Trichy

jefferywinneke 16/08/2016

திருச்சி விமான நிலைய வளாகத்தில் 100 அடி உயரத்தில் மிகப் பெரிய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நாடு முழுவதும் 19 விமான நிலையங்கள் உள்ளிட்ட 90 முக்கிய இடங்களில் மிக உயரமான இரும்பாலான கொடிக் கம்பத்தில் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் 106 அடி உயரத்தில் (ஹைமாஸ்) கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை காலை இந்தியாவின் 70-வது […]

jefferywinneke 16/08/2016

அடுத்தமாதம் திருச்சி – சார்ஜா இடையே நேரடி விமான சேவை தொடங்கும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுதந்திரதின விழா திங்கள்கிழமை  கொண்டாடப்பட்டது. தேசிய கொடியினை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஏற்றி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளார்களிடம் குணசேகரன் தெரிவித்ததாவது: திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கும். விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் […]

jefferywinneke 16/08/2016

திருச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலெக்டர் கொடி ஏற்றினார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். வண்ண பலூன்கள், வெண் புறாக்களையும பறக்க […]

jefferywinneke 16/08/2016

 திருச்சி ஜங்ஷன் எ.புதூர் பகுதியில் உள்ள ரயில்வே யார்டில் ரயில் பெட்டிகள் மராமத்து பணி மற்றும் தினமும் செல்லும் பயணிகள் ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படும். இதில் திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு இயக்கப்பட்ட டெமு ரயில் பெட்டியில் ஒரு சிலவற்றை மேம்படுத்துவதற்கு சென்னை அனுப்புவதற்காக யார்டில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.  அதில் 2 பெட்டியில் மர்ம ஆசாமிகள், ஸ்பிரே பெயின்ட்டில் (அழிக்க முடியாதபடி) ஆங்கில வார்த்தையினால் எழுதி உள்ளனர்.  இதுபோல் எழுதியது யார் என […]

jefferywinneke 16/08/2016

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம் தேதி தூயவளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம், ஈக்விடாஸ் நுண்கடன் நிறுவனம்,விஷன் இந்தியா, வேலி மென்பொருள் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாமை நடத்துகின்றன. முகாமில் 1500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.இளநிலை,முதுநிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளில் தேர்ச்சி […]

jefferywinneke 13/08/2016

திருச்சியில் தனியார் பள்ளியில் மாணவர்களை முழங்கால் போட்டு நடக்க வைத்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. முழங்கால் போட்டு… திருச்சி காஜாநகரில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5–ந்தேதி ஒரு மாணவன் பந்தை வைத்து விளையாடியதற்காக 70 மாணவர்களை முழங்கால் போட்டு நடக்க வைத்து பள்ளி ஆசிரியை கொடுமைப்படுத்தியதாகவும், இதில் மாணவர்கள் பலர் காயமடைந்ததாகவும், மாணவர்களின் பெற்றோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தியிடம் புகார் தெரிவித்தனர். மேலும் பள்ளியில் […]

jefferywinneke 13/08/2016

திருச்சியில் போலி ஓட்டுனர் உரிமம் தயாரித்து விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, போலி ஓட்டுனர் உரிமங்களை பறிமுதல் செய்தனர். போலி ஓட்டுனர் உரிமம் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்ஸ்பியர். இவர் ஓட்டிச்சென்ற வேன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக அவர் காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தார். அப்போது அவருடைய ஓட்டுனர் உரிமம், காப்பீடு செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் […]

jefferywinneke 13/08/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் வெள்ளிக்கிழணை காலை நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, தனக்கு முன்னால் ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில் சரக்கு வாகனம் நொறுங்கி, சாலையோரமாக உருண்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வாகனத்தில் பயணம் […]

jefferywinneke 08/08/2016

திருச்சி பொன்மலைபட்டி டாலர்-காதுகேளாதவர் பள்ளி மாணவ மாணவிகளால் கடந்த ஞாயிறு 7.8.16 முதல் 9.8.16 வரை சமூக அறிவியல் & கணித கண்காட்சி (Exhibition) நடைபெற்று வருகிறது.கண்காட்சியில் கலந்து கொண்ட நமது நிருபர் குழு, காது கேளாத மாணவர்களால் உருவாக்கப்பட்டிருந்த சமூக அறிவியல் கண்காட்சி அரங்கங்கள் ஆச்சரியமூட்டின.  முதல் அரங்கத்தில் ஐவ்வகை நிலங்கள் கல்லணை,மலைக்கோட்டை,வரலாற்று நினைவிடங்கள் என பல்வேறு வகையான சமூக வரலாறுகளும், வாக்காளர் வாக்களிக்கும் இயந்திரம், பூமி அதிர்ச்சி ஏற்பட்டவுடன் நாம் தப்பிக்கும் வழி எலக்ட்ரானிக் […]

angusam 01/08/2016

திருச்சி மாவட்டம் துறையூர் காமராஜ்நகரை சேர்ந்தவர் ரெங்கராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் வேணி. கருணாகரன். இவர்கள் 3பேரும் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3பேர் வீட்டின் கதவுகளும் தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது 3 மர்மநபர்கள், வீட்டின் கதவுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பொதுமக்களை பார்த்ததும் 3பேரும் அங்கிருந்து தப்பியோடினர். […]

jefferywinneke 24/07/2016

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் 5-ஆவது மாநில மாநாடு திருச்சியில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளனத் தலைவரும், மாநில அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான கு. பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் 5-ஆவது மாநில மாநாடு திருச்சியில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் […]

jefferywinneke 24/07/2016

திருச்சி அருகே தண்டவாளத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவனை கொலை செய்ததாக அவர் மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர். புதுமாப்பிள்ளை சாவு கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கல்லுவிலையை சேர்ந்தவர் ஜெகன்ஸ்பாபு (வயது 31). இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் கொத்தனாராக வேலைபார்த்து வந்தார். ஜெகன்ஸ்பாபுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த அஜிதாவுக்கும் (25) கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. அஜிதா சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள […]

jefferywinneke 24/07/2016

திருச்சி: காவிரியாற்றில் புனித நீராட தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி வந்து செல்கின்றனர்.  அம்மாமண்டபம் படித்துறையில் திதி கொடுப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்ய வெளியூரில் இருந்து வரும் பக்தர்களும் காவிரியில் நீராடிவிட்டு செல்கின்றனர். திருச்சியை சுற்றியுள்ள கிராம கோயில்களின் விழாக்களுக்கு புனித நீரை காவிரியாற்றின் அம்மாமண்டபம் படித்துறையிலிருந்து எடுத்துச் செல்கின்றனர். ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையிலுள்ள புனிதமான காவிரியாற்றில் தற்போது திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்தும்,ஸ்ரீரங்கம் பகுதியிலிருந்தும் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. இது […]

jefferywinneke 23/07/2016

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து தீ விபத்து ஏற்பட்டது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடலூர் செல்லும் பேருந்தில் தீ பற்றிய உடனே பயணிகள் பத்திரமாக இறங்கினர்.

jefferywinneke 21/07/2016

காதல் திருமணம் செய்த பெண் குழந்தையுடன் தீக்குளித்து இறந்தார். மற்றொரு குழந்தை வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பியது. இது தொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையுடன் தீக்குளித்து பெண் சாவு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் கிராப்பட்டியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பஞ்சவர்ணம்(வயது 26). இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஹன்சிகா(4) என்ற பெண் […]