special stories

angusam 17/11/2017

ஆட்சியைக் கலைச்சிடுவேன்!… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி!…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.   பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]

angusam 07/11/2017

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், செங்கோட்டை அருகேயுள்ள, காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டிக் கொடுமையை உலகறியச் செய்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை வட்டியை மட்டுமே கட்டி வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த […]

angusam 03/05/2017

குழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது – மனம் திறந்த குழந்தைகள் நல திட்ட இயக்குநர் நம்முடைய குழந்தைகளையே கவனிக்க நமக்கு நேரமில்லை. ஆனாலும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து அந்தக் குழந்தைகளுக்கு உதவவது எவ்வளவு சிரமம். இந்தப் பணிக்காக  தனது குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, பலக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க காரணமாய் விளங்குகிறார் தமிழக அரசின் திட்டத்தின்கீழ் இயங்கும் “சியர்ஸ் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும்  பெர்லின். நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து […]

angusam 16/04/2017

ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது வீட்டுல வைக்கிற கிண்ணிய கூடு விடமாட்டாங்க- அதிரடி பஞ்சாயத்து தீர்ப்பு ராம்ஜி நகர் திருடர்களை திருத்துவதற்கு திருச்சி போலீஸார் ஆண்டுகணக்கில்  […]

angusam 11/04/2017

ஆபாசத்தின் வலையில் நம் வீட்டு குழந்தைகள் ! – பெற்றோர்களே உஷார் ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.   குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது […]

samaraiqi4273 07/10/2016

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சராசரி விகிதாசாரத்தில் திருநங்கைகள் என்ற மூன்றாம் பாலினம் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கி முடங்கி கிடந்த காலம் கடந்து தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை திருநங்கைகள் நிரூபித்து வருகின்றனர். இந்த வளர்ச்சி தான் புதிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுவே […]

angusam 19/09/2016

கனவுகள் ஆயிரம் (1)  சினேகா பாலா அன்றும் அவள் கனவு கண்டாள். பயந்து படுக்கையில் இருந்து எழுந்தாள். எப்போதும் போல் இல்லாமல் அன்று கொஞ்சம் பயங்கரமாக இருந்தது அகிலாவிர்க்கு. அகிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். எழுந்து அம்மாவின் கையால் காபி குடித்துவிட்டு குளித்து கல்லூரிக்கு சென்றாள். மனம் எதிலும் ஈடுபடவில்லை. இரவு கண்ட கனவில் தான் இருந்தது. அப்படியே யோசித்தாள்.அவள் ஏதோ மலையில் நிற்கிறாள். அங்கு ஒரு மரத்தில் அகிலா ,ராஜ் என்று எழுதியிருந்தது. பார்ததும் […]

jefferywinneke 10/09/2016

சாதனை நாயகன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர் என்று சொல்லும் மாரியப்பனின் வயது 21 குக்கிராமம் தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு […]

jefferywinneke 09/09/2016

“ஆவி”யாக அலைகிறார் சுவாதி… அமாவாசையில் பழிவாங்கப் போகிறார்.. சொல்வது ஆவி “ஸ்பெஷலிஸ்ட்” அமுதன் தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி ஆவி கூறியதாக ஆவிகளிடம் பேசும் அமுதன் என்பவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் […]

angusam 22/08/2016

தெலங்கானா மாநிலம், ஹைராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம்இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் அசத்திக் கொண்டிருந்த சிந்து ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் யூத் கேம்ஸ், தெற்காசிய போட்டிகள், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்து தொடரிலும் ஏதாவது ஒரு பதக்கம் தட்டினார். இதையெல்லாம் விட, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றதும், யார் அந்த சிந்து என உலகம் உற்று நோக்கியது. ’டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ என்று சொல்வார்களே […]

jefferywinneke 07/08/2016

BOSS நம்ம PLAN படி எல்லாம் CORRECTA போய்கிட்டு இருக்கு 01.இரசாயன உரங்களை தெளிக்க சொல்லி,இயற்கை விவசாயத்தை ஒழித்து மண்ணை மலடாக்கினோம்.. 02.நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் சோம்பேறி யாக்கி விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்ப்படுத்தினோம்…. 03.பாரம்பரிய விதைகளை அழித்து, விதை,உரம்.பூச்சி மருந்துகளை விலை கொடுத்து கம்பேனிகளிடம் வாங்க வைத்து விவசாயிகளை கடன் காரனாக்கினோம்… 04.மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்சனையை பூதாகரமாக்கி,விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பார்த்துக்கொண்டோம்…. 05.ஏரி குளங்களை தூர் வாராமல்,மழை நீரை சேமிக்க வழி இல்லாம […]

jefferywinneke 15/07/2016

கபாலி அடிப்படையில் காதல் கதை… இரத்தமும் சதையுமாய் 50 வயது மனிதனின் (ரஜினி) காதல்கதை. அவனின் இறந்த காலத்தில் ஏற்பட்ட தீராத பகையினால் தன் இரண்டு குழந்தைகளில் ஒன்றை தன் கணவனின் கையால் வில்லனால் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமுடியாமல் – தன் கணவனை விட்டுபிரியும் மனைவி (ராதிகா ஆப் தே) தன் தந்தைக்கு எதிராக மகளின் (தன்ஷிகா) மனதில் தன் தந்தையை கொல்ல துடிக்கும் வன்மத்தை குறைக்க போராடும் ராதிகா ஆப் தே… தன் வாழ்க்கையின் இழப்புகளை சந்தித்த மனிதனாய் […]

jefferywinneke 14/07/2016

திருச்சி தடகள வீரர் வருகின்ற ஆகஸ்டு 5, 2016 ல் தொடங்க உள்ள “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரரான 25 வயதான “ஆரோக்கிய ராஜீவ்” வருகின்ற “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் தொடரோட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். பெங்களூருவில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முந்தைய தேசிய சாதனையான 3.2 நிமிடங்கள் என்பதை முறியடித்து, வெற்றிகரமாக […]

jefferywinneke 13/07/2016

மும்பை: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான டோணிக்கு ஒரு காதலி இருந்ததாகவும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. டோணியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி’ என்ற படம் ஹிந்தியில் தயாராகி வருகிறது. இப்படத்தில் தன்னுடைய காதலியின் நினைவுகளை படமாக்க இயக்குநர், நீரஜ் பாண்டேவுக்கு டோணி அனுமதி தந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டோணியின் 20 வயதையொட்டிய காலகட்டத்தில், அவர் பிரியங்கா என்ற […]

jefferywinneke 13/07/2016

பிரபல பத்திரிக்கை நிருபர்கள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு ஏராளமான புற்றிசல் நிருபர்கள். தமிழகத்தில் புற்றீசல்கள் போல நிருபர்கள் பணிக்கு ஏராளமானோர் வந்துவிட்டனர். தினமும் வெளிவரக்கூடிய பிரபல பத்திரிகைகளின் நிருபர்கள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு ஏராளமானவர்கள் வந்துவிட்டதால் அந்த பணிக்குரிய மரியாதையே போய்விட்டது என கூறலாம். அதற்கு காரணம் கவருக்காக குறைந்தது 40க்கும் மேற்பட்ட நிருபர்கள் வந்துவிட்டனர். அதிகபட்சம் 70 பேர் உள்ளனர். சென்னையில் இருந்து வெளிவரக்கூடிய பத்திரிகைகள், வாரம் ஒருமுறை, வாரம் இருமுறை வரக்கூடிய பத்திரிகைகள் அதிகளவில் […]