அதிமுக

johnhatton61986 04/08/2016

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன். மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அதிமுக உறுதியாக உள்ளதாக கூறினார்.  தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த போது அதனை விலக்கியது திமுக தான். […]

johnhatton61986 03/08/2016

திமுக ஆட்சியில் இருட்டிலிருந்த மாநிலத்தை வெளிச்சமூட்டியது அதிமுக.அதிமுக ஆட்சியில் மாநிலம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் மின்மிகை மாநிலம் என்பது மாய தோற்றமல்ல. உண்மைத்தோற்றம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக, முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார். சட்டசபையில் இன்று எரிசக்தி துறை, மது விலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் வில்லிவாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. […]

johnhatton61986 22/07/2016

சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் என்ன பேசினாலும் அதற்கு பதிலடி கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அறிவுரை கூறியுள்ளார். அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பது எப்படி என்பது குறித்தும் அவர் அறிவுரை கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 89 எம்எல்ஏக்களுடன் வலு வான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. இந் நிலையில் 2016-17-ம் […]

johnhatton61986 20/07/2016

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா, கருணாநிதி முன்னி லையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகு தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. சில மாதங்களுக்கு முன்பு சென்னை யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி யதால் கட்சியில் இருந்து நீக்கப் பட்டார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.க ருப்பையா பேசி வந்தார். இந்நிலையில், […]

johnhatton61986 16/07/2016

சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேமுதிக , தமாகாவைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான […]

angusam 29/06/2016

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுவிலக்கு உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது. இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை […]

johnhatton61986 28/06/2016

திமுகவில் கூண்டோடு இணைப்பு இந்த கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை கலைத்துவிட்டு கூண்டோடு திமுகவுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது: 60 லட்சம் தொண்டர்கள் வாழ்வு சீரழிவு எங்களை விஜயகாந்த் கடனாளியாக்கி விட்டு தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடுத் தெருவுக்கு வந்து விட்டார்கள். தேமுதிக இருக்காது தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை. இதை இந்த […]

johnhatton61986 28/06/2016

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி ‘மக்கள் தேமுதிக’ என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் […]

angusam 24/04/2016

மதிப்பிற்குரிய தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரே ,நாட்டின் நான்காம் தூணான பத்திரிகையாளர்களே, அரசியல்வாதிகளை அரியனையில் அமர வைக்கும் அன்பான பொதுமக்களே வணக்கங்களுடன் உங்களுடையே ஒருத்தியாக வாழ்ந்து வரும் சாமானியான கயல்விழி செல்வக்குமார் எழுதிக்கொள்வது. நான் இந்து மறவர் சமூகத்தை சேர்ந்தவள்.எனது தந்தை மலைச்சாமி மல்லிகா பரமக்குடியில் ஹீரோ ஹோண்டா ஏஜென்சி சாய்ராம் மோட்டார் என்கிற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.எனது அம்மாவின் உடன் பிறந்த தம்பி ராமநாதபுரம் முன்னாள் அதிமுகவின் மாவட்ட செயளாலர், இன்று மாவட்ட எம்.ஜி.ஆர் இளைங்கர் […]

angusam 03/04/2016

ஏன் இப்படி தொடர்ச்சியாக TIMES NOW பொய்களை கூற வேண்டும் இதனால் இவர்களின் Credibilty பாதிக்கும் என்று அவர்கள் அறிய மாட்டார்களா… .. மனு வேதத்தை மட்டுமே நம்புவர்கள் மனிதனில் வேற்றுமையை ஏற்படுத்தி கொள்கையை உள்ளவர்கள் மட்டுமே எப்படியாவது அதிகார பீடத்தில் இருக்க வேண்டும் என்ற நப்பாசை தான் இவர்களுக்கு காரணம் .. இந்த சிந்தானந்ததை தூக்கி நிறுத்தும் Rashtriya Swayamsevak Sangh : RSS ஆதரவு நிலைபாட்டை Rangaraj Pandey Dinamalar – World’s No […]

angusam 15/02/2016

அதிமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி . அதனை பாஜகவுடன் ஒப்பிடக்கூடாது .– ஜவாஹிருல்லா — 1969ல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை, முந்தைய அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15-11-2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 2001ல் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தினை 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்டோர்க்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து […]

angusam 28/01/2016

சமத்துவ மக்கள் கட்சியில் 50 சதவீதம் பேர் எனது ஆதரவாளர்கள் என்றும் அதிமுக கட்சிக்கு எதிராக  கருத்துக்களை தெரிவிக்குமாறு என்னை வற்புறுத்தி வந்தார் என்றும் சரத்குமார் மீது எர்ணாவூர் நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன்  சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சி தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், எர்ணாவூர் நாராயணன், நான்குனேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் சட்ட மன்ற […]

angusam 27/01/2016

அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா […]

angusam 05/01/2016

மழை, வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றக் கூடிய வழி இருந்தும், காப்பாற்றக் கூடிய பொறுப்பு இருந்தும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத அதிமுக ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு வலியுறுத்தினார். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் நீதி விசாரணை கோரி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி எப்போது நடைபெற்றாலும், அப்போதெல்லாம் எத்தகைய கேடுகள், தீமைகள், வெள்ளப் பாழ்கள், […]

angusam 02/01/2016

யாருடனும் கூட்டணி இல்லை; எதிரிகள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை என்று ஏற்கனவே முழங்கிய ஜெயலலிதா, இந்தத் தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பேன் என்று கீழே இறங்கியிருப்பதில் இருந்தே, அ.தி.மு.க.வின் சரிவு  தெரிகிறதல்லவா? என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுக் குழுவும்; அம்மையாரின் சண்டமாருதமும்! என்ற தலைப்பில் 02.01.2016 சனிக்கிழமை கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மாதங்களுக்குப் பிறகு, ஏன் பல ஆண்டு களுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் செயற்குழுவும், பொதுக்குழுவும் நடைபெற்று முடிந்திருக்கின்றன. பொதுக்குழு என்றால் கொடிகளைக் […]