நம்மதிருச்சி

angusam 29/11/2016

திருச்சியின் அடையாளங்கள்  – டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம். திருச்சி மாநகரில் வாழ்ந்து மறைந்த பல ஆளுமைகள் திருச்சியின் அடையாளங்களாக விளங்கியுள்ளார்கள். நாம் திருச்சிக்காரர்கள் என  பெருமைக் கொள்கிறோம் எனில் அவர்களைப் பற்றி நமக்கு  தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் திருச்சியின் வரலாற்றுப் பொக்கிஷமாய் விளங்கியவர்கள் பற்றிய தொடர் இது. பலரின் வாழ்வில் பார்வை ஒளி வீச காரணாமாய் வாழ்ந்து மறைந்தவர் டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம். இன்று திருச்சியில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான விளங்கும் ஜோசப் கண் […]

angusam 28/11/2016

எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி             தி.மு.க.வின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அவரது ரசிகர்களும் முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 1969-ம் ஆண்டு அண்ணாதுரை இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வராகக் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் உழைப்பு மிக பெரியது.  ஒருகட்டத்தில் திமுக கருத்து வேறுபாட்டால் உடைந்த, கடந்த  1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இருந்து விலகினர்.   திமுக தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ஊர் திருச்சி என்றால்,  எம்.ஜி.ஆர் […]

angusam 24/10/2016

வறுமைக்காகப் புத்தகம் விற்க ஆரமித்தேன்.. இன்று 2ஆயிரம் வாசகர்கள் எனக்கு இருக்கிறார்கள்- 40 வருட திருச்சியில் நடமாடும் நூலகம். 40 வருடமாக நடமாடும் நூலத்தை நடத்தி வருகின்றார் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த சண்முகம். கடந்த 1975ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சண்முகத்தால் தொடர்ந்து படிக்கவில்லை. படிக்கும்போதே என்ன செய்யலாம் என யோசித்தவர், புத்தகம் வாசிக்கும் ஆர்வமுள்ள அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக முதல் முதலாக அரசியல், சினிமா, கட்டுரைகள், நாவல்கள், உள்ளிட்ட புத்தகங்களை […]

angusam 01/10/2016

திருச்சி மாநகரில் 13 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் இன்ஸ் விஜயபாஸ்கர், பெரிய்யா, உமாசங்கர், கோசல்ராமன், ரவீந்தரன் பிரகாஷ், ராஜா, பழனிமுத்து, ஜெபராஜ், செந்தாமரைசெல்வி, லோகேஸ்வரி, கென்னடி, நிக்சன், பெரியசாமி உள்ளிட்டோர் திருச்சிமாநகர காவல்நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

angusam 30/09/2016

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவிற்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி இந்த தொகுதியில் 6 வார்டுகள் உள்ளது. இதில் அதிமுக கடந்த முறை சட்டமன்ற தேர்தலில்  இந்த குறிப்பிட்ட 6 வார்டுகளில் மட்டும் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று தந்தது என்பது குறிப்பிட்டதக்கது. ஆக  கடந்த கால வெற்றிகள் என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையே உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த அதிமுகவின் சாதனை தொடருமா என்பதை பார்ப்போம். ஸ்ரீரங்கம் 1 வது தொகுதியில்  கடந்த சட்டமன்ற […]

angusam 15/09/2016

திருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததையும். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கொடுத்தார் என்றும். அதை கலைஞரிடம் கொடுத்தேன். அப்போது கலைஞர் வாங்கி வைத்து கொண்டார் பிறகு சில நாட்கள் கழித்து அதை கிழித்து போட்டதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இது நாள் வரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன். […]

angusam 15/09/2016

அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் 2001-2006 மற்றும் 2006-2009ம் ஆண்டுகளில், காங்கிரஸ் – திமுக கூட்டணி சார்பில் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவர் சாருபாலா தொண்டைமான். 2009 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அத்தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். இடையில் மேயர் தேர்தல் வந்தும் அவர் அந்த முறை மேயர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து , 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2-வது […]

angusam 12/09/2016

திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்; வாங்க மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தகவல். திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மானியம் வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.08.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் […]

angusam 11/09/2016

முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த மனோகரன், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் எட்டு ஆண்டுகளாக கோலோச்சிய மனோகரனை கழற்றிவிட்டு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. திருச்சி மாவட்ட அரசியலில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சிவபதி, பூனாட்சி, கே.கே.பாலசுப்ரமணியன், பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள்கூட, மனோகரனின் அரசியலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓய்ந்துபோனார்கள். அப்படிப்பட்டவரே, இப்போது ஓரம் கட்டப்பட்டிருக்கிறார். மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டால், தலைமையின் உத்தரவுக்குக் […]

angusam 07/09/2016

தூய்மையான மாநகராட்சி என்று பெயர் வாங்கிய திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம் தற்போது திறந்தவெளி பார் மையங்களாக செயல்படுகிறது. சுற்றுசுழல், சுகாதாரம் ஆகியவற்றிற்கு பெயர் வாங்கின திருச்சி மாநகராட்சியின் மேற்பார்வையில் உள்ளது திருச்சி மத்திய பேருந்து நிலையம். இது தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் இந்த பேருந்து நிலையத்தில் எந்த நேரமும் மக்களின் நடமாட்டம் இருக்கும். இந்த பேருந்து நிலையத்தை சுற்றி 4 டாஸ்மார்க் கடைகள் இருப்பதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் அவசரமாக செல்வதற்கு முன்னால் […]

jefferywinneke 06/09/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை  மணப்பாறைப்பட்டி ரோடு  பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24).  எம்.பி.ஏ. படித்துள்ள இவர்  திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி.  ஆலோசகராக வேலை பார்த்து வந்தார். அதே ஊர் நேருஜிநகரை  சேர்ந்த  சின்னச்சாமி மகன் மணிகண்ட சங்கர் (27). பி.டெக்., படித்துள்ள இவர் சென்னையில்  உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீனத்துக்கும்,  மணிகண்ட சங்கருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டது. இந்த […]

jefferywinneke 06/09/2016

திருச்சி சர்கார்பாளையம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார்(எ)குமரேசன் வயது.45, என்பவர் திருச்சி காவேரி பாலம், அருகில் ஆற்றில் உள்ளே இருந்த  ஊற்றில் தண்ணீர் குடித்த நிலையில்,மர்மமான முறையில் இறந்து கிடந்தார், தகவல் அறிந்த கோட்டைபோலிஸார் சம்பவ இடத்திற்க்கு சென்று பிரேதத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

jefferywinneke 02/09/2016

சாதி மாறி காதல் திருமணம் செய்யும் பிள்ளைகளை பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆணவ கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்தே வருகின்றன. தர்மபுரி இளவரசன், உடுமைப்பேட்டை சங்கர், சேலம் கோகுல்ராஜ் என தமிழகம் பல ஆணவ கொலைகளை கண்டுவிட்டது. ஒருபக்கம் ஆணவ கொலைகளுக்கு எதிராக கூபாடு போட்டாலும், சாதிய வெறியர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள், தங்களை ஆணவ கொலை செய்ய ஊர் பஞ்சாயத்தில் […]

jefferywinneke 01/09/2016

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கல்லூரி மாணவி திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா. இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் மோனிகா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி 3-ம் ஆண்டு […]

angusam 31/08/2016

திருச்சி புனித வளானார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியின் 173ம் ஆண்டு விழா கடந்த 27ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் சீனிவாசன், […]