Cinema

angusam 16/09/2016

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தொழிலதிபரான தனது கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் மனமுவந்து இந்த பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கின்றனர். நான்கு வருடங்கள் தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு சமீபத்தில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய இந்த ஜோடி, ஒரே ஒருமுறை மட்டுமே சர்ச்சையில் சிக்கியது. திருமணத்துக்குப் பிறகு, ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா […]

angusam 03/09/2016

கிடாரி படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பதற்கு ஒரே காரணம் இயக்குநர் பிரசாத் முருகேசனின் அழகான இயக்கம் மட்டும்தான். எத்தனை வன்முறைகள் இருந்தாலும் அதனை படமாக்கியிருக்கும்விதம்.. சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரமும், அகோரமும்.. பாடல் காட்சிகளில் சோகத்தை காட்டியிருக்கும்விதமும்.. சில காட்சிகளில் புத்தம்புதிய கோணமாக கேமிராவின் பங்களிப்பும்.. நடிகர்களின் அர்ப்பணிப்பான நடிப்பு.. இப்படி நிறையவே சேர்ந்து இந்தப் படத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றன.

angusam 03/09/2016

“இந்த சசிகுமார் கேமிரா முன்னாடி வந்து நின்னான்னா ரத்தம் பாக்காமல் ஓய மாட்டான்”னு சசிகுமார் சொல்லவில்லையென்றாலும், அதுதான் உண்மையாக இருக்கிறது. ‘சுப்ரமணியபுர’த்தில் ஆரம்பித்த ஜாதிக்குள் கலகம்.. அரிவாள் சண்டை, நம்பிக்கை துரோகம்.. கத்தியால் சாய்க்கப்படும் நட்பு… இதெல்லாம் சசிகுமாரின் ஆஸ்தான அஸிஸ்டெண்ட்டுகளாக மாறி, அவரது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இடையில் அவரே நல்ல பிள்ளையாக மாறி ‘பசங்க’, ‘தலைமுறைகள்’ என்று விருதுகளுக்கான படங்களை எடுத்தாலும் ‘அது ஆத்ம திருப்திக்கு’ என்கிறார். அப்படியானால் இந்த […]

angusam 26/08/2016

“எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” – பட விமர்சனம் வீடியோ லிங் “இந்த படத்தில் சிவாஜியை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது.. இந்த ரோலில் கமலை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” என்றெல்லாம் விமர்சனம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட ஹீரோ டார்கெட் ஸ்டோரியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் கணடிப்பாக கவுண்டமணியைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. ஆமாம்.. அவரை தவிர நக்கலும், நையாண்டிமாய், கோலிவுட் சினிமா இன்டஸ்ட்ரியிலிருந்து, ஹிந்தி, […]

jefferywinneke 19/08/2016

திருச்சியில் திரைப்பட நடிகரை பெண் ஒருவர் கடத்தி வைத்திருப்பதாக அவரது பெற்றோர் போலீஸில் வியாழக்கிழமை புகாரளித்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன், ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவின் விவரம். என்னுடைய மகன் மலைமான் (24). கோலாகலம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மலைமான் திடீரென மாயமானார். அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களிலும் அவரைத் […]

jefferywinneke 18/08/2016

பார்ச்டு படத்தில் ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் நிர்வாணமாக நடித்திருந்த காட்சியொன்று கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அக்காட்சியில் நடித்த ஹுசைன் கோபமடைந்துள்ளார். டோனி, ரத்த சரித்திரம், ஆல் இன் ஆல் அழகுராஜா என முன்னதாக பல தமிழ் படங்களில் நடித்திருந்த போதும், ரஜினி ஜோடியாக கபாலியில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுள்ளார் ராதிகா ஆப்தே. இந்நிலையில், ராதிகா ஆப்தே பெண் இயக்குநர் லீனா […]

