அரசு பஸ்

johnhatton61986 03/09/2016

நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மதியம் 1 மணி அளவில் புறப்பட்டது. பஸ்சை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த மோகன்பிரபு (வயது 31) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ரங்கசாமி என்பவர் இருந்தார். பஸ்சில் 18 பயணிகள் இருந்தனர். நம்பியூரை அடுத்த குப்பிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக பஸ்சை மோகன்பிரபு ரோட்டின் ஓரமாக ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் ரோட்டோரமாக இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்தது. […]

johnhatton61986 02/09/2016

ஈரோடு அருகே உள்ள குமாரபாளையம் காளி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 36). வியாபாரி. நேற்று இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (50) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பழனியில் சண்முகநதி பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த காமராஜை சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். […]

johnhatton61986 29/08/2016

மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். வாலிபர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் காளிதாஸ்(வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். திருப்பரங்குன்றம் கூடல்மலை தெரு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கார்த்திக்(25). அரசு பஸ் மோதல் இவர்கள் இருவரும், நேற்று மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை வழியாக நிலையூர் கைத்தறிநகருக்கு சென்று […]

angusam 15/11/2015

விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீத பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கேரளா மாநிலம் சென்றபோது பெண் பயணி பஸ்சில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விருதுநகரில் […]