Education

johnhatton61986 10/08/2016

தமிழகத்தில் குடிப் பழக்கத்தால் ஏற்படும் குற்றச் செயல்களுக்கு அளவே இல்லை. நாளுக்கு நாள் குடிகாரர்களாலும், குடிப் பழக்கத்தாலும் ஏற்படும் குற்றச் செயல்களைப் பட்டியலிட தனியாக ஒரு செய்தி இணையதளமே தொடங்கலாம். அந்த அளவுக்கு அட்காசம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று குடிப் பழக்கத்தால் நடந்த 3 குற்றச் செயல்களின் தொகுப்புதான் இது. இது வெறும் சாம்பிள்தான். வெளியில் தெரியாமலேயே போகும் குடி போதை தொடர்பான குற்றச் செயல்கள் எத்தனையோ, எத்தனையோ. ரயிலில் பயணித்த 15 வயது சிறுமியிடம் […]

jefferywinneke 09/08/2016

2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்விற்கு செப்டம்பர் 8 வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண்: 15/2016 விளம்பர எண்: 445/2016 தேதி: 09.08.2016 பணி: Junior Assistant (Non – Security) – 2345 […]

jefferywinneke 05/08/2016

தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், ‘ஓட்டல் மேனேஜ்மென்ட்’ படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய் கட்டணத்தில், இங்கு படிக்கலாம். இதுகுறித்து, […]

jefferywinneke 05/08/2016

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை பள்ளியில் நடைபெறும். அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் […]

jefferywinneke 05/08/2016

சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11 மற்றும் 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2016–2017–ம் ஆண்டில் கல்வி […]

angusam 04/08/2016

WAY  TO  SUCCESS Hai Everybody….   Everybody want to taste success in life and no wish to be called as a Looser or to be failed… Success will not be in your doorstep or it is not as easy to achieve, unless there is DESIRE DETERMINATION DEDICATION  and DEVOTION In your life towards achieving SUCCESS… […]

jefferywinneke 28/07/2016

கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட  தங்களது ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,  பள்ளி மாணவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனை செய்ததோடு, மாணவர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி, எப்படியாவது தங்கள் ஆசிரியர் உயிர் பிழைக்க வைக்க  துடித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணாகிப்போனது மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள், பெண்கள் […]

jefferywinneke 22/07/2016

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.  இந்தப் பணிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவு ஜூலை 1-இல் வெளியிடப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.  இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் (www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேதி-நேரம் […]

angusam 20/07/2016

டெல்லி தேசிய சிறுவர் மன்றத்தினரால் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் இளந்திர விருது ஜனாதிபதியால் வழங்கப்படும். இளந்திருவிருது பெற 10 – 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு, பல பிரிவுகளில் கடந்த ஆண்டு திருச்சி மண்டலக்கலை பண்பாட்டு மைய துணை இயக்குநர் அலுவலகத்தில் போட்டிகள் நடந்தது. அதில் 14 பேர் சென்னையில் நடந்த மாநில இளந்திருவிருதுப் போட்டியில் பங்கேற்றனர். டில்லியில் நடந்த தேசிய போட்டிக்கு 60 பேர் தேர்வாகினர். இதில் 4 பேர் திருச்சி மாணவர்கள். தேசிய அளவிலான இளந்திரு […]

jefferywinneke 19/07/2016

சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளியில் இருந்து மாணவ, மாணவியர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர். அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக அப்போது அவ்வழியாக தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சென்றார். முதலமைச்சரை கண்ட பள்ளி குழந்தைகள் உற்சாகமாக கை அசைத்தனர். முதலமைச்சர் சென்றவுடன் பள்ளி குழந்தைகளும் அருங்காட்சியத்தில் சென்று பார்வையிட தொடங்கினர். அப்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தான் வழியில் கண்ட பள்ளி குழந்தைகளை தனது தலைமை செயலக அறைக்கு அழைத்து […]

jefferywinneke 19/07/2016

சென்னை: அகில இந்திய பட்டய கணக்காளர் (சி.ஏ.) இறுதித் தேர்வில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சி.ஏ. தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.icai.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதில், தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரின் […]

jefferywinneke 17/07/2016

மாணவர்கள் நலனுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றுகள் வழங்கும் விழா திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 280 மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: திமுக […]

jefferywinneke 14/07/2016

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவு வெளியாகாததால், அவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. புதுச்சேரியில் தாகூர் கலைக்கல்லுாரி, ராஜிவ்காந்தி கலை, அறிவியல் கல்லுாரி, கஸ்துார்பாய் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லுாரி, காமராஜர் கல்லுாரி, பாரதிதாசன் உள்ளிட்ட 6 கல்லுாரிகள் உள்ளன. காரைக்காலில் அண்ணா கலை, அறிவியல் கல்லுாரி, அவ்வையார் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியும், மாகி ஏனாமில் தலா ஒரு […]

jefferywinneke 13/07/2016

பிளஸ் 2 முடித்தோர், டிப்ளமோ இன் பார்மசி படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்.,படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன. டிப்ளமோ இன் நர்சிங் முடித்தோர், போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,படிப்பில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன. இந்த, மூன்று […]

angusam 09/07/2016

தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தினமும் ஏதோ ஒரு மூலையில் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. அதோடு படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள், மாணவிகள் மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வியை புகுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்வது. ஒருசிலர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்க்குள் […]