விளையாட்டு

angusam 25/05/2017

பாகிஸ்தானுடன் மோதல்  என்பது மிகவும் சாதாரணமானது – கோலி அதிரடி ! மினி உலக கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1–ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 4–ந்தேதி பர்மிங்காமில் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் 8–ந்தேதியும், தென்ஆப்பிரிக்க அணியுடன் 11–ந்தேதியும் மோதுகிறது. இந்திய அணியின் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி […]

angusam 22/04/2017

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்  தடகளபோட்டிகளில் சென்னை அணி  சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது 28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.   திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி […]

angusam 18/04/2017

“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின்  கோடை கால கொண்டாட்டம்    சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் ஓர் அங்கமாகத் திகழும் , திருச்சிராப்பள்ளி , அண்ணாமலைநகர் , ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் உடற்கூறு நலன் கருதி , கோடை கால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இம்மாதம் 11ம் தேதி தொடங்கி , ஏப்ரல் 25ம் தேதிவரை மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்பட , விளையாட்டுத் துறையில் கபாடி, கோகோ , […]

angusam 09/04/2017

திருச்சி விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பிக்க அழைப்பு விளையாட்டு விடுதியில் சேர திருச்சி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் தனித்தனியாக […]

angusam 15/03/2017

நேற்று நான் சாம்பியன்… இன்னைக்கு பல சாம்பியன்களை உருவாக்குகிறேன். தமிழகத்தின் முதல் பெண் பயிற்சியாளர் திருச்சி  ஞானசுகந்தி. பல மாணவர்களை விளையாட்டில் ஜெயிக்க உந்து சக்தியாக விளங்கும் தமிழகத்தில் மாணவர்களுக்கான முதல் பெண்பயிற்சியாளரும், திருச்சி வீராங்கனையுமான ஞானசுகந்தியை நேரில் சந்தித்து பேசினோம். திருச்சி புள்ளம்பாடி தான் சொந்த ஊா். அப்பா ஆஷ்வால்டின், அம்மா ஈக்லின், அப்பா டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றியதால் பள்ளிப் படிப்பை டால்மியா பள்ளியில் படித்தார். இயல்பாகவே விளையாட்டின மீது ஆர்வம் இருந்ததால் சிறுவயதில் […]

angusam 25/02/2017

திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் ஆனது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் திருச்சி,கோவை, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. புதன்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டநேர முடிவில் […]

angusam 25/02/2017

திருச்சியில் 28ம்தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் தகவல் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி மாவட்ட பிரிவின் சார்பில் வரும் 28ம் தேதி  அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இதில் ஆண்களுக்கான தடகளப் போட்டி, ஆண், பெண் இருபாலருக்கும் இறகுபந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ் மற்றும் கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்) போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் காலை 8.30 மணிக்கு […]

angusam 05/01/2017

சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டி சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டியில் சாதனை படைக்கும் வீராங்கனை .ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி வணிகவியல் துறை மாணவி டினோதா சோய் க்வாங் டோ தற்காப்பு கலை  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். டினோதா பள்ளி பயிலும் காலந்தொட்டே தற்காப்பு கலையினை பயின்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பியன் போட்டியில் […]

angusam 28/12/2016

உலக வில்வித்தை போட்டியில் திருச்சி இளங்கோ. திருச்சி மாவட்டம் சோழிங்கநல்லூரில் வசிக்கும் நாகராஜன்-அனுராதா ஆகியோரின் மகன் இளங்கோ, திருச்சி ஜோசப் மற்றும் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகளில் படித்தார். அப்போது அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமானது. இப்போது  திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி பயின்றுவரும் இவர், சிறுவயதில் இருந்தே, துப்பாக்கி சுடுதல் மீது ஆர்வம் உண்டானது. அது இப்போது வில்வித்தை போட்டியில் பரிசுகளை வெல்ல உதவுகிறது. இளங்கோ இதுகுறித்து , இதுவரை வில்வித்தைப் போட்டியில் […]

angusam 27/12/2016

உலக போட்டியில் பங்கேற்க தடை போடும் வறுமை – மனம் இருந்தால் மார்க்கம் உண்டு இந்த சமூகத்தில் பல லட்சங்களை கொட்டி விளம்பரம் தேடும் விளையாட்டு போட்டிகளுக்கும், பல கோடிகளை கொட்டி பணம் சம்பாதிக்கும் பணக்கார விளையாட்டுகளுக்கும் மட்டுமே ஸ்பான்சர் பண்ணுவதற்கு விளம்பர நிறுவனங்கள் முன் வருகிறார்கள். ஆனால் தமிழகத்திற்க்கு சொந்தமான பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்த்தை ஊக்குவிக்க யாரும் இல்லை என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு. திருச்சி சட்ட கல்லூரியில் 3 ஆண்டு […]

jefferywinneke 10/09/2016

சாதனை நாயகன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர் என்று சொல்லும் மாரியப்பனின் வயது 21 குக்கிராமம் தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு […]

angusam 22/08/2016

தெலங்கானா மாநிலம், ஹைராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம்இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் அசத்திக் கொண்டிருந்த சிந்து ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் யூத் கேம்ஸ், தெற்காசிய போட்டிகள், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்து தொடரிலும் ஏதாவது ஒரு பதக்கம் தட்டினார். இதையெல்லாம் விட, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றதும், யார் அந்த சிந்து என உலகம் உற்று நோக்கியது. ’டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ என்று சொல்வார்களே […]

jefferywinneke 19/08/2016

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பல்கலைக்கழக இணைவு பெற்ற 8 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் பங்கேற்ற செஸ் போட்டி புதன்கிழமை தொடங்கியது. 49 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரியின் எம். குணால் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் தொடர்ந்து 4 வது ஆண்டாக […]

angusam 18/08/2016

ரியோ ஒலிம்பிக்கில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில், உலக சாம்பியனான சீன வீராங்கனை வாங் யுஹானை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 22-20, 21-19 என்ற செட் கணக்கில், வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஓகுராவுடன் இன்று மோதினார் இந்த ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டத்தில்  சிந்து 21 – 19 , 21-IO செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி […]

jefferywinneke 18/08/2016

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு காலிறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆட்டத்தின் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்த நிலையில், தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். ஆரம்ப சுற்றுகளில் […]