புதுக்கோட்டை

angusam 08/04/2017

நண்பனை மாட்டிவிட்ட நண்பன்! அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4½ கோடி ரொக்கம், ரூ.86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று வரை இதுதொடர்பாக சுமார் 300 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன. அ.தி.மு.க. (அம்மா) அணி […]

johnhatton61986 16/08/2016

புதுக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி. இவர் அப்பகுதியில் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ஒட்டலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் தவமணியின் ஒட்டல் தீ பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒட்டலில் இருந்த […]

johnhatton61986 08/08/2016

அறந்தாங்கியில் இருந்து ஒரு டவுன்பஸ் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூருக்கு சென்றுவிட்டு அறந்தாங்கிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை குளமங்கலத்தை சேர்ந்த செல்வம் (வயது38). என்பவர் ஓட்டியுள்ளார். பஸ் ஆளப்பிறந்தான் அருகே வந்தபோது, பஸ் டிவைரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருக்கும் புளியமரத்தில் மோதியது.  இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பூக்கொல்லையை சேர்ந்த பாண்டியம்மாள்(49), பேராவூரணியை சேர்ந்த உலகம்மாள்(50), புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வி(28), ஆளப்பிறந்தானை சேர்ந்த […]

johnhatton61986 04/08/2016

கந்தர்வகோட்டை அருகே நிலத்தகராறில் தந்தை–மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோவிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜானகி ராமன் (வயது 47). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவருக்கும், கடந்த சில வருடங்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் நிலத்தகராறு சம்பந்தமாக ஜானகிராமனுக்கும், ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் […]

johnhatton61986 02/08/2016

புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே மெய்யம்மை என்பவர் தனது தம்பி மற்றும் மகனுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மெய்யம்மை வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் மெய்யம்மையின் வீட்டில் இருந்து புகை வெளியேறுவதை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் […]

johnhatton61986 02/08/2016

ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி சாந்தகுமாரி (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவியிடம், நான் தனியாக தொழில் தொடங்க உங்கள் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி கொண்டு என்னிடம் தரவேண்டும் என துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர் பல்வேறு இடங்களில் அழைந்து பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. இதனால் சாந்தகுமாரி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில், சாந்தகுமாரியை […]

jefferywinneke 28/07/2016

கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,  பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி, எப்படியாவது தங்கள் ஆசிரியர் உயிர் பிழைக்க வைக்க  துடித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணாகிப்போனது மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள், பெண்கள் […]

jefferywinneke 20/07/2016

ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செ.ரவிச்சந்திரன் […]

jefferywinneke 15/07/2016

                                        அண்ணா பல்கலைக்கழகத்தில் உருக்கமான சம்பவம் பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரும் வழியில் விபத்தில் தந்தையை பறிகொ டுத்த புதுக்கோட்டை மாணவர் தாயின் அறிவுரையின்படி கலந் தாய்வில் கலந்துகொண்டார். இந்த உருக்கமான சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். சிவகங் […]

jefferywinneke 13/07/2016

புதுக்கோட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது அரசு பஸ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை காரைக்குடி ஸ்ரீராம்நகரை சேர்ந்த டிரைவர் பாண்டிக்குமார் (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக காரைக்குடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இருந்தார். நேற்று மதியம் சுமார் 3 […]

johnhatton61986 25/06/2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, வேம்பங்குடி ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் ரூ.1.52 கோடி மோசடியில் ஈடுபட்டதாக  மணமேல்குடி வங்கியின் கிளை மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, கீரமங்கலம் அருகே வேம்பங்குடி உள்ள இந்தியன் வங்கியின் கிளைகளில் நடத்தப்பட்ட தணிக்கையின் போது கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 15.12.2015 ஆம் ஆண்டு வரையில் சுமார் ரூ.1.52 கோடிக்கு மோசடி நடந்தது தெரிய வந்தது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட […]

johnhatton61986 25/06/2016

புதுக்கோட்டையில் மிளகாய் பொடி தூவியதுடன், மயக்க மருந்து தெளித்து பெண்ணிடம் 20 பவுன் நகையை இன்று பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை ஜானகி நகர் பகுதியில் தொழிலதிபர் ரவி அவரது மனைவி மாலதி (40)யுடன்  வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவில் ரவி, அவரது மனைவி மாலதி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 3 மணியளவில்  வீட்டில் கதவு தட்டப்பட்டதையடுத்து மாலதி எழுந்து […]

angusam 23/11/2015

 கிரானைட் முறைகேட்டில் 1,06,145 கோடி கொள்ளை  அதிர வைக்கும் சகாயம் அறிக்கை சென்னைகோர்ட்டில் தாக்கல் சிபிஐ விசாரணை, தனி நீதிமன்றத்துக்கு பரிந்துரை   மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06,145 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், சிபிஐ விசாரணைக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.   சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஏராளமான கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. […]

angusam 11/11/2015

“பிடித்த வேலையைச் செய்யணும்; அல்லது பிடிக்கிற மாதிரி வேலையை மாத்திக்கணும்” சலூனில் வளரும் இலக்கியம்! புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி, ‘‘இந்தியன் சலூன் எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டால், ‘‘கவிஞர் சலூனா, சந்தைப்பேட்டைக்கு பக்கத்துல இருக்கு போங்க!’’ என்று வழிகாட்டுகிறார்கள். சலூனுக்குள் நுழைந்தால்… எந்தப் பக்கம் பார்த்தாலும் புத்தகங்கள். வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப்போரி’ல் மூழ்கியிருக்கிறார் ஒரு பெரியவர். ஒரு சிறுவன் திருக்குறள் புத்தகத்தைப் புரட்டுகிறான். ஒரு மாணவி புறநானூறு படித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் […]