jefferywinneke 18/08/2016

‘கபாலி’ படத்திற்கு முதன் முதலில் பெருமை சேர்த்த ஒன்றாக இருந்தது அந்தப் படத்தின் டீசர்தான். அந்த டீசரில் இடம் பிடித்த ‘நெருப்புடா…’ பாடல் ரசிகர்களிடம் உடனே பற்றிக் கொண்டது. ரஜினிக்காகவே எழுதப்பட்டது போன்ற அந்த வார்த்தை அவருடைய நடைக்கும், பார்வைக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருந்ததாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதுவரை ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த எத்தனையோ விதமான ஹீரோயிசப் பாடல்களில் ‘நெருப்புடா…’ ஒரு தனி ரகமாக அமைந்தது.சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய […]

jefferywinneke 18/08/2016

கபாலி வெற்றியை தொடர்ந்து ,ஷங்கர் இயக்கத்தில் ரஜினி  நடிக்கும் அடுத்த படமான 2.ஓ வின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம். இந்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் ஷங்கர் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடிப்பில் ரூ 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘2.ஓ’. படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த ஷெட்யூல் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்ற ரஜினி, சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். […]

jefferywinneke 16/08/2016

நியூயார்க்:மறைந்த கர்நாடக இசைக் கலைஞர், எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், ஐ.நா., சபையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது.எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 100வது பிறந்த நாள் விழா, அவர், 1966ல், ஐ.நா., சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியதன், 50வது ஆண்டு விழா, இந்திய சுதந்திர தினத்தின், 70வது ஆண்டு விழா ஆகிய மூன்றும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., சபையில், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னையைச் சேர்ந்த, பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் […]

jefferywinneke 14/08/2016

தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார். இவர் இரண்டு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் நா.முத்துக்குமார். நாட்டின் உயரிய தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில், 9 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அதிலும் தொடர்ந்து இரண்டு முறை […]

johnhatton61986 13/08/2016

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானாவிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் கலந்து கொள்கிறார். ரஜினி சினிமாவிற்கு வந்து 41 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவர் கடந்து வந்த பாதையை பற்றி, ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கிறார்களாம். ரஜினி ரசிகர்களின் கருத்துக்களை நேரில் கேட்ட பின், தான் சந்தித்த வெற்றி, […]

jefferywinneke 13/08/2016

படத்தில்… பதவியைத் தக்க வைக்க தகிடுதத்தம் செய்யும் முதல்வர் இல்லை, இடைத் தேர்தலில் ஜெயிக்க எதிராளியை கொலை செய்யும் ஆளுங்கட்சி உறுப்பினர் இல்லை, மது-மாது என எப்போதும் உல்லாசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் சுளீர் அரசியல் பேசுகிறான் இந்த ‘ஜோக்கர்’! ‘பவருக்கும், பவுசுக்கும் அடிமையாகி, தீயதைக் கொண்டாடி, நல்லதை மறந்து வாழ்ற சமுதாயத்துலதான் நாம வாழ்றோம். ஆனா, அதைத் தட்டியும் கேட்கமாட்டோம், தட்டிக் கேட்குறவங்கள ஜோக்கர்னும் சொல்லுவோம்’ என்ற நிதர்சனத்தை […]

jefferywinneke 13/08/2016

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவின் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரம் திரும்ப கிடைத்துள்ளது. அதனை ஒப்படைத்த கால்டாக்சி ஓட்டுநரை விக்ரம் குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்த விவரம்: பிரபல நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா -திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் ஆகியோரின் திருமணம் கடந்த மாதம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது அக்ஷிதாவுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி மாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் காதர் நவாஸ்கான் […]

jefferywinneke 13/08/2016

தமிழக சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. தி.மு.க. உறுப்பினர் பேச்சு இந்த விவாதத்தில் உறுப்பினர் வாகை சந்திரசேகர் (தி.மு.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு உறுப்பினர் சந்திரசேகர் (தி.மு.க.) மழையால் சென்னை வேளச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அங்குள்ள ஏரியும் குப்பைகளால் நிறைந்துள்ளது. இதை தூர்வார வேண்டும். திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பு பகுதியும் கடந்த மழைக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுபோன்ற இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை […]