Trichy

angusam 24/06/2016

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி. முரளிதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதனை தொடர்ந்து ‘வாசன் எஸ்டேட்ஸ் காளிதாஸ் டி-20 கோப்பை’க்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ளது.இந்த போட்டியானது வருகிற 29-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறும். முழுக்க, முழுக்க ‘நாக்- […]

angusam 19/06/2016

மரியாதைக்குரிய திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அவர்களுக்கு வணக்கம்… திருச்சி, திருவானைக்காவல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது Hotel King Paradise… இதன் விளம்பரத்திற்காக NH வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பார்வையில் படும்படி மிக பெரிய அளவில் A/C BAR உள்ளது என்கிற விளம்பர போர்டு வைக்கப்பட்டுள்ளது… நெடுங்சாலைகளில் உள்ள ஒயின் ஷாப்புகளால் தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது என்று கூறி இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பைபாஸ் சாலைகளில் உள்ள மது கடைகளுக்கு தடை […]

angusam 05/06/2016

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் 2016 ஜீலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை உலகப் பணத்தாள்கள், நாணயங்கள். தபால்தலைகள், மாபெரும் கண்காட்சி, மற்றும் கருத்தரங்கு திருச்சிராப்பள்ளி மாநகரில் நடைபெற உள்ளது. இதன் துவக்கவிழா ஜீலை 1ம் தேதி காலை 10.00 மணி அளவில் ரம்பா ஊர்வசி திரையரங்க வளாகத்தில் உள்ள ராஜேஸ்வரி குளிர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு அடையாள சின்ன வடிவமைப்பாளர் திரு. D.உதயகுமார் சிறப்பு விருந்தினராக […]

angusam 29/01/2016

பொருட்காட்சிகளுக்கு போனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி ருசிப்பது டெல்லி அப்பளம். என்னதான் வீட்டில் அப்பளம் சுட்டு சாப்பிட்டாலும்,  டெல்லி அப்பளத்தை வாங்கி சாப்பிட்டால்தான் பொருட்காட்சிக்கு போன நிறைவு கிடைக்கும். அந்தளவுக்கு சுடச்சுட பொரித்து கொஞ்சம் மிளகாய் தூள் , உப்பு கலந்த கலவையை தூவி கொடுக்கும் அந்த அப்பளத்தை கடித்தபடியே நடந்தே பொருட்காட்சியை வலம் வருபவர்கள் ஏராளம். இப்படி எல்லோருடைய நாக்கையும் நம நமக்க வைக்கும் டெல்லி அப்பளம், திருச்சியில் நடந்துவரும் பொருட்காட்சியில் […]

tomscratch20042007 24/12/2015

துறையூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார். புலிவலத்தையடுத்த மூவானூர் எடத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (26). ஜேசிபி டிரைவர். இவருக்கும் குளித்தலை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்த நந்தினி(22) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி மீது சந்தேகப்பட்டு ரெங்கராஜ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது, நந்தினியை திட்டிவிட்டு ரெங்கராஜ் வெளியே சென்றுவிட்டார். வேதனையில் இருந்த நந்தினி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அருகில் […]

tomscratch20042007 22/12/2015

திருச்சி முள்ளிகரும்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 70). இவரது பேரன் மகேஸ்வரன் (22). நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். உய்யக்கொண்டான் திருமலை சோதனை சாவடி அருகே செல்லும் போது, அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருச்சி […]

tomscratch20042007 19/12/2015

திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் 20–க்கும் மேற்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெண் சப்–இன்ஸ்பெக்டா் அழகம்மாளுக்கு  மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கட்ராமன் போன் மூலம் அடிக்கடி ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தொடர்ந்த இந்த தொந்தரவை பெண் சப்–இன்ஸ்பெக்டர் பொறுமையாக சமாளித்து வந்துள்ளார். கடைசியில் நிலைமை மோசமாகவே தனது கணவரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இதனால் […]

angusam 13/11/2015

மாவட்ட அளவிலான டேக்வோண்டோ போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி, லால்குடி, முசிறி மற்றும் புதுகோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட புதுகோட்டை, அறந்தாங்கி, போன்ற கல்வி மாவட்டத்தில் உள்ள 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 250க்கு மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் தங்கராஜ் அவா்கள் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட டேக்வொண்டோ சங்க செயலாளா் பாலசுப்பிரமணியன் […]

angusam 12/11/2015

இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் மாநில அளவிலான சாய்வாங்டோ போட்டிகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 14, 17, மற்றும் 19வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் 250க்கு மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருநாவுக்கரசு போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 10ம்வகுப்பு மாணவன்  ஸ்ரீதர் மற்றும் 9ம்வகுப்பு மாணவன் […]

angusam 16/10/2015

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள  ஓட்டல் மற்றும் விடுதியை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அபகரித்து விட்டதாக தஞ்சை நில அபகரிப்பு போலீசில் நாகராணி என்பவர் 2010– ம் ஆண்டு புகார் செய்தார். அதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது தம்பி ராமஜெயம் மற்றும் பரணிதரன், ராஜபூபதி ஆகியோர் மீது குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு […]