Trichy

angusam 17/11/2017

ஆட்சியைக் கலைச்சிடுவேன்!… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி!…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.   பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 19/04/2017

திருச்சி உறையூரில் மனைவிக்கா மைத்துனரை கடத்தி அடித்து உதைத்த ரகசிய கேமரா வியாபாரி கைது திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் உறையூர் சாலை ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஷ்வரி(23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு […]

angusam 16/04/2017

ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது வீட்டுல வைக்கிற கிண்ணிய கூடு விடமாட்டாங்க- அதிரடி பஞ்சாயத்து தீர்ப்பு ராம்ஜி நகர் திருடர்களை திருத்துவதற்கு திருச்சி போலீஸார் ஆண்டுகணக்கில்  […]

angusam 09/04/2017

திருச்சி விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பிக்க அழைப்பு விளையாட்டு விடுதியில் சேர திருச்சி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் தனித்தனியாக […]

angusam 23/03/2017

திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு ….   உற்பத்தியும் குறைந்து, வரத்தும் குறைந்ததால் திருச்சியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.50க்கு விற்ற பீன்ஸ் ரூ.100 என விலை உயர்ந்து உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு திருச்சி மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வது வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக […]

angusam 31/01/2017

91 பெண் குழந்தைகள் யார் ? விளக்கும் கிதியோன் ஜேக்கப் ! அநாதை குழந்தைகள் வெளிநாட்டிற்கு கடத்தல், 130 குழந்தைகளுக்கு மேல் இருந்தார், எயிஸ்ட் நோயினால் குழந்தை இறப்பு, பணத்திற்காக குழந்தைகளை வெளிநாட்டில் ஆடவைக்கிறார்கள். என கடந்த சில மாதங்களாக திருச்சியில் உள்ள மோசே காப்பகத்தை பற்றி பரபரப்பாக தினசரி, மற்றும் வார இதழ்களில் வெளிவந்து அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக வழக்கு குறித்து கிதியோன் ஜேக்கப் நம்ம திருச்சி இதழுக்கா பேசிய போது…. […]

angusam 29/01/2017

இதுதான் சரியான நேரம்…. தலைவா தலைமை ஏற்க வா.. ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் திருச்சி ரசிகர்கள். ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வராகவும், சசிக்கலா அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அவர் முதல்வராக  முயற்சி செய்கிறார்.  அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வெடித்த மாணவர் போராட்டம் என அடுத்தடுத்த பரபரப்பில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இந்த அரசியல் நெருக்கடி சூழலில் உண்டாகி உள்ள நிலையில் இதுதான் சரியான நேரம், நடிகர் ரஜினி தலைமை ஏற்றால் தமிழகம் தலைநிமிரும் […]

angusam 23/12/2016

இந்தவார நம்ம திருச்சி இதழில்… தொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி  இதழ்,  திருச்சி போலீஸாருக்கு ராயல் சல்யூட்.. இந்தியாவிற்கே வழிகாட்டிய மணப்பாறை மாணவர்கள் உலக வில்வித்தைப்போட்டியில் திருச்சி மாணவர் நிமிடத்திற்கு 93முறை சாதிக்கும் மாணவர் எங்கவூரைப்போல வருமா திருச்சி திருவெறும்பூர் ஊராட்சி குறித்த  சிறப்புக்கட்டுரை ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அக்கறைகாட்டுமா அரசு குடும்ப விழாவாக நடந்த வழங்கறிஞர் சங்க விழா நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களே தயாரா.. நமக்குள்ளே ஏராளமான கதை இருக்கு.. பெரியார் கைத்தடிக்கு […]

angusam 13/09/2016

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும், விளையாட்டு விடுதி மாணவர்களும் இங்கு தான் ஆக்கி, கைப்பந்து, நீச்சல், டென்னிஸ், கபடி என பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அவ்வப்போது மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அகிலஇந்திய அளவிலான ரெயில்வே தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. திருச்சியில் விளையாட்டுக்கு […]

angusam 07/09/2016

தூய்மையான மாநகராட்சி என்று பெயர் வாங்கிய திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம் தற்போது திறந்தவெளி பார் மையங்களாக செயல்படுகிறது. சுற்றுசுழல், சுகாதாரம் ஆகியவற்றிற்கு பெயர் வாங்கின திருச்சி மாநகராட்சியின் மேற்பார்வையில் உள்ளது திருச்சி மத்திய பேருந்து நிலையம். இது தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் இந்த பேருந்து நிலையத்தில் எந்த நேரமும் மக்களின் நடமாட்டம் இருக்கும். இந்த பேருந்து நிலையத்தை சுற்றி 4 டாஸ்மார்க் கடைகள் இருப்பதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் அவசரமாக செல்வதற்கு முன்னால் […]

jefferywinneke 06/09/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை  மணப்பாறைப்பட்டி ரோடு  பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24).  எம்.பி.ஏ. படித்துள்ள இவர்  திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி.  ஆலோசகராக வேலை பார்த்து வந்தார். அதே ஊர் நேருஜிநகரை  சேர்ந்த  சின்னச்சாமி மகன் மணிகண்ட சங்கர் (27). பி.டெக்., படித்துள்ள இவர் சென்னையில்  உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜீனத்துக்கும்,  மணிகண்ட சங்கருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டது. இந்த […]

jefferywinneke 06/09/2016

திருச்சி சர்கார்பாளையம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த குமார்(எ)குமரேசன் வயது.45, என்பவர் திருச்சி காவேரி பாலம், அருகில் ஆற்றில் உள்ளே இருந்த  ஊற்றில் தண்ணீர் குடித்த நிலையில்,மர்மமான முறையில் இறந்து கிடந்தார், தகவல் அறிந்த கோட்டைபோலிஸார் சம்பவ இடத்திற்க்கு சென்று பிரேதத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

jefferywinneke 02/09/2016

சாதி மாறி காதல் திருமணம் செய்யும் பிள்ளைகளை பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆணவ கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்தே வருகின்றன. தர்மபுரி இளவரசன், உடுமைப்பேட்டை சங்கர், சேலம் கோகுல்ராஜ் என தமிழகம் பல ஆணவ கொலைகளை கண்டுவிட்டது. ஒருபக்கம் ஆணவ கொலைகளுக்கு எதிராக கூபாடு போட்டாலும், சாதிய வெறியர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள், தங்களை ஆணவ கொலை செய்ய ஊர் பஞ்சாயத்தில் […]

jefferywinneke 01/09/2016

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கல்லூரி மாணவி திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா. இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் மோனிகா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி 3-ம் ஆண்டு […]