விளையாட்டு

johnhatton61986 14/08/2016

பிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டிக்கான காலிறுதி ஒன்றில் பிரேசில் அணி வலிமையான கொலம்பியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தொடரில் நெய்மர் அடிக்கும் முதல் கோல் இதுவாகும். தனக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை சரியாக பயன்பத்தி கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திலும் இரு […]

jefferywinneke 13/08/2016

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்தார்.பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள் சேஸ்’ ஓட்டத்தின் முதல் சுற்றில் இந்தியா சார்பில் லலிதா பாபர், சுதா சிங் பங்கேற்றனர். மொத்தம் 18 பேர் அடங்கிய ‘ஹீட் 2’ பிரிவில் […]

angusam 09/08/2016

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வளைகோல்பந்து விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தில் வெற்றிப்பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் பரிசுக் கோப்பை, பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ.1 இலட்சம் பரிசு தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். ——————– திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வளைகோல்பந்து விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தில் வெற்றிப்பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் பரிசுக் கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள், தலா ரூ.1 இலட்சம் பரிசு தொகை ஆகியவற்றை […]

jefferywinneke 08/08/2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபாவால் முதல் பதக்கம் வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு வாழ்த்துக்கள் தங்க தாமரை மகளே.. 130 கோடி இந்தியர்கள் போற்றுக உன் புகழே மகிழ்ச்சி மகளே மகிழ்ச்சி ..! தீபா கர்மாகர் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பிரேசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ […]

johnhatton61986 08/08/2016

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் திபா கர்மாகர் வால்ட் பிரிவில் 8வது இடத்தை பிடித்தார். ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27வது இடத்தை பிடித்துள்ளார். வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தார்.அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகள், பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகள், ஃப்ளோர் பிரிவில் 12.033 […]

johnhatton61986 08/08/2016

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் திபா கர்மாகர் வால்ட் பிரிவில் 6-வது இடத்தை பிடித்தார். ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27வது இடத்தை பிடித்துள்ளார். வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தார்.நேற்று இரவு நடந்த ஜிம்னாஸ்டிக்கில் இரண்டு முயற்சிகளுக்குப் பின்னர் 14.850 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் அன் […]

jefferywinneke 21/07/2016

அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையோடு களமிறங்க காத்திருக்கிறார் தீபா கர்மாகர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், தனது 7-ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் களம்புகுந்தார். ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க கால் பாதங்கள் உள் வளைந்து இருக்க வேண்டும். ஆனால் தீபாவின் கால் பாதங்கள் தட்டையாக இருந்தன. கடுமையான பயிற்சியின் மூலம் அதை சரி செய்த தீபா, பின்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார். […]

jefferywinneke 15/07/2016

தேசிய அளவில் மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய அணியும், குஜராத் மின்சார வாரிய அணியும் மோதின. இதில் 33க்கு 4 என்ற […]

jefferywinneke 14/07/2016

திருச்சி தடகள வீரர் வருகின்ற ஆகஸ்டு 5, 2016 ல் தொடங்க உள்ள “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரரான 25 வயதான “ஆரோக்கிய ராஜீவ்” வருகின்ற “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் தொடரோட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். பெங்களூருவில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முந்தைய தேசிய சாதனையான 3.2 நிமிடங்கள் என்பதை முறியடித்து, வெற்றிகரமாக […]

jefferywinneke 13/07/2016

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக தடுப்பு ஆட்டக்காரர் சுஷிலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ரிது ராணி, ஃபார்மில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மற்றொரு தடுப்பு ஆட்டக்காரரான தீபிகா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பு குறித்து சுஷிலா சானு கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், மிகப்பெரிய […]

angusam 13/07/2016

மின்வாரியங்களுக்கு இடையிலான  அகில இந்திய கபாடி போட்டி தமிழகத்தில் உள்ள மின்வாரியங்களுக்கு இடையிலான அகில இந்திய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் ஹாக்கி, கபாடி, கூடைபந்து, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. 1973ஆம் ஆண்டு முதல் இப்போடிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அகில இந்திய அளவிலான கபாடி போட்டியை நடத்த திருச்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. செய்தியார்களை […]

jefferywinneke 11/07/2016

திருச்சியில் முட்டையின் மீது அரை மணி நேரம் அமர்ந்து தியானம் செய்து 6 வயது பெண் குழந்தை உலக சாதனை படைத்தார் திருச்சி மண்டல டிஐஜியாக இருப்பவர் அருண். இவரின் மனைவி யமுனா தேவி மும்பையில் சுங்கம் மற்றும் கலால்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு இயைனியா அருண் என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது. இவர் இன்று 30 முட்டைகளின் மீது சுமார் அரை மணி நேரம் பத்மாசன நிலையில் அமர்ந்து தியானம் […]

jefferywinneke 10/07/2016

திருச்சி: மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 29 அணிகள் பங்கேற்றன. திருச்சி மாவட்ட கால்பந்து கூட்டமைப்பு மற்றும் எல்லோ ரோஸ் கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டிகளை அரசு தலைமைக்கொறடா ஆர்.மனோகரன் தொடங்கி வைத்தார். முதல் மற்றும் பிற்பாதி தலா 15 நிமிடங்கள் என 35 நிமிடங்கள் மட்டும் நடைபெறும் இப்போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்படும். திருச்சி […]

jefferywinneke 08/07/2016

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்தது. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்ததோடு, சகவீரரான நானிக்கும் கோலடிக்கும் அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அசத்தினார். பிரான்ஸின் லயன் நகரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி […]