HEALTH

angusam 18/07/2017

கூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் ! அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது.   சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து […]

angusam 25/02/2017

முளைத்தால் மரம் இல்லையெனில் உரம்” விதைப்பந்துகள் இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், திருச்சியில் இளைஞர் ஜெயராஜ் அஜய் என்பவர் தன்னுடைய பிறந்தநாளில் தன்னார்வலர் அமைப்புகள் துணையோடு விதை பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சியில் 2 நிமிடங்கள் 17 விநாடிகளில் 2017 விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி . […]

angusam 25/02/2017

ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம். ஆலம் ஆரோக்கிய பெட்டகம், ஜீனியர் சேம்பர் இன்டர்நேஷல் திருச்சி அமைப்பு சார்பில் ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நடைபெற்றது. இயற்கை ஆர்வலர் முரளி பேசுகையில், அதிகாலையில் ஆரோக்கிய சூப் குடியுங்கள் செயற்கையான மென்பானங்களை தவிர்த்திடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவாக அமைத்துக் கொண்டால் ஒவ்வொருவரது வாழ்க்கையும் வசந்தமாக அமையும் என்றார். யோகாசிரியர் விஜயகுமார் , எட்வர்டு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

angusam 30/01/2017

“தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்” (IMMUNIZE AND PROTECT YOUR CHILD) சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar) Assitant Research Professor at Hanyang University வாட்சப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில் குழந்தைகளுக்கு “தடுப்பூசி போடத் தேவையில்லை அதுஒரு பன்னாட்டு சதி” என்ற கோணத்தில் முழு மூடத்தனமாக விசமக் கருத்தாக இருந்தது. இதனைக் கேட்பவர்கள், அடடே உண்மைதான் போல் இருக்கு என நினைத்து அதிகமாக வாட்சப்பிலும் முகநூலிலும் நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். விளைவு, இது போன்று வேண்டுமென்றே தடுப்பூசிகள் […]

angusam 13/10/2016

பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி  தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர்  எனும் இளைஞர் தற்கொலை.  ஜவஹர்,  பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதற்காக கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்து போராடியவர்,  டவரில் ஏறியும் போராடினார். ஆனால் அரசாங்கம் பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக சொன்னதோடு சரி ஒழிக்கும் நடவடிக்கையில்லை. இதனால் மனம் வெதும்பிய ஜவகர்,  கடந்த 10 ந் தேதி ஒரு வீடியோவில் என் […]

jefferywinneke 13/08/2016

கண்கள் உங்கள் வயதை சுட்டிக்காட்டும் கருவி. வாய் பொய் பேசினாலும் கண்கள் உள்ளதை அப்படியே காட்டிக் கொடுத்துவிடும். அப்படி மனதிலுள்ளதை பேசாமலேயே வெளிப்படுத்தும் கண்கள் எத்தனை சக்திவாய்ந்தது. அதனை சோர்ந்து போகாமலும், கம்பீரமாகவும் வைத்தொருப்பது நம் கையில்தான் உள்ளது. இங்கு கண்களை அழகாக்க சின்ன சின்ன குறிப்புகள் கூறப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள். சோர்வு நீங்க : தினமும் தூங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி வட்ட […]

jefferywinneke 13/08/2016

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம். அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால், […]

jefferywinneke 13/08/2016

பாதாம் முந்திரி, வால்நட், போன்ற நட்ஸ் வகைகள் மிகவும் காஸ்ட்லியானது என்றாலும் அதிலுள்ள சத்துக்கள் உயர்தரம் கொண்டவை. அதிக நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஈ அகியவை கொண்டுள்ளது. அலர்ஜியை உண்டாக்கும் புரோட்டீனும் குறைந்த அளவு உள்ளது. அதோடு குறைந்த அளவு சோடியம் உள்ளது. இவ்வளவு நல்லவைகள் கொண்ட நட்ஸ் பெண்களுக்கு மிக மிக நல்லது. நட்ஸ் தினமும் சாப்பிடும் பெண்கள் சாப்பிடாத பெண்களை விட ஆரோக்கியமாக இருப்பார்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது. தினமும் நட்ஸ் சாப்பிடும் […]

angusam 09/08/2016

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் —————— திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் தவணையாக 10.02.2016 அன்று நடைபெற்றது. இதன் இரண்டாம் […]

jefferywinneke 19/07/2016

மனிதர்கள் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர். தூக்கமே மனிதர்களின் புத்துணர்ச்சியை தூண்டி அவனை செயலாற்றவைக்கும் ஆற்றல் கொண்டது. நாள்தோறும் இச்செயல் நடந்தால்தான் அவனது களைப்பு நீங்கி மீண்டும் வேலையை செய்ய முடியும். மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தூங்கியே விழிக்கின்றன. அதுவே மறுநாளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் ஆற்றலாகவும் விளங்குகிறது. தொடக்கத்தில் பாறைகளிலும், மணல் மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய மனிதன், நாளடைவில் விலங்குகளின் தோல்கள் கொண்ட படுக்கை விரிப்புகளை உருவாக்கி தூங்கும் படுக்கையை உருவாக்கினான். […]

jefferywinneke 13/07/2016

நரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதிகம் மது குடிப்பவர்களுக்கும் பொதுவாக உடல் எரிச்சல் ஏற்படும். வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். உடல் எரிச்சல் இருக்கும்போது, இதை வடிக்கட்டி குடித்தால் பிரச்னை சரியாகும். வாரம் ஒருமுறை சர்க்கரை நோயாளிகள் […]

jefferywinneke 13/07/2016

ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். பெண்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் அவர்களுடைய உடல் எடை வெகுவாக குறைந்து விடும். ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன. ஜிம்மில் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் பலவும் […]

jefferywinneke 09/07/2016

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மாற்றுத்திறனாளி, முதியோர்களின் வசதிக்காக தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கிய சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வந்தன. பழுதடைந்த சக்கர நாற்காலிகள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இதில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் போன்ற பயணிகளை அழைத்து சென்று ரெயில்களில் ஏறுவதற்கு சக்கர நாற்காலிகள் ரெயில்வே நிர்வாகத்தால் ஏற்பாடு […]

jefferywinneke 08/07/2016

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம். அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், […]

jefferywinneke 07/07/2016

இயற்கையின் வர பிரசாதமான நோய் தீர்க்கும் மூலிகைகளை காப்பாற்ற நினைக்கும் பெண்கள். பல்லாயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய மூதாதையர்கள் விட்டு சென்றது இந்த இயற்கை மூலிகைகள் தான், ஆனால் கடந்த 30 வருடங்களாக இயற்கை மூலிகை மருத்துவங்களை நவீன ஆங்கில மருத்துவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துவங்கியுள்ளது. இயற்கை மருந்துகளின் பயன்பாட்டை உருக்குலைய செய்த ஆங்கில மருந்துகள் தற்காலிக வலி நிவாரணியாகவும். பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதும் தான் மிச்சம் அதில் சிக்கிய பலருடைய வாழ்க்கை […]