்ள அந்த சுதர்சன் மருத்துவமனை முன்பு நின்றது. அப்போது அதன் டிரைவர் அஷ்ரப் இருக்கையின் கதவை வேகமாக திறந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வடிவேல் […]

angusam 22/06/2016

திருச்சி தென்னூர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவரது மகன் இம்ரான் (வயது 22). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். லால்குடி அருகே உள்ள பூவாலூர் அருகே அகலங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் திவ்யா (வயது17). திவ்யா திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது கடைக்கு வாடிக்கையாளர்களை அழைத்து ஆட்டோவில் அழைத்து வரும் இம்ரானும், திவ்யாவும் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்ததும் […]

angusam 21/06/2016

உங்களால் முடிந்தால் எங்களை பிடித்து பாருங்கள் சவால் விடும் அதிக வேக பைக் திருடர்கள். திருச்சி மாவட்டத்தில் சமீப காலமாகவே கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாக தான் இருக்கிறது. இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க திருச்சி காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் உத்தரவின் பேரில் காலை 5 மணி முதல் 8 மணி வரை ஒவ்வொரு பகுதிகளிலும் இருசக்கர […]

angusam 21/06/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா மருங்காபுரி வட்டம், கல்லகாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியத்தின் மகன் பாண்டிச்செல்வம், இவரது குடிசையில் மின்விளக்கு வசதி இல்லை. கல்லகாம்பட்டி அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு போதிய வசதி இல்லாததால் வீட்டின் அருகாமையில் உள்ள தெரு விளக்கில் படித்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அண்மையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தமிழில் 97 மதிப்பெண், ஆங்கிலத்தில் 92, கணிதம், அறிவியல் மற்றும் சமூக […]

angusam 21/06/2016

           சாதி சான்றிதழ் கேட்டு 15 வருடங்களாக மனு கொடுத்தும் பலன் இல்லை என கூறி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ, மாணவிகள் திடீர் என தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறைதீர்க்கும் நாள் கூட்டம்      திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மனுக்களை வாங்கினார்கள். அப்போது […]

angusam 20/06/2016

திருச்சியில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள அதிக பகுதியான தில்லைநகரில் மிகப்பெரிய கட்டிடத்தின்  மின் கம்பியில் சிக்கி உயிருக்கு இரண்டு மணிநேரமாக பேராடிய புறாவை பார்த்த திருச்சியை சேர்ந்த மக்கள் மன இரங்கி அதை காப்பாற்றும் முயற்றியில் மிக கடுமையாக இறங்கியதை  பார்க்கும் மற்றவர்களை வியக்க வைத்தது.. இதோ அந்த காட்சி உங்களுக்கா

angusam 20/06/2016

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி சேவாசங்கம் பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு தலைமை தாங்கினார். மகளிர் நீதிமன்றம் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி கார்த்திகா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கார்த்திகா, சியர்ஸ் அமைப்பின் திட்ட இயக்குனர் பியர்லின், சேவா சங்கம் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் […]