விளையாட்டு

jefferywinneke 07/07/2016

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த அணி ஜிரூவ்டு, பேயட், கிரிஸ்மான் என பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது. காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் இத்தாலியை […]

angusam 24/06/2016

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி. முரளிதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதனை தொடர்ந்து ‘வாசன் எஸ்டேட்ஸ் காளிதாஸ் டி-20 கோப்பை’க்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ளது.இந்த போட்டியானது வருகிற 29-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறும். முழுக்க, முழுக்க ‘நாக்- […]

angusam 24/06/2016

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பதவி நீண்ட காலம் காலியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் இருந்து 21 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கமிட்டி இந்திய முன்னாள் வீரர்கள் கும்பிளே, ரவிசாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் […]

angusam 11/06/2016

இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. ஜிம்பாப்வே தொடர் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வே சிறிய அணி என்பதால் எப்போதும் 2–ம் தர இந்திய அணியே அங்கு அனுப்பப்படுகிறது. 2010–ம் ஆண்டு ஜிம்பாப்வே தொடருக்கு சுரேஷ் ரெய்னாவும் (முத்தரப்பு தொடரில் தோல்வி), […]