வாட்ஸ் அப்

angusam 02/02/2017

காதலி பிரிந்ததால் கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார்.பின்னர் அவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் ஆதர்ஷ் ( வயது 26). அதே கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருபவர் லட்சுமி. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், சில காரணங்களுக்காக லட்சுமி தனது காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆதர்ஷ் சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று லட்சுமி வகுப்பறையில் சக மாணவிகளுடன் […]

angusam 03/10/2016

நடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளர், காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமூகமாக  தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதற்கு கோபத்துடன் பிரகாஷ்ராஜ், நான் ஒரு திரைப்பட நடிகர். இதொல்லே ராமாயணா” […]

angusam 08/08/2016

டீச்சர் என்பவர் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள், அதுவும் குழந்தைகளுக்கு கடவுளை போன்று என்று புராணங்களிலும் இதிசாகசங்களிலும் போதித்துக்கொண்டே  வந்தாலும், இந்த சினிமா எடுக்கும் இயக்குநர்கள் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக  சித்தரிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.  இந்த வகையில் இந்த முத்தம் செய்யும் இந்த காட்சியையும் பாருங்கள்.

angusam 18/07/2016

  சுவாதி போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எங்கே? சுவாதியின் மொபைல பத்தி போலிசார் பேசாததின் காரணம் என்ன? சுவாதியின் அப்பா வீட்டில் இருந்து வண்டியில் அழைத்து செல்கின்ற காட்சி காலை 6:35க்கு cctv கேமராவில் பதிவாகி உள்ளது. ராம் குமார் கொலை செய்துவிட்டு வெளியே தப்பித்து ஓடி வரும்போது (காவல்துறையினர் கூறியவை) ஒரு வீட்டில் உள்ள cctv கேமராவில் பதிவாகி உள்ள நேரம் 6:32. சுவாதியின் வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரை 18 கேமாராவில் 5 இடத்தில் ஒருவன் பைக் […]

angusam 01/07/2016

குழந்தைகள் வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்து உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் தரும் டிப்ஸ்… * பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்பது சரிதான். ஆனால், அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும். * பண வசதிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும். * ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாக்கெட் மணி கொடுங்கள். இனி, ‘அடுத்த திங்கட்கிழமைதான் பாக்கெட் மணி’ என்று தெளிவாகச் […]

angusam 01/07/2016

சமூக வலைதளங்களில் உலாவரும் ஆண், பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தரவுகள் இதோ, 1) ஆணோ,பெண்ணோ முகநூலில் உங்களது மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை தேவை இல்லாமல் பதிவிட வேண்டாம். 2) தெரியாத நபர்களின் புகைப்படத்திற்கு Like, Comment, Share பண்ண வேண்டாம். 3) ஆணோ, பெண்ணோ தெரியாத நபரிடம் தேவை இல்லாமல் சாட் செய்ய வேண்டாம். பிரச்சினையின் ஆரம்பமே இங்குதான். 4) யாரை நம்பியும் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம். யாரிடமும் நீங்கள் புகைப்படத்தை கேட்கவும் வேண்டாம். […]

angusam 01/07/2016

நான் பிலால் மாலிக் பேசுகிறேன். சென்னையில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டதும் உங்களைப் போலவே நானும் அதிர்ச்சிக்குள்ளானேன், வருத்தப்பட்டேன். ஐடி படித்துக் கொண்டிருக்கும் என் தங்கை நியாபகம் எனக்கு வந்து போனது. சுவாதி போன்ற, என் தங்கை போன்ற இன்னும் பல பெண்களின் பாதுகாப்பை இந்த அரசும் சமூகமும் எப்படி உறுதி செய்யப்போகிறது என்னும் கவலை உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது. குற்றவாளியை இன்னும் பிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டவுடன் எனக்கும் உங்களைப் […]

angusam 12/12/2015

திருச்சியில் உறையூரில் உள்ள ஜெசி மெட்ரிக்குலேசன் பள்ளியின் தலைமை ஆசிரியரும், அந்த பள்ளியின் நிர்வாகியுமான ஏசுஅடியான் தன்னிடம் படிக்கும் மாணவர்களு்க்கு கொடுக்கும் தண்டனை தான் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கையிற்றாலும், ஏறி மித்தும் மாணவர்களை அடிக்கிறார். திருச்சியில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் பெரும்பாலும்  இந்த பள்ளியில் படிக்கிறார்கள். இங்கே படிக்கும் மாணவர்களும் மிகவும் மோசமகவே நடந்து கொள்கிறார்கள். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படித்தில் நடித்த மாணவர்களில் ஒருவன் இந்த பள்ளியில் […]

angusam 30/11/2015

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே,தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து தனது 3 வது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் அதிர்ஷ்டம் ரஞ்சித்திற்கு கிடைத்தது. சென்னையில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன. அதனை அடுத்து பேங்காக்கில் படப்பிடிப்பு நடந்துமுடிந்தது. அடுத்தக்கட்டபடியாகப் படக்காட்சிகள் விரைவில் […]