Cinema

angusam 29/01/2017

இதுதான் சரியான நேரம்…. தலைவா தலைமை ஏற்க வா.. ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் திருச்சி ரசிகர்கள். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வராகவும், சசிக்கலா அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அவர் முதல்வராக  முயற்சி செய்கிறார்.  அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வெடித்த மாணவர் போராட்டம் என அடுத்தடுத்த பரபரப்பில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இந்த அரசியல் நெருக்கடி சூழலில் உண்டாகி உள்ள நிலையில் இதுதான் சரியான நேரம், நடிகர் ரஜினி தலைமை ஏற்றால் தமிழகம் தலைநிமிரும் […]

angusam 09/01/2017

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் நேற்று கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் சென்னிமலை வழியாக மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் வந்த விஜயகாந்த ரோட்டோரம் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள தென்னை மர நிழலில் நிறுத்த சொன்னார். வீட்டின் முன் தென்னை மர நிழலில் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று […]

angusam 20/11/2016

சங்கர் இயக்கும் எந்திரன்2.0 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.  இந்தவிழாவில் பேசிய ரஜினிகாந்த், ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதைவிட வில்லனாக நடிப்பதில்தான் எனக்கு விருப்பம் என்றார்.  பழைய ரஜினி காந்த் கெட்டப்பில் அதி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள 3டியில் ஆங்கிலப்படம் தரத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் அக்சய்குமார் கதாயநாயகனாகவும், ரஜினி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் முழு  அப்டேட் செய்திகளை சுமந்த   நம்ம திருச்சி இதழை  படிக்க :

angusam 02/11/2016

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விவேக் ஓபராய், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் ‘கவலை வேண்டாம்’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் காஜல் அகர்வால். […]

angusam 30/10/2016

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்தித்தார் அடுத்து குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், கபாலி படத்தை தொடர்ந்து, சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து கொண்டு இருந்தார்.  சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. கபாலி படத்திலும், 2.0 படத்திலும் தொடர்ச்சியாக நடித்ததால், அவர் சோர்வாக காணப்பட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் […]

angusam 29/10/2016

பிரபு சாலமன் தயாரிப்பில் சாட்டை அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் சின்னி  ஜெயந்த். சின்னி ஜெயந்துக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது சாட்டை பட இயக்குநர் அன்பழகன் எடுக்கும் ரூபாய்.. 8 வருடத்திற்கு பிறகு நடிக்க வந்திருக்கிறேன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தது ரூபாய் என்கிறார் சின்னி ஜெயந்த். மேலும் அவர் கூறியதாவது: அடிப்படையில் நான் ஒரு மிக்ரி ஆர்ட்டிஸ். எனது மேடை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மகேந்திரன் சார் கை கொடுக்கும் கை படத்தில் நடிக்க வைத்தார். […]

angusam 28/10/2016

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் […]

angusam 11/10/2016

ரஜினி காந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்தார். இவர், கர்நாடக தலைநகர் பெங்களூரில், அமீகோ எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், ஆப் வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார். விழாவில் பேசிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் பணிவு மிக்கவர், […]

angusam 03/10/2016

விஜய் சாதனையை முறியடித்த நடிகத் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதுவரை இந்த டிரைலரை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 70 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இதன்மூலம் விஜய்யின் கத்தி டிரைலர் ஹிட்ஸை விட […]

angusam 03/10/2016

நடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளர், காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமூகமாக  தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதற்கு கோபத்துடன் பிரகாஷ்ராஜ், நான் ஒரு திரைப்பட நடிகர். இதொல்லே ராமாயணா” […]

angusam 23/09/2016

தொடரி – பட விமர்சனம் ஹீரோயிஸம் வாய்ப்புள்ள ஒரு கதையில், தனுஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு, ஹீரோவின் சூரத்தனம் பெரிதாக இல்லாமல் படம் இயக்கிய பிரபு சாலமனுக்கு முதலில் ஒரு ஹேன்ட் ஷேக். தில்லியில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது ரயில். அந்த ரயிலில் பேன்ட்ரி பையனாக பூச்சியப்பன் என்ற பெயரில் தனுஷ். பேன்ட்ரியின் மேலாளராக தம்பி ராமையா. உடன் ஊழியர்களாக கருணாகரன் உள்ளிட்ட ஏழெட்டு பேர்கள். கூபே பெட்டியில் மத்திய அமைச்சர் ராதாரவி […]

angusam 23/09/2016

ஆண்டவன் கட்டளை – பட விமர்சனம் வறுமை சூழலில் வசிக்கும் அடித்தட்டு சிறுவர்கள் பீஸா சாப்பிட ஆசைப்பட்டு, அதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சியே ‘காக்கா முட்டை’. அதே போன்றதொரு ஒன்லைன் ஸ்டோரி தான் ‘ஆண்டவன் கட்டளை’. வேலை தேடி லண்டன் செல்ல முயற்சிக்கும் கிராமத்து இளைஞன் போலி பாஸ்போர்ட் தயாரித்து தரும் புரோக்கர் கையில் சிக்கி, இறுதியில் அவன் எப்படி லண்டன் செல்கிறான் என்பதே கதை. மதுரை அருகே உள்ள கிராமத்தில் காந்தி என்ற பெயரில் வசிக்கும் […]

angusam 22/09/2016

தனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக வேலை செய்ய, அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். பிரபு சாலமன் படம் என்றாலே பார்த்தவுடன் காதல் தீப்பிடிக்க, அதன் பிறகு ‘என் உடம்புக்குள்ள புகுந்து என் உசுர எடுத்துட்ட’ன்ற வசனத்துடன் ஒரு காதல் வரும், அதே காதல் தான் இதிலும். கீர்த்தி சுரேஷிற்கு பெரிய பாடகி ஆக வேண்டும் என்று ஆசை. இவருடைய ஆசையை தெரிந்த தனுஷ் நெருங்கி பழக விருப்பப்பட்டு, எனக்கு வைரமுத்துவை […]

angusam 22/09/2016

“…ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ? ஒரு வணக்கத்தை போட்ருவோம்!” பெரும்பாலான ஹீரோக்களின் மனநிலை அதுவாகதான் இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு வரை. இப்போது இன்னும் கொடுமை. “…ந்தா பிரஸ்காரனுங்கள்லாம் மொத்தமா நிக்குறானுங்க. சிக்குனா ஆட்டோகிராப், போட்டோன்னு சட்டைய கசக்கிடுவானுங்க. பங்ஷன் ஆரம்பிக்கிற வரைக்கும் கார்லேயே இருப்போம். ஆரம்பிச்சதும் ஸ்டேஜ்ல ஏறி, முடியறதுக்குள்ள கார்ல புகுந்துடுவோம்”. இப்படியாகிவிட்டது பரிணாம வளர்ச்சி. குரங்கு மனுஷன் ஆகலாம். ஆனால் மனுஷன் குரங்காகிட்டே வர்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது […]

angusam 19/09/2016

வசூல் நாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், 24 ஏ.எம் என்ற நிறுவனம் மூலம் படம் ஒன்றை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணிபுரிகிறார்கள். தற்போது விருவிருப்பான படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், […]