Trichy

jefferywinneke 19/07/2016

திருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து 7 மாதமாக குடும்பம் நடத்திய இன்ஜினியரை பெற்றோர் போலிஸ் துணையோடு மீட்டு சென்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கணேசன்(27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருச்சியில் உள்ள ஒரு சிவானி கல்லூரியில் இன்ஜினியரிங் 25 அரியரோடு படிப்பை முடித்தார். வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்தபோது அரியமங்கலம் ரயில் நகரில் ஒரு பியூட்டி பார்லருக்கு சென்று உள்ளார். அங்கு பியூட்டிசியனாக இருந்த திருநங்கை ஸ்ரீதேவி(25) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் நட்பு கிடைத்தது. இதையடுத்து […]

jefferywinneke 17/07/2016

ஸ்ரீரங்கம், ரூ.10 லட்சம் வாங்க பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. என்ஜினீயரிங் பட்டதாரி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பவானி (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது தங்கையுடன் திருச்சி அம்மா மண்டபம் புலிமண்டபம் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது […]

jefferywinneke 16/07/2016

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து திருச்சி சிவா  கூறும்போது, “பிரதமரிடம் இருந்து தமிழில் கடிதம் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு, அவரது தாய்மொழியான குஜராத்தி மொழியில் நன்றி அறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளேன். அதில், 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்ற முக்கியத்து வம் அளிப்பீர்கள் என நம்பு கிறேன். அவ்வாறு நடந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அடித்தளமாக […]

jefferywinneke 15/07/2016

தேசிய அளவில் மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர், தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய அணியும், குஜராத் மின்சார வாரிய அணியும் மோதின. இதில் 33க்கு 4 என்ற […]

jefferywinneke 15/07/2016

திருச்சி அருகே ரயில் மோதி 5 மாடுகள் பலி – 3 விரைவு ரயில்கள் பலமணி நேரம் தாமதமாக புறப்பட்டது. காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளத்திற்கு தினசரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. தினமும் மாலை காரைக்காலில் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருச்சியை கடந்து செல்லும் அதன்படி நேற்று இரவு திருச்சியை கடந்து சென்ற விரைவு ரயில் தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி ரெயில் நிலையத்திற்க்கும், திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்க்கும், இடையே விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது […]

jefferywinneke 15/07/2016

திருச்சி தென்னூர் வாமடத்தைச் சேர்ந்த சேட்டு – சுசீலா தம்பதியின் மகள் ராஜலட்சுமி (19). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். தந்தை சேட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், தாய் சுசீலா வீட்டு வேலைகள் செய்து மகளை படிக்க வைத்து வந்தார். கல்லூரியில் சேர்வதற்கு முன்பே ராஜலட்சுமி, தமிழ் வழிக்கல்வியில் சேர்க்கும்படி தாயிடம் கூறி வந்தாராம். ஆனால் அவரது விருப்பத்துக்கு மாறாக தாய் ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்தாராம். இதுதொடர்பாக மாணவி பலமுறை […]

jefferywinneke 15/07/2016

                                        அண்ணா பல்கலைக்கழகத்தில் உருக்கமான சம்பவம் பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரும் வழியில் விபத்தில் தந்தையை பறிகொ டுத்த புதுக்கோட்டை மாணவர் தாயின் அறிவுரையின்படி கலந் தாய்வில் கலந்துகொண்டார். இந்த உருக்கமான சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். சிவகங் […]

jefferywinneke 14/07/2016

திருச்சி தடகள வீரர் வருகின்ற ஆகஸ்டு 5, 2016 ல் தொடங்க உள்ள “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி. திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரரான 25 வயதான “ஆரோக்கிய ராஜீவ்” வருகின்ற “ரியோ டி ஜெனிரோ” ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் தொடரோட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார். பெங்களூருவில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முந்தைய தேசிய சாதனையான 3.2 நிமிடங்கள் என்பதை முறியடித்து, வெற்றிகரமாக […]

jefferywinneke 14/07/2016

மன்னார்குடியில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வேலைபார்த்து வந்த ஒன்பது குழந்தைத் தொழிலாளர்களை மாவட்ட சைல்டுலைன் அமைப்பினர், காவல்துறையினருடன் இணைந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை நடத்திய திடீர் ஆய்வின் போது மீட்டனர். மத்தியஅரசு அறிவித்துள்ள புன்னகைதேடி திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், காவல்துறையினர் இணைந்து மன்னார்குடி பகுதியில் கொத்தடிமையாக உள்ள குழந்தைகள் மற்றும் தொழில், வர்த்தக நிறுவனங்களில் வேலை பார்க்கும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் பணியினை இரண்டாவது நாளாக புதன்கிழமை பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு […]

jefferywinneke 14/07/2016

திருச்சியில் கணவன் தீ வைத்ததில் உடல் கருகிய பெண் இறந்தார். அவரது சாவை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ வைத்து எரிப்பு திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் என்கிற சம்சா காமராஜ் (வயது40). இவரது மனைவி கவுரி (38). காமராஜ் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. காமராஜூக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி […]

jefferywinneke 14/07/2016

திருச்சி பொன்மலை ரெயில்வே மருத்துவமனையில் ஊழியரின் கன்னத்தில் அறைந்த டாக்டரை கண்டித்து சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியரின் கன்னத்தில் அறைந்தார் திருச்சி பொன்மலையில் ரெயில்வே மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இருதய சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் டாக்டர் எழில். இவர் நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்தார். அவரிடம் மருத்துவமனை ஊழியர் ரவி ஒரு தபால் கடிதத்தில் கையெழுத்து வாங்க சென்றார். அப்போது முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் கையெழுத்திடும் இடத்தில் டாக்டர் எழில் கையெழுத்திட்டுள்ளார். […]

jefferywinneke 14/07/2016

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 60 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள தர்கா தோப்பில் 80-க்கும் அதிகமான கூரை வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வசித்து வரும் சம்சுதீன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டுக் கூரையில் புதன்கிழமை மாலை தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால், அடுத்தடுத்த வீடுகளிலும் தீ பரவியது. மேலும், வீடுகளில் இருந்த […]

jefferywinneke 13/07/2016

கால மாற்றத்தில் அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் பாரம்பர்ய கலைகளுக்கு உயிர்க்கொடுக்கும் முயற்சியில் முதற்கட்டமாக வெற்றியடைந்துள்ளார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான நடிகர் நாசர். சென்னையில் தனியார்  நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் திருச்சியைச் சேர்ந்த இளைஞரான யோகேந்திரன்  என்பவருக்கும், திருச்சி உறையூரைச் சேர்ந்த ஜெயலெட்சுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்  திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள பிரகாஷ்  திருமண மண்டபத்தில்  திருமணம் நடந்தது. வாத்தியங்கள் முழங்க, உறவுகள் புடை சூழ  தமிழகத்திலேயே முதல்முறையாக தெருக்கூத்து கலைஞர்களை வைத்து இந்த […]

jefferywinneke 13/07/2016

புதுக்கோட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது அரசு பஸ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை காரைக்குடி ஸ்ரீராம்நகரை சேர்ந்த டிரைவர் பாண்டிக்குமார் (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக காரைக்குடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இருந்தார். நேற்று மதியம் சுமார் 3 […]

jefferywinneke 13/07/2016

மணப்பாறை அருகே வங்கி மேலாளரை கண்டித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதாக 48 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அனுமதி மறுப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் மரவனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். மேலும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊழியர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர் ஆகியோரும் இந்த வங்கியில் தான் பணம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடன் […]